ஹைப்பர்லூப்: புனே- மும்பை இடையே 149 கிமீ துரத்தை கடக்க 25 நிமிடங்களே

எதிர்கால ஹைப்பர்லூப் ரயில் போக்குவரத்து அமைப்பை இந்தியாவில் அறிமுகம் செய்ய பிரிட்டனை சேர்ந்த பில்லினியர் ரிச்சர்ட் பிரான்சன் விரும்புகிறார்.

புனே- மும்பை நகரங்களுக்கு இடையிலான தூரத்தை 25 நிமிடங்களில் செல்லும் வழிப்பாதையை கட்டியமைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் ரிச்சர்ட் பிரான்சன் தொடக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த பாதை அமைக்கப்படும் பட்சத்தில் இந்த இரு நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து நேரம் பெருமளவு குறைந்துவிடும்.

ஹைப்பர்லூப் ரயில் திட்டம் இன்னும் ஒரு திட்ட அடிப்படையிலேயே அமைந்திருக்கும் பட்சத்தில் இது சாத்தியமாகுமா என்று பிபிசியின் சமீர் ஹஸ்மி ரிச்சர்ட் பிரான்சனிடம் கேட்டார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :