பச்சிளம் பருவத்திலேயே நீரழிவு நோயைத் தடுக்க பிரிட்டனில் மருத்துவர்கள் புது ஆய்வு

  • மிஷேல் ராபர்ட்ஸ்
  • பிபிசி

முதல் வகை நீரழிவு நோய் வர அதிக வாய்ப்புள்ள குழந்தைகளுக்கு அதை வராமல் தடுக்க வழி இருக்கலாம் என நிபுணர்கள் நம்புகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images

பச்சிளம் பருவத்திலிருந்தே இன்சுலின் பவுடரை அளிப்பது மூலம் அவர்களின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்து ஆயுள் கால பாதுகாப்பை அளிப்பதே நிபுணர்களின் இலக்காக உள்ளது.

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹார்மோனே இன்சுலின் எனப்படுகிறது. சர்க்கரை அளவு நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு கட்டுக்கடங்காமல் பெருகக் கூடியது

பெர்க்‌ஷயர், பக்கிங்ஹாம்ஷயர், மில்டன் கெயின்ஸ், ஆக்ஸ்ஃபோர்டு ஷயர் ஆகிய இடங்களில் உள்ள மகப்பேறு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகள் சர்க்கரை நோய் தடுப்புக்கான பரிசோதனை முயற்சியில் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்ப பட்டார்கள்.

குழந்தைக்கு ஆறாவது மாதம் ஆகும்போதிருந்து மூன்று வயது ஆகும் வரை தினமும் இன்சுலின் பவுடர் தருமாறு அந்த கர்ப்பிணிகளிடம் முன்கூட்டியே அறிவுறுத்தப்படுகிறது.

அக்குழந்தைகளின் ஆரோக்கியத்தை ஆராய்ச்சியாளர் குழு அவ்வப்போது சென்று பார்த்துவரும். இந்த சோதனையில் பங்குபெறும் சரிபாதி குழந்தைகளுக்கு உண்மையான இன்சுலின் தரப்பட்டது. மறுபாதி குழந்தைகளுக்கு எந்த மருந்தும் இல்லாத சாதாரண பவுடர் வழங்கப்பட்டது.

சோதனை முடியும் வரை யாருக்கு எது தரப்பட்டது என யாருக்குமே தெரியாமல் வைக்கப்பட்டது. சோதனையின் முடிவுகள் பாதிக்கப்படாமல் இருக்க இவ்வாறு செய்யப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

முதல் வகை சர்க்கரை நோய் ஒவ்வொரு நூறு குழந்தைக்கும் ஒரு குழந்தையிடம் முதல் வகை சர்க்கரை நோயை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ள மரபணுக்கள் இருப்பதாக நம்பப்பட்டது.

பிறந்த குழந்தைகளின் மரபணுவில் வேறு எதாவது கோளாறுகள் இருக்கிறதா என கண்டறிய ரத்தப்பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 30 ஆயிரம் குழந்தைகளிடம் இது போன்ற சோதனை நடத்தி தகுதி வாய்ந்த ஒருவரை தேர்வு செய்ய விரும்பினர்.

இன்சுலின் பவுடர் அளிப்பதால் முதல் வகை சர்க்கரை நோய் ஏற்படுவதை தடுக்க முடியும் என நம்பப்பட்டது. தற்போதைய நிலையில் முதல் வகை நீரழிவு நோயை தடுக்க எந்த வழியும் இல்லை.

மெட்ஃபார்மின் என்ற மருந்தை குழந்தைப் பருவத்தில் அளிப்பதால் நீரழிவு நோயை தடுக்க முடியும் என்ற யூகத்தில் இன்னொரு சாரார் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

பட மூலாதாரம், Getty Images

முதல் வகை நீரழிவு நோய் என்பது ஒரு முறை வந்தால் ஆயுளுக்கும் தொடரக்கூடிய ஒரு குறைபாடாகும். இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு கணையம் இன்சுலினை சுரக்காத நிலை இருக்கும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கடுமையாக அதிகரிக்கும். இதன் விளைவாக கண் பார்வை இழப்பு, இதய நோய்கள், பக்கவாதம் என பல பிரச்னைகள் நீண்டகால அளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குழந்தைகளையும் அவர் குடும்பத்தையும் நீரழிவு நோய் ஏற்படாமல் தடுத்து அதனால் பார்வை இழப்பு, சிறுநீரக நோய், இதய நோய் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அற்புதமான ஒன்று என கூறுகிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தில் இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் குழுவின் தலைவர் டாக்டர் மேத்யூ ஸ்நேப்.

இந்த ஆய்வுகளுக்கு தேவையான நிதியை சுகாதார ஆராய்ச்சிக்கான தேசிய மையம் வழங்குகிறது. இது தவிர JDRF தொண்டு நிறுவனம், Diabetes UK என்ற அமைப்பு, வெல்கம் டிரஸ்ட், லியோனா எம் மற்றும் ஹாரி பி ஹெல்ம்ஸ்லி தொண்டு நிறுவனம் ஆகியவையும் ஆய்விகளுக்கு தேவையான நிதியை வழங்குகின்றன.

"இந்த ஆய்வுகள் ஒரு மிக நீண்ட நெடிய பயணம்" என வர்ணிக்கிறார் Diapetes UK ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் எலிசபெத் ராபர்ட்சன்.

எனவேதான் தென்கிழக்கு பகுதியில் வசிக்கும் பெண்களை இதில் ஈடுபட ஊக்குவிக்கிறோம் என்கிறார் டாக்டர் எலிசபெத் ராபர்ட்சன். இது போன்ற பெண்கள் இல்லாமல் சர்க்கரை நோய்க்கான ஆய்வுகள் சாத்தியமே இல்லை என்கிறார் டாக்டர் எலிசபெத் ராபர்ட்சன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: