முதுமை அடைவதை சுட்டிக்காட்டும் முக்கிய அறிகுறிகள்

வயதான மனிதர் படத்தின் காப்புரிமை Getty
Image caption வாழ்க்கை முறையும், மரபணுவும் நாம் முதுமை அடைவதை பாதிக்கின்றன.

"உயிரியல் ரீதியாக முதுமையடையும்போது உருவாகின்ற எதை பற்றியும் எனக்கு தெரிவதில்லை"

ஸ்பெயினின் தேசிய புற்றுநோய் ஆய்வு மையத்தின் மருத்துவர் மனுவேல் செர்ரானோவின் இந்த கூற்று கவலையை ஏற்படுத்துகிறது.

முதுமையின் அறிகுறி பற்றி புதிய ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவராக இவர். நாட்கள் செல்ல செல்ல நமது உடலுக்குள் நிகழும் முக்கிய செயல்முறைகளை இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் பட்டியலிட்டுள்ளனர்.

"இவை தவிர்க்க முடியாத அம்சங்கள்" என்று பிபிசியிடம் தெரிவித்த செர்ரானோ, "வாழ்க்கை முறை அல்லது மரபியல் காரணமாக வேறுபட்ட மக்களிடம் இவை ஏறக்குறைய தெளிவாக தெரியும். இவை எப்போதுமே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன" என்று தெரிவித்தார்.

மனிதர் உள்பட பாலூட்டிகள் முதுமை அடைவதை வெளிக்காட்டும் 9 அம்சங்கள்:

படத்தின் காப்புரிமை Getty
Image caption அதிக தவறுகள் செல்களில் குவியுமானால், செல் புற்றாக உருவாகி பரவக்கூடும்.

1. டிஎன்ஏ சேதங்கள் அதிகரிப்பு

செல்களுக்கு இடையில் கடத்தப்படும் மரபணு குறியீடுதான் நமது டிஎன்ஏ.

இந்த செயல்முறையில் நிகழுகின்ற தவறுகளால் முதுமை அடைதல் அதிகரிக்கிறது.

இத்தகைய தவறுகள் செல்களில் குவிக்கின்றன.

இந்த நிலைமை மரபணு ஸ்திரமின்மை என்று அறியப்படுகிறது. டிஎன்ஏ தவறுகள் ஸ்டெம் செல்களை பாதிக்கிறபோது இது கணிசமான முக்கியத்துவம் வாய்ந்தவை.

எல்லா செல்களிலும் மற்ற செயல்பாடுகள் அனைத்தையும் தூண்டுகின்ற செல்தான் ஸ்டெம் செல் எனப்படுகிறது.

அதிக தவறுகள் செல்களில் குவியுமானால், செல் புற்றாக உருவாகி பரவக்கூடும்.

2. குரோமசோம்கள் மோசமடைதல்

படத்தின் காப்புரிமை Getty
Image caption நாம் முதுமையடையும்போது செல்கள் சீர்குலைகின்றன.

ஷூலேசின் ஓரத்தில் பிளாஸ்டிக் முனை இருப்பதுபோல டிஎன்ஏ இழைகளின் ஊரத்தில் காணப்படும் இடைவெளி குரோமசோம்களை பாதுகாக்கின்றது.

இவை டெலோமிர்கள் என அழைக்கப்படுகின்றன. வயதாகும்போது இவை மோசமடைவதால் குரோமசோம்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடுகிறது.

அவை சரியற்ற முறையில் பெருகி. பிரச்சனைகளை உருவாக்குகின்றன.

இவ்வாறு டெலோமிர் மோசமாகுவது நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் மற்றும் தீவிர நோய்த்தடுப்பு இல்லாத நிலையான அஃப்ளாஸ்டிக் ரத்த சோகை ஆகிய நோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

டெலோமிர்களை நீட்டிக்க செய்கின்ற என்சைம் (enzyme) ஒன்றை பயன்படுத்தி லோமிர்களின் அளவை அதிகரிப்பதில் விஞ்ஞானிகள் ஏற்கெனவே வெற்றி கண்டுள்ளனர்.

டெலோமிர்களை நீட்டிக்க செய்வது, எலிகளின் ஆயுள்காலத்தை நீட்டிப்பதை சோதனை எலிகளை வைத்து நடத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பல தசாப்தங்களுக்கு முன்னர் இருந்ததைவிட முதியோர் பணக்காரர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

3. செல் செயல்பாட்டில் பாதிப்பு

டிஎன்ஏ வெளிப்பாடு என்கிற செயல்முறையை நமது உடல்கள் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட செல்லில் இருக்கின்ற ஆயிரக்கணக்கான மரபணுக்கள் அந்த செல் என்ன செய்ய வேண்டுமென முடிவு செய்கின்றன. எடுத்துக்காட்டாக, அது தோல் செல்லாக செயல்படுவதா அல்லது மூளையின் செல்லாக செயல்படுவதாக என முடிவு செய்கின்றன.

இந்த கட்டளைகள் வழங்கப்படும் முறையை காலமும், வாழ்க்கை முறையும் மாற்றி அமைக்கலாம்.

இவ்வாறு செல்கள் எவ்வாறு செயல்பட வேண்டுமோ அதற்கு மாறாக செயல்படலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முதுமை என்பது வெறும் எண்ணிக்கையே

4. செல்கள் புதுப்பிக்கப்படும் திறனை இழத்தல்

நமது செல்களில் சேதமடைந்த பகுதிகள் குவிவதை தடுப்பதற்கு, அவற்றை புதுப்பித்து கொள்ளும் திறனை நமது உடல் பெற்றிருக்கிறது.

ஆனால், முதுமை அடைகிறபோது இந்த திறன்கள் குறைகின்றன.

பின்னர் செல்களில் பயனற்ற அல்லது அமில புரதங்கள் சேர்கின்றன. அவற்றில் சில அப்சைமர்ஸ் மற்றும் பார்கின்சன்ஸ் நோய்கள் மற்றும் கண்புரையோடு தொடர்புடையவை.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கொழுப்பு மற்றும் சர்க்கரை போன்றவற்றை கையாளும் செயல்திறனை செல்கள் இழக்கின்றன.

5. செல் வளர்சிதை மாற்றம் கட்டுப்பாட்டை இழத்தல்

காலம் செல்ல செல்ல கொழுப்பு மற்றும் சர்க்கரை பொருட்களை செயல்முறை படுத்தும் திறனை செல்கள் இழக்கின்றன.

இதனால், நீரிழிவு உருவாகலாம். உதாரணமாக, செல்களில் வந்து சேர்கின்ற ஊட்டச்சத்துக்களை வளர்சிதை மாற்றம் செய்ய முடியாமல் போகலாம்.

இந்த காரணத்தால்தான் வயது அடிப்படையிலான நீரிழிவு பொதுவாக காணப்படுகிறது. முதிய வயதுடைய உடலால் சாப்பிடப்படுகின்ற அனைத்தையும் செயல்முறை செய்ய முடிவதில்லை.

படத்தின் காப்புரிமை Getty
Image caption மீளுருவாகும் தன்மையை செல்கள் படிப்படியாக இழக்கின்றன.

6. வேலை செய்வதை நிறுத்தும் செல் இழைமணி

செல்களுக்கு சக்தியை வழங்குவது இந்த செல் இழைமணிதான். ஆனால், ஆண்டுகள் கடந்து செல்கிறபோது அவை செய்திறன் இழந்துவிடுகின்றன.

இவை தவறாக செயல்படுவது டிஎன்ஏக்கு பாதிப்பாக அமையும்.

செல் இழைமணியின் செயல்பாட்டை சரிசெய்வது பாலூட்டிகளில் ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம் என்று சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஜூன் மாதம் நேச்சர் என்கிற அறிவியல் சஞ்சிகையில் வெளியானதோர் ஆய்வில், செல் மணிஇழையின் செயல்திறனை திரும்பபெற செய்து, சோதனை எலியில் ஏற்பட்டிருந்த சுருக்கங்களை சரி செய்ய முடிந்த்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption மதுமை அடைவதில் மேம்பாட்டை அறிவியலும், மருத்துவமும் நமக்கு தந்துள்ளன.

7. பாதிக்கப்பட்டாலும் வேலை செய்வதாக மாறும் செல்கள்

தீங்கான செல்களை உற்பத்தி செய்வதை தவிர்ப்பதற்காக, ஒரு செல் அதிகமாக சேதமடைந்து விட்டது என்றால் செல் பிரிவதை நிறுத்திவிடுகிறது.

இந்த செல் பிரிவதை நிறுத்திவிடுகிறது. இறந்து போவதில்லை. வயதானதாக அறியப்படும் இந்த செல் அதற்கு அருகிலுள்ள பிற செல்களை பாதிப்படைய செய்து, உடல் முழுவதும் வீக்கத்தை பரப்ப செய்யலாம்.

காலம் செல்ல செல்ல, வயது அதிகம் ஆக ஆக இத்தகைய வயதான செல்கள் அதிகமாக குவிகின்றன.

சோதனை எலிகளில் இத்தகைய செல்களை அகற்றிவிடுவதன் மூலம் முதுமையின் சில பாதிப்புக்களில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption முதுமை அடைவதை தடுக்க முடியாது. ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் மட்டுப்படுத்தப்படலாம்.

8.சக்தியின்றி போகும் ஸ்டெம் செல்கள்

மீளுருவாக்கி கொள்ளும சக்தியில் குறைவு ஏற்படுவது முதுமை அடைவதன் மிகவும் தெளிவான குணநலன்களாகும்.

ஸ்டெம் செல்கள் படிப்படியாக சக்தி குறைந்து, மீளுருவாக்கி கொள்ளும் செயல்திறனை இழந்து விடுகின்றன.

ஸ்டெம் செல்கள் மீளுருவாக்கும் சக்தி பெறுவதன் மூலம் உடல் முதுமையை வெளிப்படுத்துவதை மாற்றிக்கொள்ளலாம்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption என்றுமே இளைமையாக இருப்பது என்பது எட்டாக்கனி.

9. செல்கள் ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாற்றத்தை நிறுத்துதல்

செல்கள் ஒன்றோடு ஒன்று தொடர் தகவல் தொடர்பில் இருந்து வருகின்றன. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இந்த திறனும் குறைந்து போகிறது.

இதனால் வீக்கம் உருவாக்கி, தொடர்ந்து தகவல்களை பரிமாறி கொள்வதில் இன்னும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இதன் விளைவாக, நோய்க்கிருமிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் உயிரணுக்களின் முன்னிலையில் எச்சரிக்கையாக இருக்கும் உணர்வை அவை இழந்துவிடுகின்றன.

உடலின் உள்ளே நிகழும் முதுமை செயல்முறை பற்றிய ஆய்வுகள், உடல் உறுப்புகளின் மற்றும் திசுக்களின் பொதுவான நலிவடைதலை மருந்துகள் மெதுவாக நடைபெற செய்ய முடியும் என்று செர்ரானோ தெரிவிக்கிறார்.

இந்த முதுமை அடையும் நிகழ்வுகளை தவிர்க்க முடியாது என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் அதனை மட்டுப்படுத்திவிட முடியும் என்கிறார் அவர்.

பல தசாப்பதங்களுக்கு முன்னர் வாழ்ந்த முதியோரைவிட இப்போதைய முதியோர் அதிக பணக்காரர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் உள்ளனர். நாம் முதியவர்களாகி விட்டாலும் வாழ்க்கையை அனுபவிப்போம் என்கிறார் செர்ரானோ.

மரணத்தை வெல்லும் தொழில்நுட்பம் சாத்தியமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்