சமையலறை சுத்தமாக தெரிந்தால் கிருமிகள் இல்லை என்று அர்த்தம் இல்லை என்கிறது ஆய்வு

Washing hands after using the toilet படத்தின் காப்புரிமை Getty Images

நமது இல்லத்தில் அழுக்காக தெரியும் பகுதிகளை சுத்தம் செய்வதை விட்டுவிட்டு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை தடுப்பது எவ்வாறு என்று நாம் யோசிக்க வேண்டும் என்கிறது பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி ஃபார் ஹெல்த்தின் அறிக்கை.

கைகளை கழுவுவது, துணிகளை துவைப்பது மற்றும் தரையை சுத்தமாக வைத்துக் கொள்வது சுகாதாரமான வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்று.

ஆனால் நான்கில் ஒருவர் இது முக்கியமானது இல்லை என்று நினைக்கின்றனர் என எச்சரிக்கிறது பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி ஃபார் பப்ளிக் ஹெல்த்.

இதை சரியாக புரிந்து கொண்டால் நோய் தொற்றுகளையும் நுண்ணுயிரிகள் மருந்துகளின் வீரியத்தை தடுப்பதையும் குறைக்கும்.

மேலும் "அதிகப்படியான சுத்தம்" என்ற ஒரு விஷயமே இல்லை.

பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி ஃபார் ஹெல்த்தின் அறிக்கை, மக்களிடையே அழுக்கு, கிருமிகள், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவை குறித்து பெரும் குழப்பங்கள் நிலவுவதாக தெரிவிக்கிறது.

2000 பேரிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 23 சதவீதம் பேர் தங்களின் குழந்தைகள் கெடுதல் விளைவிக்கக்கூடிய கிருமிகளின் தாக்குதலுக்கு ஆளானால் அவர்களின் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் இது ஒரு தீங்கு விளைவிக்கக்கூடிய நம்பிக்கை. இதன்மூலம் சில ஆபத்தான தொற்றுகளுக்கு ஆளாகலாம் என்றும் இந்த அறிக்கையின் தயாரிப்பில் ஈடுப்பட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பிட சில தினங்களில் குறிப்பிட்ட சில இடங்களை சுத்தம் செய்வதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். அந்த இடங்கள் சுத்தமாக தெரிந்தாலும், தீய நுண்ணுயிரிகள் பரவுவதை தடுக்க அவ்வாறு சுத்தம் செய்வது அவசியம்.

எப்போதெல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும்?

 • உணவு தயாரிக்கும்போது மற்று பரிமாறும்போது
 • கைகளால் உண்ணும்போது
 • கழிப்பறையை பயன்படுத்திய பிறகு
 • தும்மல், இருமல் மற்றும் மூக்கை உறிஞ்சும் சமயங்கள்
 • வீட்டில் அழுக்கான துணிகளை துவைக்கும்போது
 • வளர்ப்பு பிராணிகளை தொடும்போது
 • குப்பைகளை எடுக்கும்போது
 • நோய் தொற்றுள்ள ஒரு குடும்ப உறுப்பினரை கவனித்துக் கொள்ளும்போது

உணவு உண்டபிறகு, கழிப்பறையை பயன்படுத்திய பிறகு, தும்மல், இருமலுக்கு பிறகு, பிராணிகளை தொட்டபிறகு, நோய்தொற்றுள்ள குடும்பத்தினரை பராமாரித்த பிறகு கைகளை கழுவுவது மிகவும் அவசியம் என்கிறது அந்த அறிக்கை.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கறிவகைகளை சமைத்தப்பின் சமையலறையை சுத்தமாக கழுவ வேண்டும்

இறைச்சி உணவுகளை சமைத்து முடித்தவுடன் சமையலறையும், அதனை வெட்டும் பலகைகளையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சாண்ட்விச் மற்றும் சிற்றுண்டிகளை தயார் செய்வதற்கு முன்பு சமையலறையை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

அழுக்கான ஓர் இடத்தை சுத்தம் செய்ய பயன்படுத்திய நார்களையும் துணிகளையும்கூட நாம் நன்றாக சுத்தம் செய்வது அவசியம்.

தரை மற்றும் நாற்காலிகள் அழுக்காக தெரியலாம். ஆனால், பொதுவாக ஆரோக்கியத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடிய நுண்ணுயிரிகள் அதில் இருக்காது.

சுத்தம் செய்வது பாக்டீரியாக்களை எந்த அளவு அகற்றும்?

பாத்திரங்களை வெதுவெதுப்பான நீரிலும், சோப்பு தண்ணீரிலும் கழுவி அதனை உலற வைப்பது பாக்டீரியாக்களை அழிக்கும்.

ஆனால், பாக்டீரியாக்களை கொல்ல வேண்டும் என்றால் 70 டிகிரி செல்சியல் நீரில் சிறிது நேரம் பாத்திரங்களை கழுவ வேண்டும் என்கிறது உணவு தர நிர்ணய நிறுவனம் ஒன்று.

சுத்தம் செய்ய என்னென்ன பொருட்களை நாம் பயன்படுத்த வேண்டும்?

இம்மாதிரியாக சுத்தம் செய்யும் பொருட்கள் மூன்று வகையாக உள்ளன.

 • சோப்பு அல்லது சோப்பு தூள்கள் - தரைகளை சுத்தம் செய்யும், கிரீஸ் போன்ற கரைகளை நீக்கும் ஆனால் பாக்டீரியாக்களை கொல்லாது.
 • கிருமி நாசினிகள் - பாக்டீரியாக்களை கொல்லும். ஆனால், கிரீஸ் கரை போன்ற அழுக்குகள் இருக்கும் தரைகளை சுத்தம் செய்யாது.
 • சானிடைஸர்ஸ் - அழுக்கை சுத்தம் செய்யவும் கிருமிகளை அழிக்கவும் பயன்படும். முதலில் கரைகள் உள்ள தரையை சானிடைஸர்ஸ் வைத்து சுத்தம் செய்து பிறகு கிருமி நாசினிகளை பயன்படுத்தலாம்.

எந்த ஒரு தயாரிப்புகளை பயன்படுத்தும்போது அது குறித்த தகவல்களை படிப்பது மிக அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption "பிராணிகளை தொட்டப்பின் கைகளை நன்றாக கழுவ வேண்டும்"

உணவுகளை தயாரித்தபின் துணிகளை கொண்டு சுத்தம் செய்வதை விட்டுவிட்டு பேப்பர் டவல்களால் சுத்தம் செய்யுங்கள். இது சமையலறையில் பயன்ப்படுத்தப்படும் துணிகளில் கிருமி தொற்றுவதை தடுக்கலாம்.

என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்?

லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் மற்றும் ட்ராபிக்கல் மெடிசன் பேராசிரியர் சாலி ப்ளூம்ஃபீல்ட், "சுத்தம் மற்றும் தூய்மைக்கான வித்தியாசங்களை புரிந்து கொள்ள வேண்டும்" என்கிறார்.

அழுக்கை போக்குவதற்காக நாம் சுத்தம் செய்வதெல்லாம் கிருமிகளை போக்குவதில்லை என்பதே இவர்கள் சொல்ல வரும் கருத்து.

சுத்தம் செய்வது என்பது அழுக்குகளை அகற்றுவது. ஆனால் தூய்மையாக வைத்துக் கொள்வது என்பது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அழிப்பது; நோய் தொற்றுகளை அழிப்பது.

வெளியில் சென்று, நண்பர்கள், குடும்பம் மற்றும் வளர்ப்பு பிராணிகளுடம் விளையாடுவதால் நல்ல பாக்டீரியாக்களை உடல் பெரும்.

அதேபோல் நாம் அன்றாட வாழ்வில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது நோய் தொற்று ஏற்படும் ஆபத்தை குறைக்கும். மேலும் நமது குழந்தைகளுக்கும் சுத்தமான சூழலே சிறந்தது. மேலும் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும் ஒரு சூழலையும் அது குறைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :