சனிக்கிரக ஆய்வின் இறுதிக்கட்டத்தில் காசினி ஆய்வுக்கலன்

  • 24 ஏப்ரல் 2017

காசினி ஆய்வுக்கலன் தன்னையே அழித்து கொள்வதற்கான பாதையில் சனிக்கிரகத்தின் நிலாவான திதானை சுற்றியுள்ள ஈர்ப்பு சக்தியால் இயக்கப்படும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

Image caption எரல் மாய்ஸி: “சனிக்கிரகத்திற்கு அருகில் காசினியை கட்டுப்படுத்தப்படாத சுற்றுவட்டப்பாதையில் விட்டுவிட முடியாது”

சனிக்கிழமையன்று இந்த ஆய்வுக்கலன் பறந்த ஆய்வுச் சுற்றில் சனிக்கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்கும், அந்த கிரகத்தின் வளிமண்டலத்திற்கும் இடையிலான சுற்றுப்பாதையில் இது நுழைந்துள்ளது.

சனிக்கிரகத்தில் ஒரு நாளின் நீளம் எவ்வளவு மணிநேரம் என்பது பற்றியும், அந்த கிரகம் அதனுடைய சுற்றுப்பாதையில் பயணிக்க எடுத்துகொள்ளும் காலத்தை தீர்மானிக்கவும் ஆய்வு நடத்துகின்ற கடைசி வாய்ப்பை தற்போது இந்த இடைவெளியில் சுற்றிவரும் நடவடிக்கை வழங்குகிறது.

செப்டம்பரில் சனிக்கிரக மேகங்களுக்குள் இந்த ஆய்வுக்கலன் எரிந்து விழுவதில் இருந்து தப்பித்துவிட முடியாது என்பதையும் இந்த நடவடிக்கை பொருள்படுத்துகின்றது.

இந்த ஆய்வுக்கலனை தூண்டி இயக்குகின்ற கிடங்குகள் வெறுமையாகி விட்டதால், சனிக்கிரகத்தில் நடத்திய 12 ஆண்டுகால ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) தீர்மானித்துள்ளது.

செயலற்றுபோகும் செயற்கைக்கோள் சனிக்கிரகத்தின் நிலாவின் மீது மோதுவதையும், இதனால் சனிக்கிரகத்தை மாசடைய செய்யும் ஆபத்து ஏற்படுவதையும் இதனை கட்டுப்படுத்துவோரால் அனுமதிக்க முடியாது. எனவே, இந்த காஸ்சினி ஆயேவுக்கலனை பாதுகாப்பாக அழித்துவிடுவதை உத்தரவாதம் அளிக்கின்ற முறையை அவர்கள் தெரிவு செய்துள்ளனர்.

சனிக்கிரகம் : நாசாவின் புதிய படங்கள்

செவ்வாய் கிரகத்திலிருந்து வெளியேறிய காற்று மாயமானது எங்கே?

"காஸ்சின் ஆய்வுக்கலனுக்கு எரியாற்றல் இல்லாமல் போய்விட்டால், அதனை கட்டப்படுத்த முடியாமல் போய்விடும். அதனால். சனிக்கிரகத்தின் நிலாக்களான திதான் அல்லது இன்செலடஸின் மேற்பரப்பில் மோதுகின்ற வாய்ப்புக்கள் அதிகம்" என்று நாசாவின் காஸ்சினி ஆய்வு திட்டத்தின் மேலாளர் டாக்டர் ஏரல் மாஸ்ஸி தெரிவித்திருக்கிறார்.

சனிக்கிரகத்திற்கு தொலைவில் இருக்கும் மிக பெரியதொரு சுற்றுவட்டப்பாதையில் நாம் அதனை செலுத்தலாம். ஆனால், அவ்வாறு நாம் செய்ய போவதில் நெருங்கிய நம்மைகள் பெரிதாக இருக்கப்போவதில்லை என்று பிபிசியிடம் அவர் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை NASA/JPL
Image caption காசினி ஆய்வுக்கலனுக்கு எரியாற்றல் இல்லாமல் போய்விட்டால், அதனை கட்டப்படுத்த முடியாமல் போகும்

காசினி வழக்கமாக தன்னுடைய சுற்றும் பாதையை சரிசெய்து கொள்ள திதானின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி வந்துள்ளது.

சனிக்கிரகத்தின் அமைப்பை ஆய்வு செய்து கொண்டிருந்த ஆண்டுகளில், ஈரப்பதம், தூசி, புகை மற்றும் நீராவியால் மூடப்பட்ட உலகை சுற்றி 126 முறை இந்த ஆய்வுக்கலன் பறந்துள்ளது. ஒவ்வொரு முறையும் புதிய பகுதியை ஆராய்கின்ற நோக்கில் வளைகின்ற புதிய சக்தியை இது பெற்றுள்ளது.

வேற்று கிரகம் மோதியதில் உருவான நிலா: "புதிய ஆதாரம்"

2012 விண்வெளி புகைப்பட விருதுகள்

சனிக்கிழமையன்று காசினி தன்னுடைய கடைசி ஈர்ப்பு விசை "இழுவைப் பட்டை"யை தூண்டி விட்டு சனிக்கிரகத்தின் வெளிப்பகுதி ஓரத்தில் சுற்றிவரும் பாதைக்கு தன்னை மாற்றியமைத்துள்ளது. அதனுடைய உள்பகுதியை சுருக்கிக்கொண்டு, இந்த ஆய்வுக்கலனை அந்த கிரகத்தின் மேகத்திற்கு மேற்பரப்பில், 3 ஆயிரம் கிலோமீட்டருக்கு குறையாமல் மேலேயே நிலைநிறுத்துவதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த புதன்கிழமை வரை இந்த இடைவெளியிலேயே சுற்றிவரும் இந்த ஆய்வுக்கலன், ஒவ்வாரு ஆறரை நாட்களுக்கு ஒருமுறை இந்த பாதை மாற்றும் நடவடிக்கையை மீண்டும் மீண்டும் நிறைவேற்றி செப்டம்பர் 15 ஆம் தேதி சுமார் ஜிஎம்டி 10.45 மணிநேரத்தில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டுள்ள இறந்து விழும் வரை செயல்படவுள்ளது.

படத்தின் காப்புரிமை NASA/JPL-Caltech/ASI/Cornell
Image caption திதான் நிலவின் ஏரிகளும் கடல்களும் மீத்தேன், எத்தேன் மற்றும் பிற நீர்ம ஹைட்ரோகார்பன்களை உள்ளடக்கியுள்ளன

சனிக்கிழமை நடைபெற்ற இந்த பாதை மாற்றியமைத்த கடத்தலை பயன்படுத்தி, திதான் நிலவின் கடைசி, மிக நெருங்கிய சில கண்காணிப்பை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்,

பெரிய ஏரிகளாலும், மீத்தேன் கடல்களாலும் வடக்கு அட்சரேகையில் இந்த அசாதாரணமான உலகம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

அவற்றின் ஆழத்தை வரிமம் (ஸ்கேன்) செய்வதற்கும், "மேஜிக் தீவுகள்" என்று அறியப்படுவது எவற்றால் ஆனது என்று அறியவும் காஸ்சினி ஆய்வுக்கலத்திற்கு ஆணையிடப்பட்டுள்ளது, நீர்ம மேற்பரப்புகளின் மேலே நைட்ரஜன் வாயுவால் கீழிலிருந்து மேலெழும் தற்காலிக குமிழை உருவாக்குகின்ற இடங்கள் தான் "மேஜிக் தீவுகள்" என்று அழைக்கப்படுகின்றன.

மங்கள்யான் நவம்பர் 5-ம் தேதி செவ்வாய்க் கிரகம் நோக்கி ஏவப்படும்

நான்கு சூரியன்களைக் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

இது விஞ்ஞானிகளுக்கு சிறந்த தருணமாகும். திதான் பல புதிய கண்டுபிடிப்புகளை வழங்கியுள்ளது. காசினி அடுத்துவரும் சில மாதங்கள் இந்த நிலாவை பற்றிய ஆய்வை தொடர்ந்து நடத்தினாலும், அதன் மேற்பரப்பில் இருந்து 1000 கிலோமீட்டருக்குள்ளான தொலைவில் இனிமேல் காஸ்சினி செல்லப்போவதில்லை.

அதேவேளையில், சனிக்கிரகம் பற்றிய சில இக்கட்டான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வாய்ப்பை தற்போது விஞ்ஞானிகள் பெற்றிருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை NASA/JPL
Image caption பூமியின் இந்த புகைப்படத்தை காஸ்சினி ஆய்வுக்கலன் எடுத்துள்ளது. ஒரு பில்லியன் கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து தெரியும் பிரகாசமான ஒளிக்கீற்று

இந்த கிரகத்தில் ஒரு நாளின் நீளம் பற்றியதும் இதில் அடங்குகிறது. வாய்க்களால் நிறைந்திருக்கும் இந்த கிரகத்தின் தன்னைதானே சுற்றிவரும் காலத்தை துல்லியமாக காஸ்சினி இதுவரை தீர்மானிக்கவில்லை.

இந்த புதிய சுற்றுவட்டப்பாதையில் நெருக்கமான பகுதியில் இருந்து கிடைத்துள்ள தகவல் மூலம் இந்த விபரம் தெளிவாக வேண்டும்.

"10.5 மணிநேரமென நாங்கள் அறிய வந்துள்ளோம்" என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் காஸ்சினி காந்தமானியின் பிரதான ஆய்வாளர் பேராசிரியர் மைக்கேலி டௌஹார்டி தெரிவித்திருக்கிறார்.

வியாழன் கிரகத்தின் தலையில் ஒளிரும் கிரீடமாய் ஜொலிப்பது என்ன?

வியாழன் கிரக சுற்றுவட்டப்பாதையில் இணைந்தது ஜூனோ

"வட அல்லது தென் துருவத்தில் நாம் பார்ப்பதை வைத்து இது மாறுபடுகிறது. அதுபோல, கோடைக்காலம் அல்லது குளிர்காலத்தை பொறுத்தும் இது மாறுபடுகிறது".

எனவே, இந்த கிரகத்தின் உட்பகுதியை மூடியுள்ள காலநிலை மற்றும் பருவக்காலத்தோடு தொடர்புடைய வளிமண்டல அறிகுறி இருப்பது தெளிவாக தெரிகிறது" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்துளார்.

சனிக்கிரகத்தின் வட்டப்பாதை எவ்வளவு ஆண்டுகளாக உள்ளன என்பது தான் இன்னொரு முக்கிய கேள்வி.

படத்தின் காப்புரிமை NASA/JPL
Image caption சனிக்கிரகத்தின் வளிமண்டலத்தில் விழும்போது காசினி ஆய்வுக்கலன் அழிக்கபப்டும்

அவற்றின் உட்பாதையில் செல்வதன் மூலம், பனித்துகள்களின் பெருமளவை காசினியால் அளவிட முடியும்.

சனிக்கிரகத்தின் வட்டப்பாதை நாம் எதிர்பார்ப்பதைவிட மிக பெரியதாக இருந்தால், அவை மிகவும் பழமையானதாக, சனிக்கிரகத்தை போல கூட பழமையானதாக இருக்கலாம். சிறு விண்கல் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் அளவுக்கு பெரிதானதாக மற்றும் இன்று நாம் காணும் வட்டப்பாதையில் இருக்குமளவு மிகவும் பெரியதாக இருக்கலாம்" என்று அனுமானித்திரக்கிறார் நாசா பணித்திட்ட விஞ்ஞானி லின்டா ஸ்பில்கர்.

கோள்களின் அபூர்வ அணிவகுப்பு அடுத்த புதன் கிழமையிலிருந்து

செவ்வாய் கிரகத்தில் நீரோட்டங்கள் கண்டுபிடிப்பு

560 ஒளியாண்டுகள் தூரத்தில் ராட்சத பூமி

"மறுபுறம், இந்த வட்டப்பாதை பெருமளவானதாக இல்லாமல் இருந்தால், அவை மிகவும் இளமையானவை. அதாவது 100 மில்லியன் ஆண்டுகளுக்குள் உருவானவையாக இருக்கலாம்.

ஒரு நட்சத்திரம் அல்லது ஒரு நிலவு மிகவும் நெருங்கி வந்து, சனிக்கிரகத்தின் ஈர்ப்பு சக்தியால் இரண்டாக பிரிந்திருப்பதன் மூலமும் இன்று நாம் காணும் வட்டங்கள் தோன்றியிருக்கலாம்".

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்