விந்தணுக்கள் குறைவான ஆண்களுக்கு உடல் பருமன் வாய்ப்பு அதிகம்?

விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் ஆண்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதே சமயம், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது வளர்சிதை பிரச்னைக்கு நேரடி காரணம் என்று இந்த ஆய்வு சொல்லவில்லை. ஆனால், இரண்டுக்கும் தொடர்பு உள்ளது என்றே இந்தாய்வு கூறுகிறது.

இத்தாலியில் குழந்தைபேறு இல்லாமல் இருக்கும் ஆண்களை பரிசோதித்ததில், குழந்தை பேறு என்பதையெல்லாம் கடந்து, உடல் நல பிரச்னைகளுக்கு விந்தணு முக்கிய காரணியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தை பேறு

சரியாக 5177 ஆண்களை சோதித்ததில், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் 20 சதவீத ஆண்கள் குண்டாக இருக்கிறார்கள். உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு கெட்ட கொழுப்பு இருக்கிறது என்று இந்தாய்வு முடிவு சொல்கிறது.

விந்தணுக்களின் எண்ணிக்கை, விந்தணுக்களின் தரம் ஆகியவை குழந்தை பேற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தை இல்லாமல் இருக்கும் மூன்றில் ஒருவருக்கு விந்தணுக்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பது முக்கிய காரணமாக இருக்கிறது.

டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன்

உடல்நலன் தொடர்பான இந்த பிரச்னைகளில் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவாக இருப்பது முக்கியத் தொடர்பு வகிக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

மருத்துவர் ஃபெர்லின் கூறுகையில் மலட்டுத்தன்மைக்காக சிகிச்சை கொடுக்கப்படும் ஆண்களுக்கு முறையான உடல் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என்பதை இந்த ஆய்வு முடிவு காட்டுகிறது என்றார்.

"குழந்தை பெற்று கொள்வதில் சிரமத்தை சந்திக்கும் ஆண்களுக்கு அதற்கான காரணம் குறித்து சரியாக கண்டறியப்பட வேண்டும். மேலும் கருத்தரித்தல் தொடர்பான விஷயத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் முதன்மை உடல் நல மருத்துவர்கள் பார்வையில் தொடர்ந்து சிகிச்சையில் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு நோய் வாய்ப்படும் வாய்ப்பும் இறக்கும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது." என்றார் ஃபர்லின்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்