கேட்டி பௌமேன்: கருந்துளையின் முதல் புகைப்படத்தை எடுத்த பின்னணியில் உள்ள பெண்

டாக்டர் பௌமேன்

கருந்துளையின் முதலாவது புகைப்படத்தை எடுத்துள்ள அல்கோரிதத்தை உருவாக்க உதவியதற்காக 29 வயதான கேட்டி பௌமேன் உலக அளவில் புகழ்பெற்றுள்ளார்.

இந்த திருப்புமுனை ஏற்படுத்தக்கூடிய புகைப்படத்தை எடுக்கும் கணினி செயல் நிரலியை உருவாக்குவதற்கு கேட்டி பௌமேன் தலைமை தாங்கினார்.

பூமியில் இருந்து 500 மில்லியன் டிரில்லியன் கிலோமீட்டர் தொலைவிலுள்ள தூசு மற்றும் வாயுவின் ஒளிவட்டத்தை காட்டுகின்ற வியக்கதக்க இந்த புகைப்படம் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த முன்முயற்சியை அடைய முடியாது என்று முன்னர் நம்பப்பட்டதாக பௌமேன் கூறுகிறார்.

மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தில் பட்டதாரி மாணவராக இருந்தபோது, பௌமேன் இந்த அல்கோரிதத்தை உருவாக்க தொடங்கினார்.

மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் கணினி அறிவியல் பிரிவை சோந்த குழுவினர், செயற்கை நுண்ணறிவு ஆய்வகம், த ஹார்வேடு-ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையம் மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலைய ஹேஸ்டாக் வான் கண்காணிப்பு நிலையம் போன்ற பலரின் உதவியோடு இந்த பணித்திட்டத்தை பௌமேன் நடத்தினார்.

டாக்டர் பௌமேன் உருவாக்கிய அல்கோரிதத்தால், ஒன்றோடொன்று தொடர்பு ஏற்படுத்தப்பட்ட 'இவண்ட் ஹோரிசன் தொலைநோக்கி'யால் (இஹெச்டி) கருந்துளை புகைப்படமாகியுள்ளது.

இந்த புகழ்மிக்க புகைப்படம் வெளியான சில மணிநேரங்களில், ட்விட்டரில் பெயர் டிரண்டாக டாக்டர் பௌமேன் சர்வதேச அளவில் பேசப்படும் நபரானார்.

மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையம் மற்றும் ஸ்மித்கோசியன் வானியற்பியல் மையத்தாலும் டாக்டர் பௌமேன் பாராட்டப்படுகிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் பட்டதாரி மாணவி கேட்டி பௌமேன் கருந்துளையின் முதலாவது புகைப்படத்தை உருவாக்குவதற்கான புதிய அல்கோரிதத்தை உருவாக்குவதற்கு தலைமைதாங்கினார். இன்று, இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது" என்று மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையமும் அதன் செயற்கை நுண்ணறிவு ஆய்வகமும் தெரிவித்துள்ளது,

இதற்கு உதவிய குழுவினரும் பெயர் பெறுவதற்கு சம அளவில் கடமைப்பட்டுள்ளனர் என்று கலிஃபோர்னிய தொழில்நுட்ப நிலையத்தின் கணக்கீடு மற்றும் கணிதவியல் துணை பேராசிரியாக வேலை செய்தவரும் டாக்டர் பௌமேன் வலியுறுத்தியுள்ளார்.

அண்டார்டிக்கா முதல் சிலி நாடு வரை வேறுபட்ட இடங்களில் இருக்கும் தொலைநோக்கிகளை பயன்படுத்தி இந்த புகைப்படத்தை உருவாக்குவதில் 200-க்கு மேலான விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

"எங்களில் யாரும் தனியாக இதனை செய்திருக்க முடியாது" என்று சிஎன்என்-க்கு தெரிவித்த டாக்டர் பௌமேன் பல்வேறுபட்ட பின்னணிகளில் இருந்து வந்த வித்தியாசமான விஞ்ஞானிகள் பலரால் இது கிடைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

கருந்துளை பற்றி நாம் அறிந்தவை

கருந்துளையை நமது கண்களால் நேரடியாக பார்க்க முடியாது. பூமியைவிட மூன்று மில்லியன் மடங்கு அளவு பெரிதானது, 40 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

மேஸ்சியர் 87 கேலக்ஸியில் 10 நாட்களாக இது வரிமம் (ஸ்கேன்) செய்யப்பட்டுள்ளது.

இதுவரை அறிந்ததிலேயே வெகு தொலைவில் உள்ள கருந்துளை கண்டுபிடிப்பு

ஸ்டீஃபன் ஹாக்கிங் எனும் சமகால ஐன்ஸ்டீன்

"ஒட்டுமொத்த சூரிய அமைப்பை விட பெரியது" என்று இந்த பரிசோதனையை முன்மொழிந்த நெதர்லாந்திலுள்ள ராட்பௌட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹெய்னோ ஃபால்க்கே பிபிசியிடம் கூறியுள்ளார்.

இந்த புகைப்படம் உருவானது எப்படி?

டாக்டர் பௌமேனும், பிறரும் உருவாக்கிய கணினி நிரல் தொடர்கள், தொலைநோக்கி தரவுகளை உருமாற்றி உலக ஊடகங்கள் வெளியிட்ட வரலாற்று புகழ்மிக்க புகைப்படமாக உருவாக்கியுள்ளன.

கணிதவியல் மற்றும் கணினி அறிவியலில், அல்கோரிதம் என்றால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பயன்படுகின்ற ஒரு செயல்முறை அல்லது விதிகளின் தொகுப்பாகும்.

ஒரு தொலைநோக்கி தனியாக கருந்துளையை படம் பிடித்துவிட முடியாது. எனவே 'தலையீட்டுமானி' என்றழைக்கப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எட்டு தொலைநோக்கிகளின் வலையமைப்பு உருவாக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Reuters

அவை வழங்கிய தரவுகள் நூற்றுக்காணக்கான வன் டிரைவ்களில் சேமிக்கப்பட்டு, பாஸ்டன், அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் போன் ஆகிய இடங்களில் இருக்கும் மத்திய செயல்முறை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த தரவுகளை செயல்முறை செய்ய டாக்டர் பௌமேன் உருவாக்கிய அல்காரித முறை உதவியதால் கருந்துளையின் இந்த புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது.

இந்த தரவுகளில் இருந்து புகைப்படத்தை பெறுவதற்காக, வேறுபட்ட அனுமானங்களோடு உருவாக்கப்பட்டிருந்த பல்வேறு அல்கோரிதம்களோடு செய்யப்பட்ட பரிசோதனை முயற்சிக்கு பௌமேன் தலைமை தாங்கினார்.

இந்த அல்கோரிதம்களால் கிடைத்த முடிவுகள் நான்கு தனிப்பட்ட குழுக்கள் பகுப்பாய்வு செய்து அவர்களின் கண்டுப்பிடிப்பை உண்மை தன்மை ஆய்வு செய்து நம்பிக்கையை உருவாக்கினர்

வானியலாளர்கள், இயற்பியலாளர்கள், கணிதமேதைகள், பொறியியலாளர்களை உருக்கிய பானைகள்தான் நாங்கள். அதனால்தான் முடியாதது என்று முன்னர் நம்பப்பட்டதை சாதிக்க முடிந்தது என்று டாக்டர் பௌமேன் தெரிவித்துள்ளார்.

பூமியைவிட 30 லட்சம் மடங்கு பெரிய கருந்துளையின் முதல் படம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
முதல்முறையாக கேமராவில் படம் பிடிக்கப்பட்ட கருந்துளை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

.