சிலி: நெருப்பும் பனியும் நிறைந்த புவியியல் அற்புதம்

சிலியின் வரைபடத்தை பார்த்தால், அது நீண்ட, மெல்லிய தெர்மாமீட்டரை ஒத்திருக்கிறது. அனல் வீசும் வெப்பம் மற்றும் நடுங்க வைக்கும் குளிரை கொண்ட இந்த நாட்டில் பிரதான பேச்சுமொழி ஆங்கிலம். மாறுபட்ட இரு வேறு வெப்பநிலைகளை இயற்கையாக கொண்டது சிலி.

படத்தின் காப்புரிமை BABAK TAFRESHI, TWAN/SCIENCE PHOTO LIBRARY

தென் அமெரிக்காவின் மேற்கு கரையில், ஆண்டஸ் மலைகள் மற்றும் பசிபிக் கடலுக்கும் இடையே அமைந்துள்ள சிலி, வடக்கில் பெருவையும், வடகிழக்கில் பொலிவியாவையும், கிழக்கு எல்லையாக அர்ஜெண்டினாவையும் கொண்டிருக்கிறது. தாழ்வான பாலைவனம், செழிப்பான மழைக்காடுகள் என 2,700 மைல் நீளமான நிலப்பகுதியை கொண்டுள்ளது சிலி.

தென் அமெரிக்க நிலத்தட்டுக்களின் கீழே அமைந்திருக்கும் நாஜ்கா மற்றும் அண்டார்டிக் நில அடுக்குகளும், எரிமலைகள் கொதிநிலையில் இருக்கும் பகுதியில் அமைந்துள்ள சிலி ஒரு வெப்பப் பிரதேசம்.

உலகில் அதிகமான எரிமலைகளை கொண்ட நாடுகளில் 2,000 தொடர் எரிமலைகளைக் கொண்டிருக்கும் சிலி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இங்கு, இருக்கும் 500 எரிமலைகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் உள்ளதாக நம்பப்படுகிறது.

வடக்கு சிலியில் எல் டைட்டோவில், எரிமலைகள் வெடிக்கும்போது அங்கிருக்கும் 80 வெந்நீரூற்றுகள், கொதிநிலையில் உள்ள வெந்நீரை மேல்நோக்கி தள்ளுகின்றன.

நாட்டின் மிகவும் வறட்சியான பகுதியை வடக்குப்பகுதியில் பார்க்கலாம். பூமியின் மிக உயரமான இடத்தில், துருவப் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள வறண்ட, அச்சம் விளைவிக்கக்கூடிய 'அடகாமா' பாலைவனத்தையும் பார்க்கலாம்.

இந்தப் பகுதியின் மழைப் பொழிவு ஆண்டுக்கு 15 மி.மீட்டர் மட்டும்தான். சில பருவநிலை கண்காணிப்பகங்களில் இதுவரை மழையே பதிவு செய்யப்படவில்லை.

ஆண்டெஸ் மற்றும் சிலியின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதிகளுக்கு இடையில் 600 மைல்கள் அளவுக்கு பரந்து விரிந்திருக்கிறது அடகாமா பாலைவனம்.

படத்தின் காப்புரிமை NASA/SCIENCE PHOTO LIBRARY
Image caption சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட சிலியின் மலை பனிப்பாறைகளின் புகைப்படம்.

பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களால் சூழப்பட்டிருப்பதால் இங்கு ஈரப்பதமும் அரிதே. இந்த பாலைவனத்தின் 'வாலே டி ல லுனெ', (Valle de la Lune) மற்றொரு உலகில் இருக்கும் உறைந்த உப்பு ஏரிகள், காற்றால் பாதிக்கப்படுகிற கல் மற்றும் மணல் அமைப்புகளுடன் ஒத்திருக்கிறது.

தென் அமெரிக்க பூமித்தட்டுப் பகுதியால் மேற்கு முனை அழுத்தப்படும் ஆண்டெஸ், உலகிலேயே மிக நீளமான கண்ட மலைப்பகுதியாகும். தென் அமெரிக்காவின் முதுகெலும்பு என அறியப்படும் இது, உயிர்கள்அனைத்திற்கும் தடையாக செயல்பட்டாலும், பறவைகளை மட்டும் பாதுகாக்கிறது.

அதாவது, சிலி நாட்டின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் பெரும்பாலானவை, உயர் நிலப்பகுதி முழுவதும் பயணம் செய்வதை மலைப்பகுதி தடுப்பதால் அவை இந்த நாட்டிற்கு மட்டுமே உரியவை என்ற தனித்துவமான சிறப்பை பெறுகின்றன.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜூலை தட்பவெப்பம் 25 டிகிரியாக இருப்பதால், இந்த பனிப்பொழிவு நீண்டகாலம் நிலைக்கலாம் என்று கதப்படுகிறது,

நாட்டின் தெற்குப் பகுதியை நோக்கி பயணித்தால், எரிமலை சாம்பல் மற்றும் உருகிவரும் நீரால் வளம் பெற்றிருக்கும் பசுமையான தாழ்நிலங்களை காணமுடியும். குவாணோக்கள் போன்ற பொதி ஒட்டகம், உலகின் மிகச் சிறிய மான் பியூடு போன்றவற்றிற்கு தாயகமாக விளங்குகிறது சிலி.

தெற்கு பேதகொனியன் பனிவெளியில் (ice field) இருந்து, மலைகளின் குறுக்கே பனிப்பாறை ஆறு பாய்கிறது. டோரஸ் டெல் பைன் தேசிய பூங்காவில் முடிவடையும் 40 மைல் நீளமுள்ள ப்ருக்கென் பனியாறு இவற்றில் நீளமானது.

தெற்கு எல்லைப்பகுதியில் தெற்கு பகுதி பெருங்கடலில், பனிக்கட்டியால் சேதப்படுத்தப்பட்ட மலைகள் முடிவடையும் இடம் கேப் ஹார்ன் என்று அழைக்கப்படுகிறது.

ஆழ்கடல்களாலும், சூறைக்காற்றுகளாலும், பனிப்பாறைகளாலும் இப்போதும் மாலுமிகளின் ரத்தத்தை உறைய வைக்கும் சிலி, தீயும், பனியும் என நேரெதிர் இயற்கை பரிணாமங்களை வடக்கில் இருந்து தெற்கு வரை தன்னகத்தே கொண்டுள்ளது.

வடக்கு முதல் தெற்கு வரை உண்மையாகவே நெருப்பும் பனியும் நிறைந்த நாடுதான் சிலி.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கிரீன்லாண்ட் உறைபனியின் நிறம் கருப்பாக மாறுவது ஏன்?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்