புற்றுநோயைக் கண்டறிய புதிய வழி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புற்றுநோயை கண்டறிய புதிய வழி

  • 28 ஏப்ரல் 2017

நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு மீண்டும் அந்த நோய் தாக்கும் என்பதை ஓராண்டுக்கு முன்பே கண்டறியும் புதிய இரத்தசோதனையை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதுனர்.

ஸ்கேன் மூலம் இந்த புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பே இந்த எளிய இரத்தசோதனை மூலம் கண்டறிய முடியும்.

இதன் மூலம் நுரையீரல் புற்றுநோய் யாரையெல்லாம் மீண்டும் தாக்கும் என்பதை ஒருவருடம் முன்பே துல்லியமாக கண்டறிய முடியும்.

புற்றுநோய்களில் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்துவது நுரையீரல் புற்றுநோய் .

அது எப்படி உருவாகிறது என்பது குறித்த மிகப்பெரிய மரபணு ஆய்வின் முடிவில் இந்த புதிய இரத்தசோதனை உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிபிசியின் பிரத்யேக செய்தி.