ஃபேஸ்புக், வாட்சப் சேவைகள் உலகம் முழுவதிலும் செயலிழந்தது

FB படத்தின் காப்புரிமை Reuters

பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக் தளம் செயல்படவில்லை என்று ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

மேலும், ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளும் செயலிழந்திருந்தன.

ஃபேஸ்புக் பயன்படுத்த முடியவில்லை என்று 9000க்கும் மேற்பட்டோர் புகார் தெரிவித்துள்ளதாக டவுன் டிடக்டர் வலைதளம் கூறுகிறது.

படத்தின் காப்புரிமை downdetector.com

சுமார் மூன்று மணி நேர செயலிழப்புக்கு பின்னர், மீண்டும் இத்தளம் சரிசெய்யப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் அதிக நேரம் ஃபேஸ்புக் செயலிழந்திருந்தது. அதன் சேவைகளை 24 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்த முடியாமல் இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்