நீரிழிவு நோயாளிகளின் வாழ்வை மாற்றியமைக்கவுள்ள சிகிச்சை

நீரிழிவு நோயாளிகளின் வாழ்வை மாற்றியமைக்கவுள்ள சிகிச்சை

முதலாம் வகை நீரிழிவு நோயை தடுக்கும் வகையில் மனிதர்களின் நோய் எதிர்ப்பு முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தும் புதிய சோதனை முயற்சியின் முடிவுகள் நம்பிக்கையளித்தன.

பிரிட்டனில் இருபத்தி ஏழு பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நீரிழிவு நோயை மேலும் விரிவடையாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சிகிச்சை உதவியுள்ளது.

பொதுவாக குழந்தைப் பருவத்தில் காணப்படும் இந்த வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஊசி போட்டுக்கொள்ளும் தேவை இனி இல்லாமல் போகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :