ஆஸ்திரேலியா: அதிகரிக்கும் சூரிய மின்சார உற்பத்தி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆஸ்திரேலியா: அதிகரிக்கும் சூரிய மின்னுற்பத்தி

  • 1 மே 2017

ஆஸ்திரேலியாவில் கோடைகாலத்தை ஒட்டி மின் தட்டுப்பாடு அதிகரித்துவருகிறது.

ஆனால் அதிலிருந்து தப்பிக்க விரும்பும் வீட்டு உரிமையாளர்கள் சூரியஒளி மின்சாரத்தை சேமிக்கும் பேட்டரிகளை நிறுவ ஆரம்பித்துள்ளனர்.

மின் தட்டுப்பாட்டிலிருந்து தப்ப வேண்டும் என்பதே பலரின் முதன்மையான நோக்கம். அதே சமயம் இதற்கு ஆகும் கூடுதல் செலவு முக்கிய காரணியாக திகழ்கிறது.

இன்னொரு பக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் மின் கட்டணத்தை கட்டுவதா அல்லது அதிக பணத்தை ஒரேயடியாக செலவு செய்து சூரியஒளி மின்சாரத்தை சேமிக்கும் கட்டமைப்பை நிறுவி மின்கட்டணத்திலிருந்து மொத்தமாக தப்புவதா என்றும் சிலர் கணக்கு போடுகிறார்கள்.

வேறு சிலரோ சுற்றுச்சூழலை கெடுக்காத மீளுறுவாக்கம் செய்யத்தக்க மின்சார உற்பத்திக்கு தம்மாலான பங்காக இதை நிறுவுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அதேசமயம் இதனால் வேறொரு பாதகமான பக்கவிளைவும் நிகழ்கிறது.

அதிகமான ஆஸ்திரேலியர்கள் இத்தகைய மீளுறுவாக்கவல்ல மின்சாரத்துக்கு மாற மாற, அதை செய்ய முடியாமல் அரசின் பொது மின் விநியோக கட்டமைப்பை மட்டுமே நம்பியிருப்பவர்கள், அதை பராமரிக்க ஆகும் கூடுதல் கட்டணத்தையும் சேர்த்து சுமக்க வேண்டி வரும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்