ஒரே ஊசியில் சாத்தியமாகும் குழந்தை பருவ தடுப்பூசிகள்

தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் வழங்கக்கூடிய தடுப்பு மருந்துகளை படிப்படியாக ஒரே ஊசியில் வழங்குகின்ற தொழில்நுட்பம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஒரே ஊசியில் வழங்கக்கூடிய இந்த தடுப்பு மருந்து நுண்ணிய உறைகளில் சேமிக்கப்படுகிறது. தடுப்பூசி போட்டவுடன் தொடக்க மருந்து அளவை அது வெளிவிடும். பின்னர் குறிப்பிட்ட இடைவெளிகளில் அதே நோய் எதிர்ப்பை மேம்படுத்தும் மருந்துகளை படிப்படியாக வெளிவிடும் வகையில் இந்த பொறிமுறை அமைந்திருக்கும்.

சோதனை எலிகளில் நடத்தப்பட்ட இதற்கான தொடக்க ஆய்வுகளில் இந்த தொழில்நுட்பம் செயல்பட்டுள்ளதாக 'சைன்ஸ்' சஞ்சிகை விவரிக்கிறது.

பட மூலாதாரம், Sean Gallup/Getty Images

உலக நாடுகளிலுள்ள நோயாளிகளுக்கு இந்த தொழில்நுட்பம் உதவக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைப் பருவத்தில் வழங்கப்படும் தடுப்பூசிகள் வழக்கமாக கண்ணீரோடும், அழுகையோடும்தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அந்தப் பருவத்தில்தான் அதிக தடுப்பூகள் போடப்படுகின்றன.

குழந்தைப் பருவ தடுப்பூசிகள் விபரம்

  • 8, 12 மற்றும் 16 வாரங்களில், தொண்டை அழற்சி (Diphtheria), தசைகளை கடினமாக இறுக செய்யும் நோய் (tetanus), கக்குவான் இருமல் (whooping cough), போலியோ (polio) ஹெச்ஐபி (), ஹெபடைடிஸ் பி
  • 8, 16 வாரங்கள் மற்றும் ஒரு வயதில் நியூமகோக்கல் (Pneumococcal) நோய் தடுப்பூசி
  • 8, 16 மற்றும் ஓரு வயதில் மென் பி (Men B) தடுப்பூசி
  • ஒரு வயதில் ஹெச்ஐபி/மென் சி (Hib/Men C) தடுப்பூசி
  • நான்கு மதங்களில் ருபெல்லா தடுப்பூசி, ஒரு வயதில் தட்டம்மை தடுப்பூசி, 3 வயதில் பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி.

பட மூலாதாரம், Joe Raedle/Getty Images

எல்லா தடுப்பு மருந்துகளையும் ஒரே தடுப்பூசியில் சேர்த்து வழங்கும் வகையில், மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலைய விஞ்ஞானிகள் குழுவினர் புதிய வகையான நுண்ணிய அணுக்கூறு ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

இந்த அணுக்கூறு, நோய் தடுப்பு மருந்துகளால் நிரப்பப்பட்டு , மூடியால் இறுக்கமாக மூடப்பட்ட காஃபி கோப்பைகளின் சிறிய மாதிரியைபோல தோன்றுகின்றன.

இந்த சிறிய கோப்பைகள் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றப்படி மாற்றியமைக்கப்படலாம் என்பது இதில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அதன் மூலம் சரியான நேரத்தில் அந்த சிறு கோப்பையிலுள்ள மருந்தை வெளிவிடும் வகையில் நாம் அமைத்துகொள்ள முடியும்.

சோதனை எலிகளில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில், இந்த தடுப்பூசி போடப்பட்ட பிறகு, தடுப்பூசியாக செலுத்தப்பட்ட அணுக்கூற்றிலுள்ள சிறிய காஃபி கோப்பைகளின் மாதிரிகளில் இருந்து மருந்துகள் சரியாக 9, 20 மற்றும் 41 நாட்களில் வெளிவிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Dimas Ardian/Getty Images

நூறு நாட்களுக்கு பிறகு மருந்துகளை வெளிவிடும் அணுக்கூறுகளும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தடுப்பூசி வழங்கும் முறை இன்னும் மனிதர்களிடத்தில் சோதிக்கப்படவில்லை.

முக்கிய பங்களிப்பு

"இந்த கண்டுபிடிப்பில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்" என்று மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் பேராசிரியர் ராபர்ட் லான்கர் தெரிவித்திருக்கிறார்.

"முதல்முறையாக, தடுப்பு மருந்துகள் தனித்தனி அணுக்கூறுகளில் நிரப்பப்பட்டு வைத்திருக்கும் ஒரு மருந்து நிலையத்தையே நாம்மால் உருவாக்க முடிந்துள்ளது. இந்த அணுக்கூறுகள் ஒவ்வொன்றும் துல்லியமாக, கணிக்கக்கூடிய நேரத்தில் மருந்துகளை வெளிவிடும் வகையில் நம்மால் மாற்றி அமைத்துக்கொள்ள முடியம். இதனால், தடுப்பு மருந்துகள் பல ஏற்கெனவே நிரப்பப்பட்ருக்கு நுண்ணிய அணுக்கூறை ஒரே ஊசியில் உடலுக்குள் செலுத்தி பல்வேறு தடுப்பு மருந்துகளின் நோய் தடுப்பு திறனை குறிப்பிட்ட இடைவெளிகளில் பெற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Robert Giroux/Getty Images

"இந்த முறை, எல்லா இடங்களிலுமுள்ள நோயாளிகளிடம், குறிப்பாக, வளர்முக நாடுகளில் குறிப்பிடத்தக்க பாதிப்புக்களை ஏற்படுத்தும்" என்கிறார் பேராசிரியர் ராபர்ட் லான்கர்.

தற்போதைய இந்த ஆய்வு, மருந்துகளை மெதுவாக நீண்டநேர காலத்தில் வெளிவிடக்கூடிய முந்தைய முயற்சிகளில் இருந்து வேறுபடுகின்றனது.

இது தொடர்பான கருத்து சிறியதுதான். வழக்கமாக நோய் தடுப்பு திட்டங்களில் செய்யப்படுவதைபோல மருந்துகள் வழங்கப்பட்டு குறிப்பிட்ட இடைவெளிகளில் துல்லியமாக வெடிக்க செய்து பயன் பெறுவதாகும்.

தடுப்பு மருந்து பெற்றுகொள்வதற்கும். எல்லா தப்பூசிகளையும் ஒரே ஊசியில் வழங்குவதற்கும் இடையில் வளர்முக நாடுகளில் வேறுபாடுகள் நிலவலாம்" என்று சக விஞ்ஞானி டாக்டர் கெவின் மிக்ஹக் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவில் அதிகரிக்கும் தடுப்பூசி எதிர்ப்பு

காணொளிக் குறிப்பு,

அமெரிக்காவில் அதிகரிக்கும் தடுப்பூசி எதிர்ப்பு

இந்த செய்திகளையும் நீங்கள் விரும்பலாம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :