நிலவுக்கு ரோபோ அனுப்பும் இந்திய நிறுவனம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நிலவுக்கு ரோபோ அனுப்பும் இந்திய நிறுவனம்

நிலவுக்கு தனியார் நிறுவனங்கள் ரோபோக்களை அனுப்புவதை ஊக்குவிக்கும் நோக்கத்திலான Google Lunar XPRIZE போட்டியில் இந்த ஆண்டு கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரே இந்திய நிறுவனம் டீம் இண்டஸ்.

இந்த நிறுவனம் பெங்களூரில் இருந்து இயங்குகிறது.

இந்த போட்டியின் பரிசுத்தொகை 2 கோடி அமெரிக்கடாலர்.

இந்த போட்டியில் வெல்ல வேண்டுமானால் பங்கேற்கும் குழு தன் ரோபோவை நிலவில் வெற்றிகரமாக இறக்கவேண்டும்.

அந்த ரோபோ குறைந்தபட்சம் 500 மீட்டர் பயணித்து நிலவை ஆராய வேண்டும்.

அங்கிருந்து உயர்தர படங்களை எடுத்து பூமிக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்க வேண்டும்.

ஆனால் டீம் இண்டஸ் மிகக்குறைந்த நிதியிலேயே இதையெல்லாம் செய்ய முயல்கிறது.

இதில் வெல்வதற்கு தங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே இருக்கிறது என்கிறார் ஷீலா ரவிஷங்கர் டீம் இண்டஸ்.

தாங்கள் அனுப்பும் விண்கலன் வெடித்துச் சிதறினால் மாற்று விண்கலன் எதுவும் தம்மிடம் இல்லை என்று கூறும் ஷீலா, “முதல் முயற்சியிலேயே இதை நாங்கள் சரியாக அனுப்பி வெல்வோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

இவர்களின் ரோபோ இந்த ஆண்டு டிசம்பரில் விண்ணுக்கு ஏவப்பட இருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்