ஸ்டாடின்கள் மல்டிபிள் ஸ்லெரோசிஸை குணப்படுத்துமா?

மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்ற ஆபத்துக்களை குறைப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கானோர் ஸ்டாடின் மருந்தை உட்கொள்கிறார்கள்.

ஆனால், இந்த மருந்து மல்டிபிள் ஸ்லெரோசிஸுக்கும் உதவுமா என்பதை பல மில்லியன் டாலர் செலவில் பிரிட்டனில் நடக்கும் புதிய சோதனை ஆராயவிருக்கிறது.

Multiple sclerosis என்பது மனித உடலை காக்கும் நோய் எதிர்ப்புத்தன்மை உடலின் நரம்புகளைத்தாக்கி அவற்றின் தகவல் பரிமாற்றத்திறனை பாதிக்கச் செய்வது.

அதனால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்செயற்திறன் படிப்படியாக குறையும்.

முந்தைய சிறு அளவிலான பரிசோதனைகள் ஸ்டாடின் மருந்துகள் இதை கட்டுப்படுத்துவதாக தெரிவித்திருந்தன.

ஆனால் தற்போதைய பரிசோதனைகள் விரிவானதாக இருக்கும். ஆனால் இது முடிய ஆறு ஆண்டுகளாகும் என்பதால் ஸ்டாடின் மருந்துகள் எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதை தெரிந்துகொள்ள அதுவரை அனைவரும் காத்திருக்கவேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்