கடத்தலுக்குப் பயன்படும் ஆளில்லா விமானங்களை தடுப்பது எப்படி?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கடத்தலுக்கு பயன்படும் ஆளில்லா விமானங்கள்: தடுப்பது எப்படி?

  • 15 மே 2017

சிறைகளுக்குள் போதைமருந்துகள் உள்ளிட்ட பல பொருட்களை சட்டவிரோதமாக கடத்துவதற்கு டுரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்துவருவது, உலக அளவில் சிறை அதிகாரிகளுக்கு பெரும் பிரச்சனையாக மாறிவருகிறது.

ஆனால் அதை தடுக்கக்கூடிய பாதுகாப்புக் கட்டமைப்பு ஒன்று பிரிட்டனின் சேனல் தீவின் சிறைச்சாலையில் நிறுவப்பட்டுள்ளது.

சிறைக்குள் வரும் ஆளில்லா விமானங்களை இது தடுக்கவல்லது.

பிரிட்டன் சிறைகளுக்குள் போதைமருந்து கடத்த முயலும்போது விபத்தில் சிக்கும் ஆளில்லா விமானங்கள் மட்டுமே பிடிபடுவதால் இது எவ்வளவு பெரிய பிரச்சனையாக உருவாகியிருக்கிறது என்று தெரியவில்லை.

வானத்தில் வரும் இந்த புதிய பிரச்சனையை தடுக்கும் வழி ஒன்றை குர்ன்சே சிறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆளில்லா விமானம் பறப்பதற்கான கட்டளைகளை கடத்தும் வானலைகளை இடைமறித்து ஆளில்லா விமானம் பறப்பதை தடுத்து, அதை கிளம்பிய இடத்துக்கே திருப்பி அனுப்பும் கட்டமைப்பை அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர்.

உலகிலேயே முதல்முறையாக ஆளில்லா விமானத்தைத் தடுக்கும் வான் தடுப்பு இந்த சிறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

22 லட்சம் டாலர்கள் செலவில் மேம்படுத்தப்பட்ட சிறைப்பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு அங்கமாக இது இணைக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் செயற்படவிருக்கிறது. விமான நிலையங்கள் உள்ளிட்ட வேறு இடங்களிலும் இத்தகைய பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படும் என பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்