கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரே பாஸ்வேர்ட் எது?

பாஸ்வர்ட்

பட மூலாதாரம், NurPhoto

உலகில் கோடிக்கணக்கான மக்கள் எளிதாக கணிக்கக்கூடிய பாஸ்வேர்டையே வைத்திருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

123456 என்பதுதான், பரவலாக பலராலும் பயன்படுத்தப்படும் பாஸ்வர்ட் என்று பிரிட்டனின் தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சைபர் உலகில் மக்களை பாதிக்கும் ஆபத்து குறித்து தெரிந்து கொள்ள இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

மூன்று வெவ்வேறு ஆனால், ஞாபகம் வைத்துக் கொள்ளக்கூடிய வார்த்தைகளை சேர்த்து வலிமையான பாஸ்வேர்டை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று தேசிய சைபர் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

உணர்திறன் தரவு

வரம்புமீறி சில கணக்குகளுக்குள் உள்நுழைந்த தரவுகளை எடுத்து, எந்த எழுத்துக்கள் மற்றும் வாக்கியங்களை அந்த மக்கள் பாஸ்வேர்டாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது முதலில் ஆராயப்பட்டது.

அப்படி ஆராயும்போது, 23 மில்லியன் பாஸ்வேர்ட்கள் 123456 என்று இருந்தது. இரண்டாவது பிரபலமான பாஸ்வர்ட் 123456789. இதை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கவில்லை. அடுத்த மூன்று இடங்களில் "qwerty", "password" மற்றும் "1111111" ஆகியவை இடம் பெற்றிருந்தன.

நன்கு தெரிந்த வார்த்தைகள் மற்றும் பெயர்களை பாஸ்வேர்டாக வைக்கும் மக்கள், தங்கள் கணக்குகளை ஹேக் செய்யும் ஆபத்தில் வைக்கிறார்கள் என்று பிரிட்டனின் தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் தொழில்நுட்ப இயக்குநர் இயன் லெவி கூறுகிறார்.

"தங்களின் பெயர், அல்லது பிடித்த விளையாட்டுக்குழு போன்றவற்றை எல்லாம் யாரும் பாஸ்வர்டாக வைக்கக் கூடாது" என்றும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Anadolu Agency

கண்டுபிடிக்க கடினமான பாஸ்வர்ட்

மக்களின் பாதுகாப்பு பழக்கங்கள் மற்றும் அதுகுறித்த அச்சங்கள் குறித்தும் மக்களிடம் கேட்கப்பட்டது.

ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழக்கக்கூடும் என்ற அச்சத்தில் 42 சதவீத மக்கள் இருக்கிறார்கள். 15 சதவீத மக்கள் மட்டுமே தங்களின் இணைய பாதுகாப்பு குறித்து நன்கு அறிந்து நம்பிக்கையுடன் இருப்பதாக கூறுகின்றனர்.

வெகு சிலர் மட்டுமே தங்களது பிரதான மின்னஞ்சல் கணக்கிற்கு கண்டுபிடிக்க கடினமான பாஸ்வர்டை பயன்படுத்துகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஹேக் செய்யப்பட்ட கணக்குகளின் தரவுகளை பராமரிக்கும் பாதுகாப்பு வல்லுநர் ட்ராய் ஹன்ட் கூறுகையில், "இணைய பாதுகாப்புக்காக சிறந்த பாஸ்வர்டை தேர்வு செய்து வைப்பது என்பது மக்களின் கையில் இருக்கும் மிகப் பெரிய கட்டுப்பாடாக உள்ளது" என்று தெரிவித்தார்.

இந்தியாவின் தேர்தல் வரலாறு - ஜனநாயகம் காலூன்றிய கதை

எந்த பாஸ்வேர்ட் பரவலாக பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்கள் தெரிந்து கொண்டால் அவர்கள் வேறு சிறந்த தேர்வுகளை செய்வார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :