தனது முட்டைகளை டைனோசர் அடைகாத்தது எப்படி? - சுவாரஸ்ய ஆய்வு

நீங்கள் 1500 கிலோ கணக்கும் போது உங்களால் எப்படி கூட்டில் அமர முடியும்? கடினம் தானே? பின் எப்படி ஆயிரம் கிலோவிற்கு மேல் கணக்கும் டைனோசர்கள் தங்கள் கூட்டில் அமர்ந்து முட்டைகளை அடைக்காத்து இருக்கும்?

இதற்கான விடை அண்மைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவுகள் மிக சுவாரஸ்யமான ஒன்றாக உள்ளது.

கடினமான ஆய்வு

ஆசியா மற்றும் வட அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு ஆய்வாளர்கள் ஒன்றிணைந்த சர்வதேச ஆய்வு குழு ஒன்று இது குறித்து ஆய்வு ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

டைனோசரின் குழந்தை வளர்ப்பு பண்பு குறித்து ஆய்வு செய்வது என்பது சுலபமான ஒன்றாக இருப்பதில்லை. ஏனெனில், அதன் படிமங்கள் என்பது ஒப்பீட்டு அளவில் மிகவும் குறைவானதாக இருக்கிறது. ஆனால், ஒரு நீண்ட முயற்சி மட்டும் ஆய்வுக்குப் பின் ஒவிராப்டோரோசர் என்று அழைக்கப்படும் டைனோசரின் ஒரு வகையின் அடைகாக்கும் தன்மை கண்டறியபட்டுள்ளது.

கூடும், முட்டையும்

இந்த டைனோசர்கள் நடுவில் கொஞ்சம் இடம் விட்டு ட்டமாக தங்களது முட்டைகளை கூட்டின் உள்ளே அடுக்கி வைத்து, அந்த வட்டத்தின் நடுவே அமரும்.

அந்த மைய வெளியானது டைனோசரின் எடையை தாங்கும். அதே நேரம், உடல் எடையினால் முட்டை உடையாமல், வெப்பமானது அந்த முட்டையினில்படும். இப்படியாக தனது முட்டைகளை டைனோசர் அடைகாத்து இருக்கிறது என்கிறது ஆய்வு.

இந்த ஆய்வில் பங்கேற்ற கல்கரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த டர்லா, "இது ஒரு சுவாரஸ்யமான டைனோசர் குழு" என்கிறார்.

பெரும்பாலான டைனோசர்கள் நூறு கிலோ அல்லது அதற்கு குறைவான எடை உடையவை. பரவை போன்ற உடலும், குறிப்பாக கிளி போன்ற மண்டை ஓடும் உடையவை என்கிறார் அவர்.

நீல - பச்சை நிற முட்டைகள்

இந்த வகை டைனோசரின் முட்டைகள் நீலம் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும் என்று முன்பே பல ஆய்வுகள் வலியுறுத்தி உள்ளன. பெரிய முட்டையின் எடையே 6 கிலோ வரை இருக்கும்.

இந்த ஆய்வினை `எளிமையானது மற்றும் நேர்த்தியானது` என்று கருத்து தெரிவித்துள்ளார் இயற்கை அறிவியலுக்கான வட கரோலினா அருங்காட்சியகத்தை சேர்ந்த ஆய்வாளர் லிண்ட்சே.

இந்த ஆய்வானது டைனோசர் எப்படி பரிணமித்தது என்று புரிந்துக் கொள்ள உதவும் என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: