வாழ்வதற்கு ஏற்ற 10 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

  • 20 ஜூன் 2017
படத்தின் காப்புரிமை Getty Images

பால்வெளி மண்டலத்தில், வாழ்வதற்கு தேவையான சூழல்கள் கொண்டிருக்கக்கூடிய பத்து புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியை போன்ற பிற கோள்களை கண்டறிய நாசா விஞ்ஞானிகளால் நிறுவப்பட்ட கெப்லர் விண்வெளி தொலை நோக்கியின் சமீபத்திய தகவல்களை ஆராய்ந்து பார்த்ததில், தங்களின் நட்சத்திரங்களிடமிருந்து சரியான தூரத்தில் அமைந்திருக்கும் பாறைகள் கொண்ட 10 கோள்களை கண்டறிந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நட்சத்திரத்திலிருந்து சரியான தூரத்தில் இருப்பதால் கோள்களில் நீர் திரவ நிலையிலேயே இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

பூமியளவு இருக்கும் அந்த கோள்கள் நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே, ’சிக்னஸ்’ என்னும் நட்சத்திரக் கூட்டத்தில் உள்ளன.

தற்போது வரை பால்வளி மண்டலத்தைச் சுற்றி, வாழக்கூடிய நிலைகளில் உள்ள 50 கோள்களை கெப்லர் விண்வெளி தொலைநோக்கி கண்டறிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்:

பூமியை நெருங்கும் ஆபத்து: விண்வெளிக் குப்பைகள்

சனிக்கிரக ஆய்வின் இறுதிக்கட்டத்தில் காசினி ஆய்வுக்கலன்

பிபிசியின் பிற செய்திகள்:

திருமணத்திற்கு பின் மினி ஸ்கர்ட் அணியக்கூடாதா?

பெரும்புள்ளிகளை எப்படி வீழ்த்தினார் ராம்நாத் கோவிந்த்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்