5 தனித்தனி நோய்களே நீரிழிவு – புதிய ஆய்வு

இரண்டு வகைகளை விட அதிக பிரிவுகள் நீரிழிவு நோய் இருக்க முடியுமா? படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இரண்டு வகைகளை விட அதிக பிரிவுகள் நீரிழிவு நோய் இருக்க முடியுமா?

நீரிழிவு என்பது 5 தனித்தனி நோய்களால் உருவாகுவது என்றும் ஒவ்வொரு வடிவத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ரத்தத்தில் கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை அளவு இருப்பதைதான் நீரிழிவு என்று கூறுகின்றனர். இது பொதுவாக வகை 1, வகை 2 என இரு பிரிவாக பிரிக்கப்படுகிறது.

ஆனால், நீரிழிவுக்காக மருந்து எடுத்துக்கொள்வோரின் நிலை மிகவும் சிக்கலாக இருப்பதாக ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

எதிர்காலத்தில் நீரிழிவுக்கு வழங்கப்படும் சிகிச்சை பற்றி தற்போதைய ஆய்வு அறிவித்திருக்கிறது என்று கூறுகின்ற நிபுணர்கள், தற்போது வழங்கப்படும் சிகிச்சைகளில் ஏற்படும் மாற்றங்கள் உடனடியாக நிகழப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.

உலக அளவில் வயதுவந்த 11 பேரில் ஒருவரை பாதிக்கின்ற நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு, உறுப்பு நீக்கம் ஆகியவற்றுக்கான ஆபத்துக்களை அதிகரிக்கிறது.

வகை 1 நீரிழிவு, நோய் எதிர்ப்பு அமைப்பு தொடர்புடைய நோயாகும். பிரிட்டனில் உள்ள சூழ்நிலையில் சுமார் 10 சதவீத மக்களை இது பாதிக்கிறது.

இது உடலில் இன்சுலின் சுரக்கின்ற பீட்டா செல்களை தாக்குகின்றது. எனவே, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கான ஹார்மோன் சுரக்காமல் போய்விடுகிறது.

வகை 2 நீரிழிவு மோசமான உணவு பழக்கத்தால் ஏற்படும் நோயாகும். உடலிலுள்ள கொழுப்பு இன்சுலின் செயல்படுவதை பாதிக்க செய்கிறது.

ஸ்வீடனிலுள்ள லுன்ட் பல்கலைக்கழக நீரிழிவு மையமும், ஃபின்லாந்தின் மூலக்கூறு மருத்துவ கழகமும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், 14 ஆயிரத்து 775 நோயாளிகள், அவர்களின் ரத்த பரிசோதனை விபரங்களோடு பரிசீலனை செய்யப்பட்டுள்ளனர்.

"த லான்செட் நீரிழிவு மற்றும் அகசுரப்பியல்" சஞ்சிகையில் வெளியாகியுள்ள இந்த ஆய்வின் முடிவுகள், நீரிழிவு நோயாளிகளை 5 வேறுபட்ட குழுவினராக வகைப்படுத்தி காட்டுகின்றன.

நீரிழிவு நோயாளிகளின் வாழ்வை மாற்றியமைக்கவுள்ள சிகிச்சை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நீரிழிவு நோயாளிகளின் வாழ்வை மாற்றியமைக்கவுள்ள சிகிச்சை
  • குழு 1 - கடும் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு எதிரான இந்த நீரிழிவு, பரவலாக பாரம்பரிய வகை 1 நீரிழிவு வகையை சார்ந்ததாக உள்ளது. ஆரோக்கமாக தோன்றுகின்ற இளம் பருவத்தில் இருப்போரை இது பாதிக்கிறது. இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத நிலையை இந்த வகை நீரிழிவு ஏற்படுத்துகிறது.
  • குழு 2 - கடுமையான இன்சுலின் குறைபாடு உடைய நீரிழிவு நோயாளிகள் தொடக்கத்தில் குழு 1 போலவே தோற்றமளித்தனர். இவர்கள் இளமையாக இருந்தனர். ஆரோக்கியமான எடையை கொண்டிருந்தனர். இன்சுலின் சுரப்பதில் சிக்கல் இருந்தது. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தியில் எந்த குறைபாடும் இவர்களுக்கு இல்லை.
  • குழு 3 - சுரக்கப்படும் இன்சுலினுக்கு கடும் எதிர்ப்புதன்மையுடைய நீரிழிவு நோயாளிகள். இவர்கள் பொதுவாக அதிக எடையுடையவர்களாக இருந்தனர். இன்சுலின் சுரந்தது. ஆனால், சுரக்கின்ற இன்சுலினை அவர்களின் உடல் சரியாக செயல்பட அனுமதிக்கவில்லை.
  • குழு 4 - மிதமான உடல் பருமன் தொடர்பான இந்த நீரிழிவு அளவுக்கு மிஞ்சிய உடல் எடையுடையோரிடம் முக்கியமாக காணப்பட்டது. ஆனால், குழு 3-இல் உள்ளதை விட இயல்பான மிகவும் நெருக்கமானதாக இது இருக்கிறது
  • குழு 5 - நடு வயது தெடர்பான இந்த நீரிழிவு, நோயாளிகள் பிற குழுவினரை விட குறிப்பிடும்படியாக வயது அதிகமானதாக இருந்தபோது சில அறிகுறிகள் தோன்றின. இவர்களின் நோய் மிதமானதாக இருந்தது.
படத்தின் காப்புரிமை Getty Images

"மிகவும் துல்லியமான மருந்தை நோக்கி எடுத்து வைக்கின்ற சரியான காலடிக்கு இந்த ஆய்வு மிகவும் முக்கியமானது" என்று இந்த ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் லெய்ஃப் குரூப் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

"சிறந்த நிலையில் நோயை கண்டறிய இந்த ஆய்வு பயன்படுத்தப்படுகிறது. மேம்பட்ட நல்ல சிகிச்சையை நாம் எதிர்பார்க்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

இந்த 5 குழுக்களில், இரண்டு மிதமானவற்றை விட 3 கடுமையான வடிவங்களுக்கு நாம் மிகவும் தீவிர சிகிச்சை அளிக்க முடியும்.

நோய் எதிர்ப்பு அமைப்புக்கு எதிரான நிலை இல்லாததால், குழு 2 நோயாளிகள் தற்போது இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளாக வகைப்படுத்தப்படுகின்றனர்.

இருப்பினும், அவர்கள் அதிக குண்டாக இருப்பதைவிட பீட்டா செல்களின் குறைபாட்டால் இவர்களுக்கு நோய் உருவாகியிருக்கலாம் என்று இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

இதனால், தற்போது வனை 1ஆக வரையறுக்கப்பட்டுள்ள மிதமான நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகின்ற நெருங்கிய அளவிலான சிகிச்சை வழங்கலாம்.

பார்வை இழப்பு ஏற்படுவதற்கு அதிக ஆபத்து நிறைந்தவர்களாக குழு 2 இருப்போர் உள்ளனர். ஆனால், குழு 3இல் இருப்போர் சிறுநீரக நோய் ஏற்படுவதற்கு அதிக ஆபத்தை எதிர்நோக்குகின்றனர். எனவே, மேம்படுத்தப்பட்ட பரிசோதனையால் இதில் சில குழுவினர் பயன்பெறலாம்.

சிறந்த வகைப்பாடு

லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியின் ஆலோசகரும், சிகிச்சை ஆய்வாளருமான டாக்டர் வின்டோரியா சலேம், "முதலாம் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டும் மிகவும் துல்லியமான வகைப்படுத்தப்ட்ட அமைப்பு கிடையாது என்பதை பெருமளவு சிறப்பு நிபுணர்கள் அறிவர்" என்று கூறியுள்ளார்.

"எதிர்காலத்தில் நீரிழிவை நாம் நோயாக எவ்வாறு பார்க்கப்போகிறோம் என்பது பற்றியது இது" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இந்த ஆய்வு இன்றைய நடைமுறையை உடனடியாக மாற்ற போவதில்லை என்ற எச்சரிக்கையையும் அவர் அளித்துள்ளார்.

இந்த ஆய்வு ஸ்காண்டினேவிய மக்களிடம் மட்டுமே நடத்தப்பட்ட ஆய்வாகும். தெற்கு ஆசிய மக்களிடம் நீரிழிவு அதிக ஆபத்து ஏற்படுத்துவது போன்று உலக அளவில் நீரிழிவின் பண்புகள் வித்தியாசமாகிறது.

"இன்னும் அறியப்படாதவைகள் அதிகம் உள்ளன. உலக அளவில் காணப்படும் மரபணு மற்றும் உள்ளூர் சுற்றுச்சூழல் பாதிப்புக்களை பொறுத்து 500 துணை குழுக்கள் இருக்கலாம் என்று டாக்டர் சலேம் கூறியுள்ளார்.

"இந்த விஞ்ஞானிகளின் ஆய்வில் 5 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை உயரலாம்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

வார்விக் மருத்துவ கல்லூரியின் மருத்துவ பேராசிரியர் சுதேஸ் குமார், "இது முதலாவது காலடிதான். இந்த குழுவினருக்கு வேறுபட்ட வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டால் சிறந்த பயன் கிடைக்குமா என்பது பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோயை புரிந்துகொள்வது ஒவ்வொரு வகையினருக்கு தனித்தனி சிகிச்சைகள் வழங்குவதற்கு உதவலாம். நீரிழிவு தொடர்பான சிக்கல்களை இந்த சிகிச்சைமுறை எதிர்காலத்தில் குறைக்கலாம் என்று பிரிட்டனின் நீரிழிவு அறக்கட்டளையை சேர்ந்த டாக்டர் எமிலி பர்ன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

"இந்த ஆய்வு இரண்டாவது வகை நீரிழிவை மேலும் பிரிந்து அதிக விபரங்களோடு காட்டுகின்ற நம்பதகுந்த முயற்சியை எடுத்திருக்கிறது. ஆனால், இந்த நிலையில் வாழ்கின்ற மக்களில் இது எவ்வாறு காணப்படுகிறது என்பதை புரிவதற்கு முன்னால், இந்த துணை குழுக்களை பற்றி நாம் இன்னும் அதிகம் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :