காசினி: சில மணி நேரங்களில் விழுந்து நொறுங்கப் போகிறது அமெரிக்க விண்கலன்

காணொளிக் குறிப்பு,

பிறந்த நாளில் முடிவெய்தும் காசினி: 1997 செப்டம்பர் 15 முதல் 2017 செப்டம்பர் 15 வரை

அமெரிக்கா அனுப்பிய காசினி சனி கிரக ஆய்வு விண்கலன் இன்னும் சில மணிநேரங்களில் தன்னை தானே அழித்து கொள்ளவிருக்கிறது.

நான்கு பில்லியன் செலவில் செலவில் செயல்படுத்தப்பட்ட திட்டமான காசினி விண்கலன், சனிக் கிரகத்தின் வளிமண்டலத்தை சென்றடைந்து தன்னை வலுவிழக்கச் செய்வதன் மூலம் இதுவரை சுற்றிவந்த அந்த கிரகத்தில் 13 ஆண்டுகள் நடத்திய கண்டுபிடிப்புகளை நிறைவு செய்ய இருக்கிறது.

பட மூலாதாரம், NASA/JPL

படக்குறிப்பு,

சனிக்கிரகத்தின் வளிமண்டலத்தில் விழும்போது காசினி ஆய்வுக்கலன் அழிக்கபப்டும்

மணிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வளிமண்டலத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த விண்கலம், விரைவில் சுக்கு நூறாக உடைந்து தன்னையே அழித்துக்கொள்ளும்.

காசினி விண்கலன் பூமியோடு வைத்திருக்கும் வானிலை தொடர்பை இழப்பதற்கு முன்பு வரை, சனிக்கிரகத்திலுள்ள வாயுக்களின் ரசாயன அமைப்பு பற்றிய புதிய தகவல்களை பெற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

கலிஃபோனியாவில் பசாடெனாவில் நாசா ஜெட் புரேபல்ஷன் ஆய்வகத்தில் இந்தப் பணித்திட்ட தலைமையகம் அமைந்துள்ள இடத்தின் நேரப்படி அதிகாலை 4:55 மணிக்கு பிறகு காசினி விண்கலன் தன்னை தானே அழித்துக்கொள்ளலாம்.

லாஸ் ஏஞ்சலிஸ் வட்டத்திலுள்ள நகரத்திற்கு உலக நாடுகளிலிருந்து இந்த பணித்திட்டத்திற்காக வந்துள்ள நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளுக்கு இது கவலை அளிக்கும் தருணமாக அமையும்.

சனி ஆராய்ச்சியை முடிக்கிறது காசினி விண்கலன்

காணொளிக் குறிப்பு,

சனி ஆராய்ச்சியை முடிக்கிறது கசினி விண்கலன்

முன்னாள் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி எல்லன் ஸ்டோஃபான் இந்த சனிக்கிரக ஆய்வு விண்கலத்தின் ஒரு பிரிவான ரடார் கருவி குழுவில் பணியாற்றுகிறார்.

"ஆச்சரியமூட்டும் அறிவியல் ஆய்வை நடத்தியுள்ளோம். இது தலைசிறந்த விஞ்ஞானிகள் அணி. காசினி விண்கலத்தின் ஒவ்வொரு சிறிய அறிவியல் ஆய்வு திறனையும், சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு வெளிகொணர்ந்துள்ளதால் நாம் மகிழ்சியடையலாம் என்று நம்புகிறேன். ஆனால், அடுத்து என்ன? என்று விஞ்ஞானி எல்லன் ஸ்டோஃபான் தெரிவித்திருக்கிறார்.

"நாங்கள் மீண்டும் திதானை (செறிவு மிகுந்த வளிமண்டலத்தை கொண்டுள்ள சனிக்கிரகத்தின் மிக பெரிய சந்திரன்) திரும்பவும் ஆய்வு செய்ய விரும்புகிறோம். இன்செலடஸிலை (சனிக்கிரகத்தின் 6வது பெரிய சந்திரன்) திரும்பவும் ஆய்வு செய்ய விரும்புகிறோம். சனிக்கிரகத்தின் உள்ளே இருப்பது பற்றி பல தகவல்கள் நமக்கு தெரியாது. எனவே மக்கள் சனிக்கிரக பயணத்திட்டம் பற்றி விவாதித்துள்ளனர். இன்னும் அதிக ஆய்வுகள் செய்ய வேண்டியுள்ளது என்று அவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

காசினி ஆய்வுக்கலன் அனுப்பிய சனிக்கிரக வளையத்தின் முதல் படங்கள்

காணொளிக் குறிப்பு,

காசினி ஆய்வுக்கலன் அனுப்பிய சனிக்கிரக வளையத்தின் முதல் படங்கள்

பிற செய்திகள்

சனிக்கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம்: நாசா கண்டுபிடிப்பு

காணொளிக் குறிப்பு,

சனிக்கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம்: நாசாவின் புதிய கண்டுபிடிப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :