ஜப்பான் ஆண்களைக்கவரும் சிலிக்கன் மனைவிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜப்பான் ஆண்களை கவரும் சிலிக்கன் மனைவிகள்

காதலுக்கு கண்ணுமில்லை; கட்டுப்பாடுகளுமில்லை என்பதற்கு 45 வயது ஜப்பானியரான மசயுகி ஒசாகி இன்னுமொரு உதாரணம்.

தனது பாலியல் தோழியான சிலிக்கன் பொம்மையிடம் தான் காதலில் கிறங்கிக்கிடப்பதாக கூறுகிறார் அவர்.

“அலுவலகத்தில் நல்லநாளாக இல்லாமல் போகலாம்; பொதுவில் மோசமான நாளாகக்கூட இருக்கலாம். ஆனாலும் எனக்கு கவலையில்லை. எனக்காக இவள் கண்விழித்து எந்நேரமும் காத்திருப்பாள் என்கிற நினைப்பே பாதுகாப்பான உணர்வை தருகிறது”, என்கிறார் மசயுகி ஒசாகி.

ஜப்பான் ஆண்கள் பலரும் சிலிக்கன் காதலிகளை மோகிக்கும் போக்கு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

ஜப்பானில் ஆண்டுக்கு சுமார் 2000 பாலியல் பொம்மைகள் விற்கப்படுகின்றன. இந்த

பொம்மைகளில் ஒன்றின் விலை 6000 அமெரிக்க டாலருக்கு மேலே.

சிலர் ஒரே ஒரு பொம்மையுடன் குடும்பம் நடத்துகிறார்கள். பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட பொம்மைகளுடன் வாழ்கிறார்கள்.

சிலர் இந்த பொம்மைகளுடன் உணர்வுப்பூர்வமான பந்தத்தையும் வளர்த்துக்கொள்கிறார்கள்.

தன் வாழ்வில் இனி மனிதர்களுடன் உறவை நாடவேமாட்டேன் என்கிறார் 62 வயது செஞ்சி நகஜிமா.

ஜப்பானிய ஆண்கள் மத்தியில் அதிகரித்துவரும் தனிமையே இதற்கு காரணம் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

வேறு சிலரோ இந்த ஆண்கள் எதிர்காலத்தின் முன்னோடிகளாக இருக்கலாம் என்றும் கருதுகிறார்கள்.

பொம்மைகளை காதலிப்பது என்பது எதிர்காலத்தில் இயல்பானதாகும் என்று கூறுபவர்கள், இவர்கள் உண்மையில் எதிர்கால ஆண்களின் தற்கால பிரதிநிதிகள் என்றும் கருதுகிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்