தானியங்கி கார்கள் யுகத்தில் ஓட்டுநர் உரிமத்துக்கு முற்றுப்புள்ளியா?

கூகிள் கார் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கலிஃபோர்னியாவில் சோதனை செய்யப்படும் கூகிள் கார்.

தானியங்கி கார்கள் தற்போது மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாத ஒன்றாக தோன்றலாம், ஆனால், இனி வரும் ஆண்டுகளில் அவற்றை உங்களது அன்றாட வாழ்க்கையில் பார்க்கவோ அல்லது பயன்படுத்தவோ உள்ளீர்கள். எனவே, ஓட்டுநர் உரிமத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது மற்றும் சாலை விதிகளில் மாற்றம் கொண்டுவருவதை இது சாத்தியப்படுத்துகிறதா?

தென்-கிழக்கு லண்டனில் உள்ள கிரீன்விச் தெருக்களில் மக்களுக்கு உணவை வழங்குவதற்காக 4 மைல் வேகத்தில் ஊர்ந்து கொண்டிருக்கும் தானியங்கி சிறிய ரக வாகனங்களைக் காண்பது அசாதரணமான ஒன்று அல்ல.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியின் பெருநகர தெருக்களில் ஓட்டுநர்கள் இல்லாத ரோபட் பேருந்துகள் பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்துக் கொண்டிருக்கின்றன. இதேபோன்று, அமெரிக்காவில் உள்ள கொலொரேடோவில் 18 சக்கரங்களைக் கொண்ட டிரக் ஒன்று பியர் கேன்களை ஏற்றிக் கொண்டு நெடுஞ்சாலையில் 120 மைல் தூரத்திற்கு ஒட்டுநர் இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது.

உலகெங்கிலும் நடைபெறும் இதுபோன்ற செயல்பாடுகள் ஓட்டுநர்கள் இல்லாத கார்கள் மற்றும் இதர வாகனங்களை நமது சாலைகளுக்கு கொண்டு வருவதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு உதவி புரிகின்றன.

படத்தின் காப்புரிமை PA
Image caption தென்-கிழக்கு லண்டனில் உள்ள கிரீன்விச் தெருக்களில் இயக்கப்படும் தானியங்கி சிறிய ரக வாகனம்.

இது போன்ற திட்டங்கள் வேலை செய்யுமா என்ற கேள்விவுடன், பாதசாரிகள், மிதிவண்டி ஓட்டிகள் மற்றும் இதர ஒட்டுநர்கள் தானியங்கி வாகனங்களால் பாதிக்கப்படாமல் எவ்வாறு பாதுகாக்கப்படுவார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

கண்களின் தொடர்பற்ற உலகம்

தானியங்கி வாகனங்களின் விற்பனை தற்போது ஆயிரங்களில் உள்ளது, ஆனால் 2030-ல் இவற்றின் விற்பனை 10 மில்லியனை எட்டும் என சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், தற்போது சாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு மில்லியன் கார்களுடன் இணைத்துப் பார்த்தால் இவற்றின் எண்ணிக்கை சிறிதளவாகவே உள்ளது.

எனவே, மனிதர்களால் இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்கள் இல்லாத தானியங்கி வாகனங்கள் என இரண்டும் சாலைகளில் எந்தவித சிக்கலும் இல்லாமல் வசதியாக எவ்வாறு இயக்கப்படும் மற்றும் நடைபாதைகள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான பாதைகள் போன்றவற்றையும் வசதியாக்குவது எப்படி என்பது மிகப்பெரிய சவலாக முன்னிறுத்தப்படுகிறது.

படத்தின் காப்புரிமை PA
Image caption லண்டனில் சோதனை செய்யப்பட்ட ஓட்டுநரில்லா கார்.

மிகவும் கடினமான சவால்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பொறியாளர்கள் இன்றளவும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

பொதுவாக சாலைகளின் சந்திப்புகளோ அல்லது குறுக்கு சாலைகளோ வரும் போது, வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் ஒருவருக்கொருவர் கண் தொடர்புகள், சைகைகள் மற்றும் உள்ளுணர்வுகள் போன்றவை மூலம் சைகைகளை ஏற்படுத்தி பாதுகாப்பாக சாலையை கடப்பதுண்டு.

ஆனால், தானியங்கி வாகனங்கள் அதாவது இது போன்ற இயந்திரங்களுக்கு இது எவ்வாறு சாத்தியமாகும்.

வானிலை மாற்றங்கள் உள்ளிட்ட மற்ற சவால்களும் சென்சார்கள் போன்ற நுண்ணுணர்வு கருவிகளுக்கு இடையூறை விளைவிக்கும்.

ஒட்டுநர்கள் இல்லாத எந்தவொரு தானியங்கி வாகனமும் அவசர கால ஊர்திகளுக்கு வழி விடுவது போன்ற சந்தர்ப்பங்களில் போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு கற்றிருக்க வேண்டும்.

தற்போது, தானியங்கி வாகனங்கள் அனைத்தும் இன்னும் சோதனையில் தான் இருக்கின்றன. குறிப்பாக, எதிர்பாராத சந்தர்ப்பங்களை கையாள்வது போன்று வாகனத்தை இயக்குவதற்கு தேவையான முக்கியமானவற்றை கற்க வேண்டும்.

டெஸ்லா என்ற தானியங்கி கார் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்தது போன்ற பல்வேறு எடுத்துக்காட்டுகளும் இருக்கின்றன.


உலகெங்கிலும் உள்ள தானியங்கி வாகனங்கள்

படத்தின் காப்புரிமை BBC Sport
Image caption தானியங்கி வாகனங்களுக்கான சர்வதேச பாதுகாப்பு விதிகள் உருவாக்கப்படவில்லை
 • 2019-ம் ஆண்டில் இருந்து தானியங்கி வாகனங்களை சோதனை செய்வதற்கான திட்டங்களில் ஐக்கிய ராஜியம் இறங்கியுள்ளது.
 • தானியங்கி ரோபோ பேருந்து, சந்தைகளில் பயன்படுத்தப்படும் தானியங்கி வேன், மற்றும் தானியங்கி கார்களை ஐக்கிய ராஜியம் தற்போது பயன்படுத்தி வருகிறது.
 • சிங்கப்பூரில் ஓடிக்கொண்டிருக்கும் ஓட்டுநர் இல்லாத டாக்சிக்கள், பிட்ஸ்பர்க்கில் இயக்கப்படும் ஊபர் கார்கள் மற்றும் ஐக்கிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் ட்ரக்குகள் உள்ளிட்டவையும் இயக்கப்படுகின்றன.
 • கலிஃபோர்னியாவில் இயக்கப்படும் கூகிள் கார்கள் 5000 மைல்களை எட்டியுள்ளது.
 • ஸ்வீடனில் இயக்கப்படும் வால்வோ வாகனங்களில் உள்ள சென்சார்கள் சாலைகளைக் கடக்கும் மான்களை கண்டறிகின்றன. ஆனால், ஆஸ்திரேலியாவில் கங்காருகளைக் சென்சார்களால் கண்டறிய முடியவில்லை.
 • வேலைவாய்ப்புகளை பாதுகாக்கும் காரணத்திற்காக ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார்களை அனுமதிக்க முடியாது என இந்தியா முடிவெடுத்துள்ளது.

நூற்றுக்கணக்கான பில்லியன் மைல்கள் தேவை

பொது இடங்களில் சோதனை செய்வதற்கு சில அடிப்படை விதிகளை வகுப்பதற்கு அதிகாரிகள் முயற்சி செய்து கொண்டிருந்தாலும் அது மட்டுமே போதுமானவையாக இருக்காது.

மனிதர்கள் உண்டாக்கும் சேதங்களைக் காட்டிலும் குறைவான சேதங்களை இது போன்ற தானியங்கி வாகனங்கள் உண்டாக்கும் என்பதை நிரூபிக்க, சந்தேகங்களை நிவர்த்தி செய்ய நுற்றுக்கணக்கான பில்லியன் மைல்களை கடந்து இந்த வாகனங்கள் சோதனை செய்யப்பட வேண்டும். அதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்று ராண்ட் நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் வாதங்களை முன் வைக்கின்றனர்.

மாறாக சில சந்தர்ப்பங்களில், இது போன்ற வாகனங்கள் தொடர்ச்சியாக கற்றுக் கொண்டே இருந்தால் அவற்றை நாம் அனுமதிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

இதுவரையிலும், ஓட்டுநர்கள் இல்லாத தானியங்கி வாகனங்களுக்கான சர்வதேச பாதுகாப்பு விதிகள் உருவாக்கப்படவில்லை. ஓவ்வொரு நாடும் தனக்கேற்ப சொந்த விதிகளை உருவாக்கிக் கொள்ளும் பொறுப்பில் உள்ளன.


ஓட்டுநரில்லாத வாகனங்களால் உருவாகும் சில சாத்தியமான விளைவுகள்

 • மக்கள் தங்களது சொந்த வாகனங்களை கைவிட நேரிடும்
 • அனைத்திற்கும் ஓட்டுநரில்லாத வாகனங்களை பயன்படுத்துவது மாசுபாடு மற்றும் நெரிசலை அதிகரிக்கும்
 • குறைந்த ஊதியம் பெறுவோருக்கு ஒருவேளை இது பயனளிக்கலாம்
 • ரோபோ வாகனங்கள் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றினால், அபராதம் மூலம் வருமானம் பெற்றுவரும் நகரங்கள் அதை இழக்க நேரிடும்
 • தற்போது ஓட்டுநர்களாக பணியில் இருப்பவர்கள் வேறு வேலையை தேட நேரிடும்

ஓட்டுநர் உரிமங்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்

இந்த ஓட்டுநரில்லா வாகனங்கள், சாலையில் செல்லும்போது நெறிமுறைகளுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுமா என்ற கேள்விக்கு தெளிவற்ற பதில் கிடைப்பது மற்றொரு பிரச்சனையாகும்.

எடுத்துக்காட்டாக, ஒரு தவிர்க்கமுடியாத விபத்தின் போது ஒரு தாய் தனது குழந்தையோடு சாலையை கடந்து கொண்டிருந்தால், ஓட்டுநரில்லா வாகனம் காரினுள் இருக்கும் நான்கு பேரோடு சாலையை விட்டு விலகிச் செல்லுமா அல்லது சாலையை கடப்போரின் மீது மோதுமா?

ஏனெனில், மனிதர்கள் வாகனத்தை ஓட்டும் போது சரியான முடிவினை எடுப்பார்கள் என்று கூற முடியாவிட்டாலும், சில நொடிகளில் சரியான முடிவை எடுப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

மனிதர்களின் எவ்வித உள்ளீடுகளுமின்றி முழுமையான தானியங்கி கார்கள் உருவாகும் வரை, தயாரிப்பாளர்களால் ஸ்டீரிங் மற்றும் பிரேக்குகள் இல்லாத கார்களை உற்பத்தி செய்ய இயலாது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஓட்டுநர் உரிமங்கள் தேவைப்படாது என்ற நிலை என்றுமே உருவாகாது

எனவே, ஓட்டுநர் உரிமங்கள் தேவைப்படாது என்ற நிலை என்றுமே உருவாகாது. அதனால், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது சோர்வுடன் இருப்பது போன்ற சவால்கள் தொடரத்தான் செய்யும்.

விபத்துகளை தவிர்ப்பதற்கான சாத்தியங்களை தானியங்கி வாகனங்கள் கொண்டிருந்தாலும், தொழில்நுட்பங்கள் சரியான முறையில் இல்லை.

ஆனால், முந்தைய தவறுகளில் இருந்து நாம் கற்றுக் கொண்டால், நெரிசல், மாசுபாடு மற்றும் வேற்றுமையை குறைக்க இயலும்.

பிற செய்திகள் :

755 அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற ரஷ்ய அதிபர் ஆணை

பிறப்பு விகிதம் கடும் வீழ்ச்சி - “வேலையின்மையும், அதிக செலவும் காரணமாம்”

குஜராத்தில் கைப்பற்றப்பட்ட பெருமளவு ஹெராயின் ஆப்கனில் இருந்து வந்ததா?

இலங்கை வெலிக்கடை சிறை துப்பாக்கிச் சூடு: இறப்பு சான்றிதழ் கிடைக்காமல் அவதிப்படும் உறவினர்கள்

'ஆண்-பெண் இடையே ஊதிய பாகுபாடு வேண்டாமே'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்