ஸ்மார்ட்ஃபோனை சார்ஜ் செய்ய சிறுநீர் போதும்!
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஸ்மார்ட்ஃபோனை சார்ஜ் செய்ய சிறுநீர் போதும்!

இந்த காணொளியில் பார்க்கும் கருவி சிறுநீரை மின்சாரமாக மாற்றும் திறன் படைத்தது.

மின் செயல்பாட்டு நுண்ணுயிரிகளால் நிரப்பப்பட்ட பல சிலிண்டர்களை ஒருங்கே கொண்டது இந்தக் கருவி.

பிரிஸ்டல் ரோபோடிக்ஸ் உயிரி பொறியியலாளர்களால் இது உருவாக்கப்பட்டது.

இந்த நுண்ணுயிரிகள் கழிவை சாப்பிடுகின்றன. இதுதான் அவற்றின் விருப்பமான உணவு.

நாம் வைத்திருக்கும் கழிவுநீர் மற்றும் சிறுநீரில் இருந்து, அவற்றுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்கின்றன.

துணைப்பொருளாக எலக்ட்ரான்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த எரிபொருள் பையில், 2 லிட்டர் சிறுநீர் அடைக்கப்படுகிறது.

இதிலிருந்து, இந்த நுண்ணுயிரிகள் 30 முதல் 40 மில்லிவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.

இது, ஸ்மார்ட்ஃபோன், ஒளிப் பலகைகள் அல்லது சிறப்பு சிறிய கழிப்பறைகளின் விளக்குகளை மெதுவாக சார்ஜ் செய்ய போதுமானது.

இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறும் கிளாஸ்டோன்பரி பண்டிகையில் இந்த முறையை சோதனை செய்யவுள்ளனர்

அதனால், இந்தப் பண்டிகைக்கு செல்வோர் தங்களுடைய சிறுநீரை மின்சக்தியாக மாற்றலாம்!

பிற செய்திகள்:

லண்டன் தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு 'பாக்கெட் மணியை' தானம் வழங்கிய சிறுவன்

திருமணத்திற்கு பின் மினி ஸ்கர்ட் அணியக்கூடாதா?

தேங்காய் எண்ணெய் பயன்பாடு ஆரோக்கியமானதா?

150 ஆண்டுகளாக அல்-தானி பரம்பரை கத்தாரை ஆள்வது எப்படி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்