அமெரிக்க ரகசிய விண்வெளி விமானம் என்ன செய்கிறது?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்க ரகசிய விண்வெளி விமானம் என்ன செய்கிறது?

  • 10 மே 2017

அமெரிக்க அரசின் எக்ஸ்-37பி விண்வெளி விமானம் விண்ணில் இரண்டு ஆண்டுகள் பயணித்தபின் சமீபத்தில் தரையில் இறங்கியுள்ளது.

ஆனால் இது விண்ணில் என்ன செய்தது என்று வெளியுலகில் யாருக்கும் எதுவும் தெரியாது.

அமெரிக்க விமானப்படையின் அதிகபட்ச ரகசிய திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த ஆளில்லா விண்வெளி விமானம் செயற்படுகிறது.

“ஆபத்தைக்குறைக்கும் பரிசோதனைகளை இது மேற்கொண்டதாக” மட்டுமே பெண்டகன் தெரிவித்திருக்கிறது.

“செயற்பாட்டு மேம்படுத்தலை அது மேற்கொண்டதாக”வும் கூறப்பட்டது.

இதற்கான செலவு எவ்வளவு என்கிற விவரம் கூட படு ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த விமானம் பூமியைச் சுற்றும் தனது முதல் பயணத்தை 2010 ஆம் ஆண்டு ஆரம்பித்தது.

இந்த விண்வெளி விமானம், நாசாவின் பழைய விண்ணோடத்தின் கால் பங்கு அளவே இருக்கிறது.

இதன் அடுத்த பயணம் இந்த ஆண்டின் இறுதியில் கனவெரெல் முனையில் ஏவப்படும் ராக்கெட்டில் துவங்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்