பதின்ம வயதினருக்கு பணத்தின் மீது அதிக நாட்டமில்லை: ஏன்?

பணப் பரிசில் போன்ற ஊக்கத்தொகைக்கு பதின்ம வயதினர் சிலர் ஏன் ஆசைப்படாமல் உள்ளனர் என்பதை வளரிளம் பருவத்தில் மூளை முதிர்ச்சி அடையாமல் இருப்பது விளக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அதிக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுக்கு அதிகபட்சமாக மன அளவிலான முயற்சிகளை எடுப்பதில் வயதுவந்தோர் சிறந்தவர்களாக உள்ளனர்.

ஆனால், பதின்ம வயதினரில் மூளை நரம்புகள் இன்னும் வளர்முக நிலையில்தான் இருக்கின்றன. அதனால், அவர்களின் குறிக்கோள்களை கையாள்வதற்கு அது அவர்களுக்கு கடினமாக அமைகிறது என்று அமெரிக்க உளவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பணத்தை வைத்து மாணவர்களின் தர நிலைகளை மேம்படுத்தும் முயற்சிகள் கலவையான வெற்றியை வழங்கியுள்ளன.

'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு, வளரிளம் பருவம் முழுவதும் மூளை நரம்புகள் பல்வேறு பகுதிகளோடு இணைக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது. இது அதிக ஊக்கத் தொகை கிடைப்பதை நோக்கிய அவர்களின் செயல்பாடுகளில் பதின்ம வயதினரின் திறன்களை பாதிக்கிறது.

ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், ரத்த ஓட்டத்தோடு தொடர்புடைய மாற்றங்களை கண்டறிவதன் மூலம் மூளையின் செயல்பாடுகளை அளவிடுகின்ற 'செயல்பாட்டு காந்த அதிர்வு உருவரை” நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.

கணினி விளையாட்டு ஒன்றை விளையாடுகிறபோது, 13 முதல் 20 வயது வரையான இளைஞர்களின் மூளை செயல்பாடுகள் ஸ்கேன் செய்யப்பட்டன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மூளையும் இணைப்புகளும்.

விளையாடுகிறபோது, சரியான பதில்களுக்கு ஒரு டாலர் பெறுவது அல்லது தவறான பதில்களுக்கு 50 சென்ட் இழப்பு என்று அதிக பணத்திற்காகவும், குறைவான தொகையாக 20 டாலர் சம்பாதிப்பது அல்லது 10 சென்ட் இழப்பதற்காகவும் அவர்கள் விளையாடினர்.

இந்தத் தொகை அதிகமாக இருக்கின்றபோது, வளரிளம் பருவத்தினர் தங்களுடைய செயல்திறனை அதிகரிக்க முடிந்தது என்று இந்த ஆய்வை வழிநடத்திய கேட்டி இன்செல் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இளம் வளரிளம் பருவத்தினர் குறைவான ஊக்கத்தொகை கிடைக்கும் விளையாட்டுக்களை போலவே, அதிக தொகை கிடைக்கும் நிலைகளிலும் குறைவான செயல்திறனோடுதான் விளையாடினர்.

வளரிளம் பருவம் முழுவதும் மூளையின் நரம்புகள் இணைக்கப்படுவது தொடர்ந்து வளர்ந்து கொண்டிருப்பதை இந்த முடிவுகள் காட்டுவதாக அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பதின்ம வயதில் பங்குபெறும் ஊக்கமூட்டும் போட்டிகள் முழுவதும் மூளை இணைப்பை நன்றாகவே சரி செய்வதாக பொருள்படுகிறது. இது உயர் மதிப்புடைய குறிக்கோளை நோக்கி முயற்சி எடுக்கிறபோது நன்றாகவே செயல்படுபவர்களாக அவர்களை மாற்றுகிறது.

வளர்ச்சியடையும் மூளையின் வேறுபட்ட பகுதிகள் அவற்றின் இணைப்புகளை உருவாக்கிக்கொள்ள பல ஆண்டுகள் எடுப்பதை கடந்த கால ஆய்வுகள் காட்டுகின்றன.

திட்டமிடல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அனுதாபம் போன்ற விஷயங்களுக்கு பொறுப்பான முன்மண்டை புறணி என்கிற பிரிஃபிரன்டால் கார்டெக்ஸ்தான் மூளையின் பாகங்களிலேயே கடைசியாக முதிர்ச்சி அடைவதாகும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்