பார்வையிழப்பைத் தடுக்கும் ஆராய்ச்சியில் முக்கிய வெற்றி; 10 ஆண்டுக்கு முன்பே கண்டுபிடிக்கலாம்!

நிரந்தரமாக பார்வையிழப்பு ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும் குளுகோமா என்ற கண் நீர் அழுத்த நோயினால் ஏற்படும் தாக்கத்தால் கண் பார்வை குறையத் தொடங்கும் முன்னதாகவே, அதைக் கண்டுபிடித்து சிகிச்சையளிப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை UNIVERSITY COLLEGE LONDON
Image caption விழியின் பின்புறம் தெரியும் வெள்ளைப்புள்ளிகள், குளுகோமாவால் பாதிக்கப்பட்ட விழித்திரை நரம்பு மண்டலங்கள்

இதுதொடர்பான ஆராய்ச்சியில் புதிய பரிசோதனை முறையை உருவாக்கியிருப்பதாக லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அவர்கள் உருவாக்கியிருக்கும் புதிய கண் பரிசோதனை முற மூலம், கண்பார்வை குறைபாடு தெரிய ஆரம்பிப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே குளுகோமா இருப்பதைக் கண்டுபிடித்துவிட முடியும்.

செயலிழந்து வரும் விழித்திரையில் உள்ள செல்களில் ஒட்டிக்கொள்ளும் வகையிலான ஒளிரும் வண்ண திரவத்தை பயன்படுத்தி இந்த சோதனை மேற்கொள்ளப்படும்.

படத்தின் காப்புரிமை Thinkstock

வீடியோ ரோபோ கைகள் செய்த உலகின் முதல் கண் அறுவை சிகிச்சை

பாதுகாப்பு பரிசோதனைகளில், இது 16 நபர்களுக்கு சோதித்துப் பார்க்கப்பட்டது. இன்னும் ஆழமான ஆய்வுகள் தேவைப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குளுகோமாவால் உலகம் முழுவதும் 60 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர், மூன்றில் ஒரு பகுதி பார்வையிழந்த நிலையிலேயே தங்களுக்கு பாதிப்பு இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை AFP

கண்ணுக்குள் ஏற்படும் அழுத்தம் காரணமாக ஏற்படும் மாற்றங்களால் இந்த நோய் ஏற்படுகிறது. இதனால், விழித்திரையில் உள்ள நரம்பு மண்டலங்கள் சேதமடைந்துவிடுகின்றன.

அழுத்தம் காரணமாக அந்த செல்களில் மாற்றங்கள் ஏற்பட்டு, தடிமனாகி அது எந்த வரையறைக்குள் இருக்க வேண்டுமோ அதை விட்டு வெளியே வரத் துவங்கிவிடுகின்றன.

ஒளிரும் சாயத்திரவங்கள் அவற்றைத்தான் ஒட்டிப்பிடித்துக் கொள்கின்றன. அவை, விழியின் ரத்த நாளங்களுக்குள் செலுத்தப்படுகின்றன.

பரிசோதனை முறைகள்

அதன்பிறகு, கண் சிகிச்சை நிபுணர் செய்ய வேண்டிய பணி என்னவென்றால், கண்களின் பின்பக்கத்தைப் பரிசோதிக்க வேண்டும். விழித்திரை, வெள்ளைப் புள்ளிகளுடன் ஒளிர்ந்தால், அந்த நோயாளிக்கு பிரச்சனை இருப்பதாக உறுதிப்படுத்தக் கொள்ள முடியும்.

படத்தின் காப்புரிமை AFP

புதிய சிகிச்சை முறைகள் பாதுகாப்பானவையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நடத்தப்பட்ட முதல்கட்ட பரிசோதனை முறைகளில், ஆரோக்கியமான கண்ணுக்கும் குளுகோமாவால் பாதிக்கப்பட்ட கண்ணுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

வீடியோ ரோபோ கைகள் செய்த உலகின் முதல் கண் அறுவை சிகிச்சை

குளுகோமா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே அதன் தாக்கம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், மனிதர்களுக்குப் பயன்படுத்தக்கூடிய சோதனையை முதல் முறையாக உருவாக்கியிருக்கிறோம் என்று யுசிஎல் கண் மருத்துவ நிறுவனத்தின் பேராசிரியர் ஃபிரான்செஸ்கா கார்டெய்ரோ, பிபிசியிடம் தெரிவித்தார்.

"குறிப்பாக, இந்த நோய் கண்டறிவதற்கு ஐந்து முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னதாக அடையாளம் காண்கிறோம்" என்றார்.

நினைவாற்றல் திறன் குறைவு சோதனை?

கண் நீர் அழுத்த நோயினால் ஏற்படும் பிரச்சனைக்கு தற்போதைய சிகிச்சை முறை என்பது, அதன் பாதிப்பு மேலும் ஏற்படாமல் தடுக்கவோ அல்லது வேகத்தைக் கட்டுப்படுத்தவோ முடியும். ஏற்கெனவே கண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்ய முடியாது.

"பார்வைக் குறைபாடு குறைவாக இருக்கும் கட்டத்திலேயே சிகிச்சை அளிக்கத் துவங்கினால், அதிகபட்ச வெற்றி கிடைக்கும்" என்கிறார் லண்டனில் உள்ள வெஸ்டர்ன் கண் மருத்துவமனையின் பேராசிரியர் ஃபிலிப் ப்ளூம்.

பிரைன் என்ற விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளில், இன்னும் கூடுதலான ஆய்வு தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்கள் என்பது ஆன்மாவுக்கான ஜன்னலாக மட்டுமன்றி, மூளைக்கான ஜன்னலாகவும் கருதப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Alamy

நரம்பு ரீதியாக ஏற்படும் கோளாறுகள், நரம்பு மண்டலங்களின் மூலம் தெரியவருகிறது. மனித உடல் ரீதியாகப் பார்க்கும்போது, அது மூளையின் நீட்சியாகவே கூற வேண்டும்.

நினைவுத் திறன் குறைதல், உடல் தளர்ச்சி நோய், பல்முனை விழி வெண்படல நோய் போன்றவை எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறிய, மூளையை ஸ்கேன் செய்வதை விட, கண் பரிசோதனையே குறைந்த செலவிலான பரிசோதனை முறையாக இருக்கும்.

இந்த ஆய்வின் முடிவுகள் குளுகோமாவால் பார்வையிழப்பு ஏற்பட்டவர்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கவும், பிற நரம்பு ரீதியான நோய்களால் பாதிக்கப்படுவோருக்கு ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கவும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்று இந்த ஆய்வுக்கு நிதியுதவி அளித்த வெல்கம் அறக்கட்டளையின் பெதன் ஹக்ஸ் தெரிவித்துள்ளார்.

"பார்வையிழப்பு என்பது, கடுமையான குறைபாடு. அது வாழ்க்கையின் தரத்தையும் சுதந்திரத்தையும் பாதிக்கும்."

கண்ணுக்குள் அறுவை சிகிச்சை நடத்தி பார்வையை மீட்ட ரோபோ

இதுவும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கலாம்

'26 லிட்டர் ரத்தத்தில் குரான் எழுதிய சதாம்'

'திராவிட இயக்கங்களின் வரலாற்றுத் தேவை முடியவில்லை'

திராவிட இயக்கம் - நாடு முழுமைக்கும் பங்களிக்க வேண்டிய சித்தாந்தம்

திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி : நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி, ஆனால் மதுவை நம்பிய நிதிநிலை

வடகொரிய கடலில் அமெரிக்காவின் புதிய விமானந்தாங்கிக் கப்பல்

சர்ச்சையைக் கிளப்பும் நரேந்திர மோதியின் இலங்கைப் பயணம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்