மூலக்கூறுகளை படமாக்கியதற்காக மூவருக்கு வேதியியல் நோபல் பரிசு

க்ரையோ - எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் படத்தின் காப்புரிமை GAVIN MURPHY/NATURE/SCIENCE PHOTO LIBRARY
Image caption க்ரையோ - எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்

உயிரியல் மூலக்கூறுகளின் படங்களை மேம்படுத்திய மூன்று விஞ்ஞானிகளுக்கு 2017 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

சாக் டியூபோஷே, ஜோவாஷிம் ஃபிராங்க், ரிச்சர்ட் ஹெண்டர்சன் ஆகியோர், 8,31,000 பவுண்டு பரிசு தொகையை பகிர்ந்துகொள்வார்கள்.

ஸ்வீடன் நாட்டின், ஸ்டாக்ஹோம் நகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன.

உயிர்ப் பொறியமைவைக் குறித்து சுலபமாக அறிந்துகொள்ள, இவர்கள் க்ரையோ - எலக்ட்ரான் நுண்ணோக்கி முறையை உருவாக்கியுள்ளனர்.

இந்த முறை, உயிர் மூலக்கூற்று கட்டமைப்புகள், நகரும் சூழலின் இடையே, அதை படமெடுக்கிறது. இதன் மூலம், இதுவரை கண்டிறாத வகையில், விஞ்ஞானிகளால், இதை உருவகப்படுத்த முடிகிறது.

பேராசிரியர் டியூபோஷே, ஸ்விசர்லாந்தில் பிறந்தவர், யோவாஹிம் ஃபிராங்க் ஜெர்மனியை சேர்ந்தவர், ரிச்சர்ட் ஹெண்டர்சன் இங்கிலாந்தின், எடின்பர்க் பகுதியை சேர்ந்தவர்.

செய்தியாளர்களிடம் தொலைபேசி மூலம் பேசிய பேராசிரியர் ஃபிராங்க் , இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடு என்பது `அளவில்லாதது` என்றார்.

மேலும், நோபல் குழு, இந்த பணி, `உயிர் வேதியலை புதிய சகாப்தத்திற்கு நகர்த்தி உள்ளது ` என்று தெரிவித்துள்ளது.

கமிட்டி தலைவர் சாரா ஸ்னோகெரூப் லின்ஸே கூறுகையில், `இனிமேல் ரகசியங்கள் எதுவும் இருக்காது. நம் உடலின் எந்த பாகத்திலும் உள்ள எந்த மூலையிலும், உடல்திரவங்களில் உள்ள மூலக்கூறுகளின் சிக்கலான விவரங்களை கூட தற்போது பார்க்க முடியும்` என்றார்.

`நம்மால் அவை எப்படி கட்டமைக்கப்பட்டது, எவ்வாறு இயங்குகிறது, எவ்வாறு ஒரு பெரிய சமூகமாகப் பணி செய்கிறது என புரிந்துகொள்ள முடியும். நாம் உயிர் வேதியியலின் புரட்சியைப் பார்க்கிறோம்`.

செல்களை தாக்கும் சால்மோனெல்லாவின் ஊசி, ஆண்டிபயோட்டிக் வீரியம் குறைவதில் புரதங்களின் பங்கு, சர்காடியன் ஒத்திசைவைத் தீர்மானிக்கும் மூலக்கூறுகளின் வடிவமைப்பு உள்ளிட்டவை இந்த ஆண்டின் மருத்துவம் மற்றும் உடற்கூறியல் நோபல் பரிசுகளுக்கான தலைப்புகள் ஆகும்.

பிரேசிலில் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறக்கும் குறைபாட்டிற்கான காரணம், சிகா வைரஸாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சந்தேகப்பட துவங்கிய நிலையில், அந்த வைரஸை, க்ரையோ - எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலமாகவே உருவகப்படுத்தினர்.

படத்தின் காப்புரிமை Purdue Uni
Image caption சிகா வைரஸின் உருவத்தை கண்டறிய க்ரையோ - எலக்ட்ரான் நுண்ணோக்கி முறை பயன்படுத்தப்பட்டது.

சில மாதங்களுக்கு பிறகு, வைரஸின் அணு அளவிலான முப்பரிமாண முறைப் படங்கள் உருவாக்கப்பட்டதால், ஆராய்ச்சியாளர்கள் அதற்கான மருந்து செயல்பட வேண்டிய பகுதிகள் குறித்த ஆராய்ச்சிக்கு உதவியாக அமைந்தது.

மூலக்கூறுகளின் மங்கலான இரு பரிமாண வடிவங்களை கூர்மையான முப்பரிமாண வடிவங்களாக மாற்றி, ஜோவாஷிம் ஃபிராங்க் இந்த தொழில்நுட்பத்தை சுலபமாக்கினார்.

சாக் டியூபோஷேனால், மூலக்கூறுகளை சுற்றி உள்ள நீரை வேகமாக குளிர்ச்சி ஆக்குவதன் மூலம், அதன் இயற்கை வடிவம் மாறாமல் பார்த்துக்கொள்ள முடிந்தது.

பிறகு, ரிச்சர்ட் ஹெண்டர்சன், இந்த தொழில்நுட்பத்தை மேலும் முன்னெடுத்து சென்று, மூலக்கூறுகளை அணுக்களின் அளவில் உருவகப்படுத்தினார்.

ரிச்சர்ட் ஹெண்டர்சன், `க்ரையோ - எலக்ட்ரான் நுண்ணோக்கியின் வெற்றிக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்பதால், இந்த துறையில் பணியாற்றும் அனைவருக்காகவும் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். மிகவும் கடினமான மேம்பாடான `உடனடியாக உறையவைக்கும் தன்மை` முறையை 1980களின் ஆரம்பித்த சாக் டியூபோஷே, இந்த முயற்சியின் முக்கிய நபராக அறியப்பட்டது, மகிழ்ச்சியாக உள்ளது` என்றார்.

அமெரிக்க இயற்பியல் சொசைட்டியின் தலைவர் ஆலிசன் கேப்பெல் கூறுகையில், `இந்த கண்டுபிடிப்பு, மூலக்கூறுகளின் கூகுள் வரைபடம் போன்றது. புரதங்கள் கொண்ட அணுக்களின் ஆழ்ந்த விவரங்களை நாம் அறிய முடியும்`.

எல்லா உயிரினங்களிலும் உள்ளதால், ஒவ்வொறு அறிவியல் துறையிலும், புரதத்தின் இயற்கையான நிலை குறித்து புரிந்துகொள்வது என்பது மிகவும் முக்கியமானது. ஒரு புகைப்படம், ஆயிரம் வார்த்தைகளுக்கு இணையானது. வாழ்வைப்பற்றி புரிந்துகொள்ளவும், புதிய நோய் நீக்கிகளின் முன்னேற்றத்தை அறியவும், விருது பெற்றவர்களின் கண்டுபிடிப்பு விலைமதிப்பில்லாதது`.

இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி தலைவர், வெங்கி ராமகிருஷ்ணன் கூறுகையில், `உயிரியல் மூலக்கூறுகளை நாம் பார்க்கும் முறையில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்துகிறது. நம்மால் அவை செயல்படுவதை பார்க்க முடியும், அவை எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பார்க்க முடியும். உயிரியல் மீதான நமது புரிதலை இது மாற்றியமைக்கிறது`.

ரிச்சர்ட் ஹெண்டர்சன், கேம்பிரிட்ஜில் உள்ள, மூலக்கூறு உயிரியிலுக்கான மருத்துவ ஆராய்ச்சி குழுவில், இருந்து நோபல் பரிசு பெரும், 15ஆவது நபர்.

படத்தின் காப்புரிமை University of Groningen
Image caption 2016இல் நோபல் பரிசுபெற்ற சிறிய இயந்திரம்

இதற்கு முன்பு, வேதியலுக்கான நோபல் பரிசு வென்றவர்கள்

2016- ஜான் பியல் சோவாஜ், ஃப்ரேசர் ஸ்டோர்டார்ட், பேர்னார்ட் ஃபேரிங்கா ஆகியோர், மூலக்கூறுகளின் அளவில் இயந்திரங்களை உருவாக்கியதற்காக பரிசை பகிர்ந்துகொண்டனர்.

2015 - மரபணுவில் உள்ள பழுது குறித்த கண்டுபிடிப்பிற்காக டூமஸ் லிண்டால், பால் மாட்ரிச் மற்றும் ஆசிஸ் சான்கர் ஆகியோர் பரிசு பெற்றனர்.

2014 - எரிக் பெட்சிக், ஸ்டெஃபன் ஹெல் மற்றும் வில்லியம் மர்னர் ஆகியோர் ஆப்டிக்கல் நுண்ணோக்கியின் பார்க்கும் திறனை மேம்படுத்தியதற்காக பெற்றனர்.

2013 - மைக்கில் லெவ்விட், மார்ட்டின் கார்பிலஸ் மற்றும் ஆரி வாஷெல் ஆகியோர், இரசாயன செய்முறைகளை, கணினி உருவகப்படுதுதல் செய்ததற்காக பெற்றனர்.

2012 - புரதங்கள் , வாழும் அணுக்களுக்கும் அதை சுற்றியுள்ள சூழலுக்கும் இடையே எவ்வாறு சமிஞ்ஞைகளை அனுப்புகின்றன என்ற கண்டுபிடிப்பிற்காக ராமர்ட் லெஃப்கோவிட்ஸ் மற்றும் பிரைன் கோபில்கா ஆகியோர் பெற்றனர்.

2011 - டன் ஷெக்ட்மேன், குவாசி கிரிஸ்டல்களின் சாத்தியமில்லாத வடிவமைப்பை கண்டறிந்ததற்காக பெற்றார்.

2010 - ரிச்சர்ட் ஹெக், ஏய்- இட்சி நெகிழீ, அகிரா சுசூக்கி ஆகியோர், கார்பன் அணுக்களின் ஒன்றினைக்கும் புதிய வழியை கண்டறிந்ததற்காக பரிசளிக்கப்பட்டனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்