செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட படங்களில் 'ஒளி கீற்று' போல தோன்றிய பூமி

செவ்வாய் கிரகத்தில் 2000 நாட்கள் படத்தின் காப்புரிமை NASA/JPL-CALTECH/MSSS

செவ்வாய் கிரகத்தில் பயணித்து வந்த நாசாவின் கியூரியாசிட்டி என்ற ரோவர் 2000 நாட்களை நிறைவு செய்துள்ளது. அந்த ரோவரின் சாதனைகளில் சிலவற்றை கியூரியாசிட்டி அறிவியல் குழு தேர்வு செய்து அனுப்பியுள்ளது.

படத்தின் காப்புரிமை NASA/JPL-CALTECH/MSSS

தொலைவில் உலகம்:

விண்வெளி அறிவியல் வரலாற்றில், பல இடங்களிலிருந்து பூமியை புகைப்படம் எடுத்துள்ளனர். ஆனால், இந்த ரோவரின் உதவியுடன் மாச்காமில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் என்பது, செவ்வாயின் இரவு வானில் பூமி ஒரு ஒளி போல மிளிர்வதாக தெரிகிறது. தினமும், விஞ்ஞானிகள் 100 மில்லியன் மைல்களுக்கு அப்பாலிலிருந்து இந்த சிவப்பு கிரகம் குறித்து கியூரியாசிட்டி ரோவர் மூலம் அறிகின்றனர்.

படத்தின் காப்புரிமை NASA/JPL-CALTECH/MSSS

நதி கூழாங்கற்கள்:

இந்த ரோவரை இயக்கத் தொடங்கியதும், நாங்கள் கூழாங்கற்கள் நிறைந்த பகுதியை பார்த்தோம். அதன் உருளையான உருவம் என்பது, பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆழமற்ற நதியொன்றில் இருந்து உருவானது என்பதை அறிந்தோம்.

மாஸ்ட்கேம் எடுத்த ஒரு புகைப்படத்தில் கூழாங்கற்களை மிகவும் அருகாமையில் பார்க்க முடிந்தது. நம் எண்ணங்களுக்கு மிகவும் எதிர்மறையாக, இந்த கற்களின் ஓடுகள் கருப்பாகவும், பழங்காலத்தை சேர்ந்ததாகவும் இல்லை. இவை, தங்களின் கலவைகளிலும், கணிமங்களிலும் மிகவும் பரிமாணம் அடைந்திருந்தன. இந்த கூழாங்கற்கள் என்பது, செவ்வாய்கிரகத்தின் மேல் ஓடுகள் என்பது எவ்வாறு உருவாகி இருக்கும் என்ற நமது எண்ணங்களை மீண்டும் சிந்திக்கும் அளவு அமைந்திருந்தது.

படத்தின் காப்புரிமை NASA/JPL-CALTECH/LANL/CNES/IRAP/LPGNANTES/CNRS/IAS

காய்ந்த களிமண்கள்:

கேல் பகுதிகளில் இருந்த பாறைகள் குறித்த மிகவும் தெளிவான ஆய்வை கியூரியாசிட்டி நிகழ்த்தியது. இதற்காக, தனது செம்கேம் லேசர் மற்றும் தொலைநோக்கியை அது பயன்படுத்தியது. எஸ்.ஓ.எல் 1555இல், பழங்கால களிமண் மாறைகளையும், சல்ஃபேல்ட் வழித்தடங்களையும் நாங்கள் பார்த்தோம்.

பூமியில், நதிகள் தனது பகுதியை சுற்றியுள்ள இடங்களில் வறண்டு, வெடிப்புகள் ஏற்படுவதை நம்மால் பார்க்க முடியும். செவ்வாயில் உள்ள கேல் ஏரியிலும் அதே நிலையே உள்ளது. பாறைகள் மீது எங்கெல்லாம் நாம் லேசர் கதிர்களை செலுத்தினோமோ, அங்கெல்லாம் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதை நம்மால் பார்க்க முடியும். இவ்வாறு வரும்போது, ஒளியைப்போன்ற கதிர்கள் வருவதால், இந்த களிமண் பாறைகளின் கலவை என்ன என்பதை நமக்கு அவை தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை NASA/JPL-CALTECH

மேகங்கள்:

இந்த புகைப்படங்கள் எஸ்.ஓ.எல் 1971இல், கியூரியாசிட்டியில் உள்ள கேமராவின் உதவியுடன் எடுக்கப்பட்ட்து. செவ்வாய் கிரகத்தை பொருத்தவரை எப்போதாவது நம்மால் சில மேகங்கள் விண்ணில் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த புகைப்படங்களில் சில வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலமாக இவற்றின் வித்தியாசத்தை நம்மால் காண முடியும். இந்த மூன்று புகைப்படங்களும் செவ்வாயில் கிட்ட்த்தட்ட 12 நிமிடங்கள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

படத்தின் காப்புரிமை Image copyrightNASA/JPL-CALTECH/MSSS

செல்ஃபி:

கியூரியாசிட்டி ரோவர், தான் எடுத்த பல செல்ஃபி புகைப்படங்களால் தனது இன்ஸ்டாகிராம் பகுதியில் பெயர் வாங்கியது. இவை, அந்த ரோவரின் பெருமையை காட்டிக்கொள்ளும் விஷயமாக மட்டும் இல்லாமல், ரோவரின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை குழுவினர் அறிந்துகொள்ளவும் உதவியது. கியூரியாசிட்டியின் சுய புகைப்படங்கள் அனைத்தும், அதன் கைகளில் இருந்த கருவியான எம்.ஏ.ஹெச்.எல்.ஐ மூலமாக எடுக்கப்பட்டவை.

இந்த புகைப்படத்தில், ரோவரின் மீதுள்ள கெம்கேம் தொலைநோக்கியையும், மாஸ்ட்கேம் கேமராக்களையும் பார்க்க முடிகிறது. தரையிலும், அப்போதுதான் கியூரியாசிட்டி துளையிட்டதையும் அதனால் வெளிவந்துள்ள துகள்களையும் பார்க்க முடிகிறது.

செய்தி தொகுப்பு: ஜான் பிரிட்ஜஸ், அஷ்வின் வசவடா, சூசேன் ஷ்வென்சர், சஞ்சீவ் குப்தா, ஸ்டீவ் பான்ஹாம், கேண்டீஸ் பெட்ஃப்ரோட், கிரிஸ்டீனா ஸ்மித் மற்றும் தி எம்.எஸ்.எல் குழு.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்