முகப்பருவுக்கு உணவு முறையை குறை சொல்வதை நிறுத்தும் காலம் வந்துவிட்டதா?

முகப்பரு படத்தின் காப்புரிமை Getty Images

லண்டனில் தோல் சிகிச்சை ஆலோசகராக இருக்கும், நான் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தோல் நோய் பாதிப்புகள் உள்ள ஏராளமான நோயாளிகளைப் பார்த்து வருகிறேன். முகப்பரு என்பது என்னுடைய பிரதானமான ஆர்வம் மிகுந்த சிகிச்சை.

கடந்த சில ஆண்டுகளில், நான் கவனித்த சில விஷயங்கள் எனக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளன; ஆரோக்கியத்தை விடாப்பிடியாக வலியுறுத்துவது அதிகரித்து வரும் நிலையில், தோல் பிரச்சனைகளை கையாளும்போது அது நமது உணவுடன் உள்ள தொடர்பை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்ற கவலை எனக்கு அதிகரிக்கிறது.

உங்களுக்கு என்னிடம் சிகிச்சைக்கு வருவோரின் சிறிய பின்னணியைத் தருகிறேன். பலருக்கும் நீண்டகாலமாகவே முகப்பரு இருந்திருக்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். வசதியான பின்னணியைக் கொண்டவர்கள் .

லண்டனில் தனிமையான பகுதிகளில் வேலை செய்யும் இயல்பைக் கொண்டவர்கள். நம்மில் பலரையும் போல, அவர்கள் புத்திசாலிகள், தங்களுடைய தோலின் ஆரோக்கியம் மட்டுமின்றி, பொதுவாக உடல் ஆரோக்கியம் பற்றியும் அக்கறை கொண்ட பெண்கள்.

சிகிச்சைக்கு வந்து எனக்கு எதிரே அமர்வதற்கு முன்பாக, முகப்பருவுக்கு எண்ணற்ற சிகிச்சைகளை மேற்கொண்டு பலன் கிடைக்காமல் வந்திருப்பார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

தோல் ஆரோக்கியத்துக்கான அழகுசாதனப் பொருட்களை மாற்றுவதும் இதில் அடங்கும். சரியான பொருளைக் கண்டறியும் முயற்சியில் பல ஆயிரங்களை செலவு செய்திருப்பார்கள். உணவுப் பழக்கத்தையும் மாற்றியிருப்பார்கள்.

உணவின் சுவை மட்டுமல்லாது சத்து என்பதும் புறந்தள்ளிவிட முடியாத ஒன்று. பருக்கள் நீங்குவதற்காக, பால் பொருட்கள், குளூட்டென் மற்றும் சர்க்கரையை எப்படி தவிர்த்து வருகிறோம் என்பதை நோயாளிகள் என்னிடம் கூறுகிறார்கள்.

ஆரோக்கியமற்றதாக உணவுப்பழக்கம் மாறிவிடும் அளவுக்கு பலரும் தங்கள் உணவுத் தேர்வுகளை கட்டுப்படுத்துகிறார்கள். நண்பர்களுடன் டின்னருக்கு செல்வதைத் தவிர்க்க காரணங்களைத் தேடுகிறார்கள்.

குடும்பத்தில் ஒருவர் அன்புடன் தயாரித்த பிறந்த நாள் கேக் சிறிது சாப்பிடவும் மறுக்கிறார்கள். வெளியில் செல்லும்போது,'ஏற்கக் கூடிய' அல்லது 'அனுமதிக்கப்பட்ட' உணவைத் தரும் 'சுத்தமான உணவகம்' என்ற ஒன்று அருகில் இல்லை என்பதால், மதிய உணவைத் தவிர்க்கிறார்கள்.

நான் கையாள்வது முகப்பரு பிரச்சனையை மட்டுமில்லை. உணவுகள் பற்றிய மிகுந்த அச்சம் மிகுந்தவர்களையும் நான் கையாள்கிறேன்.

ஆனால் நாம் ஆதாரங்களைப் பார்ப்போம். முகப்பருவுக்கும் உணவுப் பழக்கத்துக்கும் என்ன தொடர்பு?

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தத் தொடர்பு பற்றி பல பத்தாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. நல்ல தரமான உணவு முறை குறித்து ஆய்வுகள் நடத்துவது சிரமம். என்ன சாப்பிட்டோம் என்று மக்கள் நினைவுபடுத்தி சொல்வதையே பல ஆய்வாளர்கள் சார்ந்திருக்கிறார்கள்.

10 ஆண்டுகளுக்கு முன்பு என்ன சாப்பிட்டோம் என்பதை விட்டுத் தள்ளுங்கள், கடந்த வாரம் என்ன சாப்பிட்டோம் என உங்களால் சரியாக நினைவுபடுத்தி சொல்ல முடியுமா?

முகப்பரு உண்டாவதில்லை சர்க்கரை உள்ள உணவுகளுக்கு சிறிது பங்கு இருக்கிறது. ஆனால் நான் இதை சொல்லும் விதம் முழுமையாக சர்க்கரையை கைவிடுவதாக இருக்காது, மாறாக சர்க்கரை உள்ள உணவுகளை சாப்பிடுவதில் கவனம் செலுத்தச் சொல்வதாக இருக்கும்.

முகப்பருவுக்கும் ரத்தத்தில் குளுகோஸ் அளவை (GI) அதிகரிக்கும் உணவு வகைகளுக்கும் தொடர்பு அதிகம் இருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். எனவே, உண்மையில் சர்க்கரைக்கு சிறிது பங்கு இருக்கிறது. சர்க்கரைக்கு சிறிது பங்கு இருக்கிறது.

ஆனால் நான் இதை சொல்லும் விதம் முழுமையாக சர்க்கரையை கைவிடுவதாக இருக்காது. மாறாக சர்க்கரை சாப்பிடுவதில் கவனம் செலுத்தச் சொல்வதாக இருக்கும். சர்க்கரை உள்ள உணவுகளை அதிகம் உண்பது உங்களுடைய தோலுக்கு மட்டுமின்றி, பொதுவான உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல.

பால் பொருட்களுடன் உள்ள தொடர்பு, முகப்பருக்களை உண்டாக்குவதில் உண்மையிலேயே குறைவானதுதான். இருந்தாலும், குறைந்த அளவிலான, ஒரு குறிப்பிட்ட குழுவை மட்டுமே சேர்ந்த மக்களுக்கு முகப்பரு ஏற்பட பால் பொருட்களுக்கு ஒரு பங்கு இருக்கலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images

குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், அதிக அளவில் கொழுப்புள்ள பால் பொருட்களைவிட மோசமானதாக இருக்கின்றன. இதற்கான காரணங்கள் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமலே இருக்கின்றன. முகப்பருவுக்கு பால் பொருட்களை கைவிடச் சொல்லும் பரிந்துரைகள் பிரிட்டன் அல்லது அமெரிக்க நாடுகளின் மருத்துவ வழிகாட்டுதல்களில் இல்லை.

இறைச்சி மற்றும் பால் தவிர்த்த, சைவ உணவு மட்டுமே உண்ணும் நிறைய பேருக்கு முகப்பரு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

அதேபோல, அனைத்து வகையான உணவுகளையும் எடுத்துக்கொள்ள மறுக்கும் நிறைய நோயாளிகளை நான் பார்க்கிறேன். அவர்களுக்கும் முகப்பருக்கள் உள்ளன. முகப்பருக்கள் உண்டாக உணவை ஒரு காரணமாக சொல்வது மிகவும் எளிமையானது. அதற்கு ஹார்மோன்கள் மற்றும் மரபணுக்கள் உள்ளிட்ட பல காரணிகள் உள்ளன.

உணவுக் கட்டுப்பாடுகள் மோசமானவை அல்ல. அதேபோல உணவுப் பழக்கத்தை கேலி செய்வதையும் நான் புறக்கணித்துவிட முடியாது.

ஒருவரின் உணவுப் பழக்கங்கள் பற்றி தேவையில்லாத கருத்துகள் கூறுவது மற்றும் அவர்களுடைய தோல் நோய்க்கு அவர்களுக்கு முகப்பரு உண்டாக காரணம் என்று கூறுவது சமூகத்தில் ஏற்புடையது என்று மக்கள் நினைக்கிறார்கள். எனக்கும் கூட இப்படி நடந்திருக்கிறது.

கோடை வெப்ப நாளில் ஐஸ் கிரீம் சாப்பிடுவதால் தான் உங்களுக்கு பரு வந்திருக்கிறது என தெருவில் செல்லும் அறிமுகம் இல்லாத ஒருவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சாக்லேட்கள்தான் பரு ஏற்பட காரணமாக உள்ளன என்று கூறி, உங்கள் மீது அக்கறை உள்ள உறவினர் ஒருவர் சாக்லேட் சாப்பிட வேண்டாம் என சொல்கிறார். ஒரு துண்டு பீசா படத்தை சமூக வலைதளத்தில் நீங்கள் பதிவிடும்போது, அதுதான் உங்கள் தோல் பிரச்சனைக்கு காரணம் என்று பின்னூட்டம் இடுவார்கள்.

அதிகப்படியான தகவல்கள் கிடைக்கக் கூடிய உலகத்தில் நாம் வாழ்கிறோம். ஒவ்வொருவருக்கும் கருத்துகள் உண்டு.

சமூக வலைதளங்கள் மூலம் பரவலான மக்களை சென்றடைய முடிகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இவையெல்லாம் சாத்தியமானவை அல்ல. தனக்கு எல்லாம் தெரியும் என்று பலரும் சொல்வதில் உள்ள பொய்யான தகவல்களில் இருந்து அறிவியல்பூர்வமாக நம்பகத்தன்மை உள்ளவற்றை எப்படி பிரித்து அறிந்து கொள்வது?

பருக்கள் காரணமாக நீங்கள் நம்பிக்கை இழந்து, சுயமதிப்பை இழப்பதாக நீங்கள் நினைத்தால், ஆலோசனைக்காக இணையதளத்தை நீங்கள் நாடியிருப்பது முற்றிலும் புரிந்து கொள்ளக் கூடியது. இதில் பிரச்சனை என்னவென்றால், அதில் உள்ள எல்லா ஆலோசனைகளும் சமமானவை அல்ல.

அதில் சில நேரங்களில் ஆரோக்கிய நிபுணர்களிடம் இருந்தும் கூட முரண்பாடான கருத்துகள் வருகின்றன. ஒருவருக்கு ஒரு விஷயம் சரிப்பட்டு வருகிறது என்பதற்காக, அது உங்களுக்கும் சரிப்பட்டு வரும் என்பது கிடையாது. நாம் அனைவருமே, தனித்துவமான மரபணுக்களைக் கொண்ட, தனிப்பட்ட வாழ்க்கை சூழ்நிலை மற்றும் குடல், நாளம், தோல் அமைப்பு முறைகள் மாறுபாடு கொண்ட தனிப்பட்ட நபர்கள்.

கவலை, மன அழுத்தம், சமூக ரீதியாக தனிமையாக இருத்தல் மற்றும் உடலமைப்பு நன்றாக இல்லை எனும் எண்ணம் போன்ற மன ரீதியிலான பிரச்சனைகளும் பரு ஏற்பட காரணமாக இருப்பதாக ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கிறது.

மன ரீதியிலாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள மக்களிடம் உணவைக் கட்டுப்படுத்துங்கள் என்று சொல்வது கவலைக்குரியது. ஆனால் சமூக வலைதளங்கள் முழுக்க இது தான் நடக்கிறது. வலைப்பூ எழுதுபவர்கள், இயற்கை வாழ்வியல் நிபுணர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் மூலமாக - 'பிரச்சனையின் அடிவேரை' கண்டறிந்து நீக்குவதாக வாக்குறுதி அளிக்கிறார்கள்.

உங்களுடைய தோலுக்கு, நல்ல சத்துமிக்க உணவு முக்கியமானது என்பதை யாரும் மறுக்கவில்லை. தோல் ஆரோக்கியம் மற்றும் நோயில் உணவுக்கு பல வகைகளில் பங்கு இருக்கிறது.

ஆனால் அறிவியல் ஆதாரங்கள் இல்லாத, வேண்டாத ஆலோசனைகள் சொல்வதன் மூலம், அவர்களுடைய உணவு முறைகள் பற்றி ஆலோசனைகள் சொல்லி அவர்களை சங்கடப்படுத்துவதும் இதுவும் ஒன்றல்ல.

ஏற்கெனவே துன்பத்தில் இருக்கும் ஒருவரை குறை சொல்வது, நியாயமற்ற வகையில் குறை சொல்லும் கலாசாரத்தை உருவாக்குகிறது. இதுபோன்ற கருத்துகள் தங்களுக்கு மன உளைச்சலைத் தருகின்றன அல்லது உணவுப் பழக்கத்தில் ஒழுங்கு கெட்டுப் போகிறது என்று என்னிடம் நோயாளிகள் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

என்ன சாப்பிடுகிறோம் என்பது பற்றி பலரும் கவலைப்படுகிறார்கள். அல்லது பொது இடத்தில் இனிப்பான உணவை சாப்பிடுவதற்கு முன் இரு முறை யோசிக்கிறார்கள்.

ஆகவே இதற்கு என்ன தீர்வு? பரு அல்லது அதைப் போன்ற எந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும், மருத்துவ உதவியை நாடுவது முக்கியம். அதேபோல, இதுபோன்ற பிரச்சனை உள்ள உங்களுக்கு அன்புக்குரியவர் யாராவது உணவுக் கட்டுப்பாடு மேற்கொள்ளும் நோக்கத்தைக் கொண்டிருந்தால், மருத்துவ உதவியை நாடுமாறு தயவுசெய்து அவரை ஊக்கப்படுத்துங்கள்.

உங்களுடைய பொது மருத்துவர் அல்லது தோல் சிகிச்சை நிபுணருடன் உங்கள் உணவு குறித்த கவலைகள் பற்றி, வெளிப்படையாகப் பேசுங்கள். உணவு கட்டுப்பாட்டு நிபுணர் மற்றும் உளவியல் நிபுணர்கள் போன்றவர்களைக் கொண்ட குழுவினர் உங்கள் தோலுக்கு சிகிச்சை தருவதில் இணைந்து செயலாற்ற இது உதவும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :