கோடையில் குழந்தைகளை குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கோடையில் குழந்தைகளை குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி?

கொளுத்தும் கோடை வெப்பத்திலிருந்து குழந்தையை பாதுகாப்பது எப்படி? சில யோசனைகளைத் தருகிறார் லியோ.

குழந்தைகள் மீது நேரடி சூரிய ஒளிபடாமல் வைத்திருங்கள். குறிப்பாக காலை 11 முதல் மாலை 3 மணி வரை.

கோடைத்தொப்பி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் அகலமான தொப்பி குழந்தைகளின் தலையை குளிர்ச்சியாக வைக்க உதவும்.

குழந்தைகளின் தள்ளுவண்டியின் மேல் வெயில்படாமல் இருக்க குடையோ, சூரிய மறைப்போ வையுங்கள்.

ஆனால் அதன்மேல் போர்வையைக்கொண்டு மூடாதீர்கள். அது வெப்பத்தை இன்னும் அதிகப்படுத்தி விடும்.

நிழலில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் விளையாட குழந்தைகளை அனுமதியுங்கள். ஆனால் கூடவே இருந்து தொடர்ந்து கண்காணியுங்கள்.

சன்கிரீமை தடவுங்கள். குழந்தைகளின் மிருதுவான சருமத்தை பாதுகாக்கவல்ல தரமான சன்கீரீமாக தேர்ந்தெடுங்கள்.

குறிப்பாக குழந்தைகளின் காதுமடல்களை மறக்காதீர்கள். அதிகம் நீரில் விளையாடினால் கூடுதலாக சன்கிரீம் தடவுங்கள்.

குழந்தைகளுக்கு குடிக்க ஏதாவது கொடுத்தபடி இருங்கள். புட்டிப்பாலுடன் ஆறவைத்த தண்ணீரும் கொடுக்கலாம்.

தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தையென்றால் அதற்கு கூடுதல் தாகமெடுக்கக்கூடும்.

ஆறுமாதங்களுக்கு மேலான குழந்தைகளுக்கு அதிகமான தண்ணீர் கலந்த பழரசமும், வீட்டில் தயாரித்த குச்சி ஐஸும் கொடுக்கலாம்.

இரவிலும் குழந்தைகளுக்கு குளிர்ச்சி தேவை. படுக்கப்போகும் முன்னான குளியலும், குழந்தைகளின் அறையில் மின்விசிறியும் தேவை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்