நீரிழிவு நோயை ஸ்மார்ட்ஃபோன் மூலம் கட்டுப்படுத்த முயலும் விஞ்ஞானிகள்

நீரிழிவு நோயை ஸ்மார்ட்ஃபோன் மூலம் கட்டுப்படுத்த முயலும் விஞ்ஞானிகள்

பட மூலாதாரம், Getty Images

விலங்குகளுக்குள் இருக்கும் உயிருள்ள செல்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்த ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளனர்.

உயிரியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் இணைப்பு நீரிழிவு நோய் கொண்ட எலியின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பயன்பட்டுள்ளது.

சைன்ஸ் டிரான்ஸ்லேஷனல் மெடிசினில் விவரிக்கப்பட்டுள்ள இந்த யோசனை பல தரப்பட்ட நோய்கள் மற்றும் மருந்து சிகிச்சைகளுக்கும் பயன்படுத்த முடியும்.

மருத்துவ உலகில் புதிய சகாப்தம் படைப்பதற்கான புதிய பாதையாக இந்த முயற்சி இருக்கும் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சாதாரண செல்களை செல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக மாற்றுவது முதல்படியாகும்.

பட மூலாதாரம், J SHAO

அந்த செல்கள் மரபணு மாற்றப்பட்டவை என்பதால் இன்சுலின் போன்று ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் மருந்துகளை உற்பத்தி செய்யும்.

ஆனால், இவை எல்லாம் வெளிச்சத்தை எதிர்கொள்ளும் போதுதான் அந்த செயலாற்றலை மேற்கொள்ளும்.

இந்த தொழில்நுட்பம் ஆப்டோஜெனிடிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

சிவப்பு விளக்கின் குறிப்பிட்ட அலைவரிசைகளை எதிர்கொள்ளும் போது செல்கள் செயலூக்கம் பெறுகின்றன.

பட மூலாதாரம், J SHAO

அதன் பின் இங்கு தொழில்நுட்பம் அதன் பங்கை செய்கிறது.

கம்பியில்லா எல் இ டிகளின் தொகுப்பு மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவற்றை வைத்து இதனை கட்டுப்படுத்த முடியும்.

ஷாங்காயில் உள்ள கிழக்கு சீன நார்மல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த கருவியை எலியின் உடம்பிற்குள் பொருத்தி பின் ஸ்மார்ட்ஃபோன் டச் ஸ்கீரீன் ஒற்றை டச் மூலம் அதன் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தினார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :