ராட்சத விண்கல் ஃப்ளாரன்ஸ் பூமிக்கு அருகே வருகிறது

  • 1 செப்டம்பர் 2017

கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் காணப்பட்ட மிகப் பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு வெகு அருகே ( சுமார் 44 லட்சம் மைல் தொலைவில்) கடந்து செல்லும் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறுகிறது.

படத்தின் காப்புரிமை NASA
Image caption புவியை நெருங்கும் பெரும் விண்கல் 'ஃப்ளாரன்ஸ்'

'ப்ளாரன்ஸ்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல் சுமார் 2.7 மைல் அளவு கொண்டது ஆனால் அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பூமிக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்காது.

மற்ற விண்கல்கள் பூமிக்கு இன்னும் அருகே வந்து சென்றிருக்கின்றன ; ஆனால் அவை எல்லாமே இந்த விண்கல்லைவிட சிறியவை என்று கணிக்கப்படுகின்றன.

சூரியனும் மற்ற கிரகங்களும் உருவானதற்குக் காரணமான சம்பவங்கள் பற்றிய தடயங்கள் இந்த விண்கற்களில் இருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

பூமி மீது விண்கல் மோதல் சாத்தியக்கூறைத் தவிர்க்க நடவடிக்கைகள்: விஞ்ஞானிகள் அழைப்பு

விண்கற்கள் குறித்து இலங்கையில் எச்சரிக்கை

டைனசோர் இனத்தை அழித்த விண்கல் பற்றிய துப்பு கிடைத்தது - விஞ்ஞானிகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
எரிந்து விழுந்த பிரகாசமான விண் கல்

பூமிக்கு வெகு அருகில் கடக்கும் நிலையில் கூட, ஃப்ளாரன்ஸ், பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரத்தைவிட சுமார் 18 மடங்கு அதிக தூரத்தில்தான் இருக்கும். இந்த விண்கல் 1981ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஃப்ளாரன்ஸ் விண்கல்தான் நாசா இது போன்ற விண்கற்களை ஆராய 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு திட்டத்தை தொடங்கியது முதல் பூமிக்கு இந்த அளவுக்கு நெருக்கமாக வரும் மிகப்பெரிய விண்கல் இதுதான் என்று நாசாவின் புவி அருகே வரும் பொருட்கள் ஆய்வு மையத்தின் நிர்வாகி , பால் சோடாஸ் ஒரு அறிக்கையில் கூறினார்.

கலிபோர்னியாவிலும் பூயெர்டோ ரிக்கோவிலும் உள்ள நிலத்தில் இருந்து இயங்கும் ராடார்களைப் பயன்படுத்தி இந்த விண்கல்லை கூர்ந்து ஆராய விஞ்ஞானிகள் திட்டமிடுகின்றனர்.

இந்த அளவுள்ள ஒரு பொருள் பூமியைத் தாக்கினால் அதன் விளைவுகள் உலகளாவிய அளவில் பெரிதாக இருக்கும்.

விண்வெளியில் பறந்து கொண்டிருக்கும் இது போன்ற ராட்சத அளவு கொண்ட பாறைகளில் சுமார் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பாறைகளைத் தாங்கள் இப்போது அடையாளம் கண்டுவிட்டதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

பிற செய்திகள்

ஹரியானா சாமியாருடன் உள்ள பெண் யார்?

திராவிட ஆட்சி - `வரலாற்றுப் பெருமிதங்களைக் கடந்த ஆய்வு தேவை`

'திராவிட இயக்கங்களின் வரலாற்றுத் தேவை முடியவில்லை'

தமிழகமெங்கும் நடைபெறும் ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம் (புகைப்படத் தொகுப்பு)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :