கேமெராவுடனான செயற்கை கை: பிரிட்டன் பொறியாளர்கள் சாதனை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கேமெராவுடனான செயற்கை கை: பிரிட்டன் பொறியாளர்கள் சாதனை

பிரிட்டனின் நியூகேஸல் பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியாளர்கள் புதியரக செயற்கைக் கை ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இந்தக்கையின் மேற்புறத்தில் இருக்கும் சிறு கேமெரா எதிரிலுள்ள பொருளை படம்பிடிக்க, அதன் அடிப்படையில் அதை பற்றி எடுப்பதற்குத் தேவையான அழுத்தத்தை அந்த கை தானாகவே பயன்படுத்தும்.

எல்லாமே சில நொடிகளில் நடக்கும் என்பதால் இயற்கையான கை செயற்படுவதைப்போலவே இந்த செயற்கைக் கையும் செயற்படவல்லது.

எளிமையான, செயற்படக்கூடிய இந்த செயற்கைக் கை உலகில் கையிழந்த லட்சக்கணக்கானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இதை உருவாக்கிய பொறியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த செயற்கைக் கையின் செயற்படும் விதம் குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்