அழிவின் விளிம்பில்தேனீக்கள்; பூச்சிக்கொல்லியே பிரதான காரணம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அழிவின் விளிம்பில் தேனீக்கள்; பூச்சிக்கொல்லியே பிரதான காரணம்

தேனீக்கள் மீதான பூச்சிக்கொல்லியின் பாதிப்பு குறித்த புதிய ஆய்வின் முடிவுகளை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

உலங்கெங்கிலும் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி இரசாயனங்களின் தாக்கத்தை புரிந்துகொள்வதே இந்த ஆய்வின் நோக்கம்.

இந்த பூச்சிக்கொல்லிகள் தேனீக்களுக்கு தீங்கு விளைவிப்பதாக, இது தொடர்பாக செய்யப்பட்ட மிகப்பெரிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

நியோநிகோடினாய்ட்ஸ் என்கிற ஒருவகை பூச்சிக்கொல்லியின் தாக்கமே இதை செய்வதாக புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் விதத்தை இந்த நியோநிகோடினாய்ட்ஸ் பூச்சி மருந்து பெரிதும் மாற்றியது. பூச்சிக்கொல்லிகளை வயலில் தெளிப்பதற்கு பதில், தானிய விதைகள் இந்த இரசாயனங்களால் பூசப்பட்டு நிலத்தில் விதைக்கப்படும். அவை வளரும்போது பூச்சிக்களிடமிருந்து அந்த மருந்து பயிரை காப்பாற்றும்.

ஜெர்மனி, ஹங்கேரி மற்றும் பிரிட்டனில், சுமார் இரண்டாயிரம் ஹெக்டேர் பரப்பளவுள்ள வயல்வெளியில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஆய்வு, நியோநிகோடினாய்ட்ஸ் தேனீக்களுக்கு தீங்கு செய்வதை உறுதிசெய்துள்ளது.

நியோநிகோடினாய்ட்ஸ் பூச்சிக்கொல்லி மருந்து தேனீக்களை மட்டுமல்லாமல் வண்டுகள் உள்ளிட்ட எல்லா வகையான மகரந்தச்சேர்க்கைக்கான பூச்சிகளையும் மோசமாக பாதிப்பது முதல்முறையாக நிரூபிக்கப்பட்டிருப்பது முக்கிய கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.

உலகளாவிய மகரந்தச்சேர்க்கையாளர்களான தேனிக்கள் வேகமாக மறைந்துவருவது விஞ்ஞானிகள் மத்தியில் கவலையை தோற்றுவித்துள்ளது. காரணம் உலகின் உணவுத் தாவர மகரந்தச்சேர்க்கையின் பெரும்பகுதி தேனீக்கள் மற்றும் வண்டுகளால் நடக்கிறது. அவை அழிந்தால் பெரும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்