வருத்தமளிக்கும் காணொளிகள்: மன்னிப்பு கேட்ட யூடியூப் நிறுவனம்

வருத்தமளிக்கும் காணொளிகள்: மன்னிப்பு கேட்ட யூடியூப் நிறுவனம் படத்தின் காப்புரிமை Sean Gallup

யூடியூப் கிட்ஸ் செயலியில் பல்வேறு கவலைப்படத்தக்க காணொளிகள் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் ''அவற்றுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள்'' என யூடியூப் தெரிவித்துள்ளது.

பிபிசி நியூஸ்ரவுண்ட் யூடியூப் கிட்ஸ் செயலியில் வரக்கூடிய பல காணொளிகள் குழந்தைகளுக்கு உகந்தது அல்ல என கண்டறிந்தது. எப்படி கத்தியை கூர்மையாக்குவது போன்ற காணொளிகள் அவற்றில் இருந்தன.

யூடியூப் கிட்ஸ் செயலியில் என்னென்ன காணொளிகள் தோன்றவேண்டும் என மனிதர்கள் பொறுப்பாளர்களாக இருந்து முடிவு செய்வதற்கு பதிலாக அல்காரிதம் பயன்படுத்தப்படுவதற்கு விமர்சனங்கள் எழுந்தன.

படத்தின் காப்புரிமை YouTube

2015- ஆம் ஆண்டு இரண்டு குழந்தை பாதுகாப்பு குழுக்கள் யூடியூப் கிட்ஸ் செயலியில் கவலைப்படத்தக்க காணொளிகள் வருவது குறித்து புகார் அளித்தன.

குழந்தைகள் பொருத்தமற்ற காணொளிகளை பார்ப்பதை தடுக்க தாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என யூடியூப் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட யூடியூப் கிட்ஸ்

பிபிசி நியூஸ்ரவுண்ட் ஐந்து குழந்தைகளை கூகுளின் கேட்டி ஓ டோனோவனை சந்திக்க ஏற்பாடு செய்தது. யூடியூபின் பிரதான வலைதளம் மற்றும் செயலியில் கவலைப்படத்தக்க காணொளிகள் காட்டப்படுவது குறித்து அவர்கள் பேசினார்கள்.

ரத்தத்துடன் கிளவுன்கள் உள்ள புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள காணொளிகள், பயமுறுத்தும் விளம்பரங்கள் மற்றும் கதவுக்கு அருகே யாரோ ஒருவர் இருக்கிறார் என சொல்லும் செய்திகள் உள்ளிட்ட காணொளிகள் அவற்றில் உள்ளன.

இந்த காணொளிகளால் அசௌகரியம் அல்லது எதாவது மனக்காயங்கள் இருந்தால் அவற்றுக்காக மிக மிக மிக வருந்துகிறேன் என ஓ டோனோவன் தெரிவித்துள்ளார்.

'' நாங்கள் குழந்தைகளுக்காக ஒரு முழுமையான தளத்தை யூடியூப் கிட்ஸ் என்ற பெயரில் உருவாக்கினோம். அங்கே சிறந்த உள்ளடக்கம் கொண்ட காணொளிகள் மற்றும் குழந்தைகள் அதிகம் விரும்பும் காணொளிகள் ஆகியவை குழந்தைகளுக்காக மட்டுமே இடம்பெற்றுள்ளன'' என அவர் தெரிவித்தார்.

ஆனால் பல்வேறு பொறுத்தமற்ற காணொளிகள் இருப்பதை கண்டறிந்ததை நியூஸ்ரவுண்ட் அங்கே வெளிப்படுத்தியது. மிக்கி மவுஸ் கதாபாத்திரங்கள் துப்பாக்கியோடு இருப்பது மற்றும் குழந்தைகள் கதாபாத்திரங்கள் காயமடையும் வகையிலான காணொளிகள் உள்ளிட்டவை அதில் இருந்தன.

பொருத்தமற்ற காணொளிகளை எப்படி தவிர்ப்பது?

'' சரியான கருவிகளை உருவாக்குவதில் நாங்கள் கணிசமான முதலீட்டை கொண்டிருக்கிறோம். ஆகவே கவலைப்படத்தக்க உள்ளடக்கம் இருந்தால் மக்கள் எதிர்ப்பு கொடியிடலாம். அவற்றை நாங்கள் மிக விரைவாக மதிப்பாய்வுக்கு உள்ளாக்குவோம். நாங்கள் மெஷின் லேர்னிங் மூலம் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் கொண்டவற்றை அடையாளம் காணும் பணியை துவங்கியிருக்கிறோம். அவை அடையாளம் கண்ட பின்னர் தானாக மதிப்பாய்வு செய்யப்படும்'' என நியூஸ்ரவுண்டிடம் யூடியூப் தெரிவித்தது.

தனது தளத்தில் தோன்றும் பொருத்தமற்ற காணொளிகளை தவிர்க்க வெவ்வேறு வகையான செயல்முறையை கொண்டிருப்பதாக யூடியூப் தெரிவித்துள்ளது.

மிக அதிகளவிலான உள்ளடக்கத்தை பரிசோதிக்க வேண்டியதிருக்கிறதா என நியூஸ்ரவுண்ட் கேட்டது. யூடியூப் எப்போதும் திறந்த மேடையாகவே இருக்கும் என கூகுள் கூறியிருக்கிறது. ''அதில் உள்ளடக்கங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதும் அது நேரலைக்கு வந்துவிடுவதே உண்மையான சவால்'' என யூடியூப் தெரிவித்திருக்கிறது.

'' இங்கு சமநிலையை கையாள்வது கடினமானது. இங்கே சூழ்நிலை கடினமானதாக இருக்கிறது ஏனெனில் செயல்முறையில் மிக விரைவாக அனைத்து விஷயங்களும் நடந்து முடிந்துவிடுகிறது'' என நியூஸ்ரவுண்டிடம் யூடியூப் தெரிவித்துள்ளது.

யூடியூப் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் படி, மூன்றில் ஒரு இணையதள பயன்பாட்டாளர் யூடியூபை பயன்படுத்துகிறார். அந்த பயனர்களால் தினமும் பில்லியன் நேர காணொளிகள் பார்க்கப்படுகின்றன.

யூடியூப் கிட்ஸ் செயலியில் குழந்தைகளுக்கு காட்டப்படும் காணொளிகள் முன்னதாகவே சோதனை செய்யப்பட வேண்டும் என்பதற்கான பொறுப்பு யூடியூபுக்கு இருக்கிறதா என நியூஸ்ரவுண்ட் கேட்டது.

''உலகம் முழுவதும் இருந்து வரும் சேகரிப்புகள் எல்லாம் அங்கே இருக்கின்றன. போட்டிகளுக்கு மத்தியில் குறிப்பிட்ட தளம் தப்பித்து நிலைத்து வெற்றியடையவேண்டும் என்பதை உறுதிப்படுத்த எங்களுக்கு பொறுப்பு இருக்கிறது'' என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்