போலி வாட்ஸ் ஆப் செயலியை பதிவிறக்கம் செய்து ஏமாந்த 10 லட்சம் பேர்

வாட்ஸ் அப் ஐக்கான்

பட மூலாதாரம், AFP

போலியான வாட்ஸ் ஆப் செயலி ஒன்று இருப்பதை அறிந்து, கூகுள் பிளே ஸ்டோர் அதை நீக்குவதற்கு முன்பே, அதை ஒரு மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

"Update WhatsApp Messenger" என்று பெயரிடப்பட்டிருந்த இந்த செயலி, அதன் உண்மையான நிறுவனமான வாட்ஸ் ஆப் இன்க்., உருவாக்கியது போலவே தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் தற்போது நீக்கிவிட்டது.

செயலியை உருவாக்கியவர்கள், அப்படியே வாட்ஸ்ஆப் மாதிரி இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

அதே பெயரை பயன்படுத்தியுள்ளனர். இடைவெளிகளில் மாற்றங்கள் தேவை என்பதால், இடைவெளிகள் போல தோன்றக்கூடிய சில சிறப்பு எழுத்துக்களை பயன்படுத்தியுள்ளனர்.

இந்த நுட்பமான வித்தியாசம், சாதாரண பயனாளிகளால் கண்டறிய முடியாத நிலையில் இருந்திருக்கும்.

நிஜமான வாட்ஸ் ஆப்பில், தானியங்கி புதுப்பித்தல் கொண்டுள்ள பயனாளர்களை இது பாதிக்கவில்லை.

பொய்யான தீங்கிழைக்கக்கூடிய செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அந்நிறுவனம் நீக்கி பலகாலம் ஆகியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு, அலைபேசியின் பேட்டரியை கண்காணிக்கும் செயலி போல இருந்த போலியான ஒரு செயலி, குறிப்பிட்ட தொகைக்கு, பயனாளர்களின் அலைபேசியில் இருந்து குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.

காணொளிக் குறிப்பு,

ஆரஞ்சு கூக்கள் நியூடோனியன் அற்ற திரவ வகைக்குள்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :