புத்தர் பிறந்த இடத்தில் பிக்குகளா சுவாசிக்க முடியாததற்கு என்ன காரணம்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புத்தர் பிறந்த இடத்தில் பிக்குகளால் சுவாசிக்க முடியவில்லை; ஏன்?

நேபாளத்தின் லும்பினி நகரில் தான் 2500 ஆண்டுகளுக்கு முன் புத்தர் பிறந்தார்.

புத்தர்களின் முக்கிய புனிதஸ்தலம். மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமும் கூட.

ஆனால் லும்பினியும் அங்குள்ள அருங்கலைப்பொருட்களும் மோசமான மாசால் பாதிக்கப்படுகின்றன.

அங்கு பிரார்த்திக்கும் பிக்குகள் முகமூடி அணிகிறார்கள். பார்வையாளர்கள் சுவாசிக்க சிரமப்படுகிறார்கள்.

காரணம் உள்ளூர் தொழிற்சாலைகள். இவற்றில் சில இந்த இடத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளன.

லும்பினியை உலக சுற்றுலாத்தலமாக மேம்படுத்த நேபாள அரசு விரும்புகிறது.

ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி காற்றின் மாசு பாதிப்பை குறைக்கவும் நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்