கூகுள் ஏற்படுத்தி உள்ள புதிய வசதி - பயனர்களின் தொலைப்பேசி தகவல்களை எடுத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு

கூகுள் படத்தின் காப்புரிமை Getty Images

கூகுளில் நமது தேடல் தகவல்களும் (சர்ச் ஹிஸ்ட்ரி), இடங்கள் குறித்த தகவல்களும் (லோகேஷன் ஹிஸ்ட்ரி) தானாக அழிந்துவிடும் வசதியை பயனாளர்களுக்கு வழங்கவுள்ளது அந்நிறுவனம்.

ஆனால் இந்த வசதி மூன்று மாதங்களுக்கு பிறகு அறிமுகம் செய்யப்படும்.

தற்போது நாமாக நமது தேடல்கள் குறித்த தகவல்களை அழித்துக் கொள்ளும் வசதி உள்ளது.

கூகுளின் யுடியூப், கூகுள் மேப்ஸ் மற்றும் தேடல் ஆகியவற்றில் இந்த வசதி உள்ளது.

தனிநபர் தகவல்களுக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணம் இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.

அதாவது கூகுளில் நமது முந்தைய தேடல்கள் தானாக அழிந்துவிடும்.

கூகுள் பயனர்களிடம் இருந்து பெறும் தனிநபர் தகவல்கள் குறித்து தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது.

நவம்பர் மாதம், பயனர்கள் தொலைப்பேசியை ஆஃப் செய்த பிறகும் அவர்களின் இருப்பிடம் குறித்த தகவல்களை பெற்றதாக கூகுள் மீது பலர் குற்றம் சுமத்தினர்.

படத்தின் காப்புரிமை Google

இந்த மாத தொடக்கத்தில் கூகுளில் குரல் பதிவு மூலம் தகவல் பெறும் ஆப்பில் (கூகுள் அசிஸ்டெண்ட் ஆப்), பயனர்களின் குரல்களை மனிதர்கள் ஆய்வு செய்ததாக கூகுள் கூறியது பலருக்கு வியப்பை அளித்தது.

தற்போது ஒவ்வொரு பயனர்களும், செட்டிங்க்ஸில் கூகுள் வலைதள தேடல் தகவல்கள் மற்றும் இடம் குறித்த தகவல்களை வழங்கும் வசதியை நிறுத்திக் கொள்ளலாம்.

ஆனால் வரும் சில வாரங்களில் கூகுளில் நாம் தேடுவது ஒரு மாதத்திற்கு மேலானால் அது தானாக அழிந்துவிடும்.

இருப்பினும் யுடியூப் மற்றும் கூகுள் அசிஸ்டன் ஆப்களில் இந்த தேடல்கள் அழியாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்