தாய்ப்பால் ஊட்டுதல் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய தகவல்கள்

மிகைப்படுத்தலை நம்பாதீர்கள்: தாய்ப்பால் கொடுப்பது என்பது புன்னகையும், அரவணைப்பும் அல்ல படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மிகைப்படுத்தலை நம்பாதீர்கள்: தாய்ப்பால் கொடுப்பது என்பது புன்னகையும், அரவணைப்பும் அல்ல

தாய்மாருக்கான பயிற்சி வகுப்புகளுக்கு நான் சென்றேன். பால் கொடுப்பதற்கு ஏற்ற உள்ளாடைகளை வாங்கினேன். தாய் பாலூட்டுவதற்கு என்னை முற்றிலும் தயார் செய்து கொண்டேன்.

ஆனால், எனது குழந்தை பிறந்து, இரண்டு நாட்களுக்கு பின்னர்,சொட்டு சொட்டாகத்தான் எனக்கு பால் சுரந்தது. மார்பக தசையை வருடி விட்டுபால் சுரக்க வைக்க முயற்சித்தேன். கொழுப்பு அதிகமான உணவுகளை சாப்பிட்டேன். பல லிட்டர் பசும்பால் குடித்தேன்.

மூன்றாம் நாள் என்னை வந்து சந்தித்த செவிலியர் ஒருவர் என்னை மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினார். தாய்ப்பால் இல்லாமல் எனது குழந்தை பசியால் வாடியது.

1. பாலூட்டுதல் இயற்கையாக நிகழ்வதல்ல

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தாய் பாலூட்டுதல்: எதிர்பார்ப்பும், உண்மையும்

தாய்ப்பாலை மார்பில் இருந்து உறிஞ்சி எடுக்கும் கருவி மூலம் தாய்ப்பால் எடுக்க அவர்கள் முயற்சித்தபோது, பாலுக்கு பதிலாக ரத்தம்தான் வந்தது.

"எனக்கு என்ன ஆயிற்று," என்று எனக்குள் எண்ணிக்கொண்டேன்.

எனது குழந்தை கொஞ்சம் பாலாவது குடித்துவிட வேண்டும் என்று கஷ்டப்பட்டு உறிஞ்சியது. அதனால் எனது மார்பக முனைகள் கீறின.

குழந்தைக்கு பாலூட்டுவது இயற்கையாக நிகழ்வது அல்ல என்பதை நான் அறிந்திருந்திருக்க வேண்டும். இது செய்து பார்க்க வேண்டிய செயல்முறை.

உடலைப் பாலூட்டுவதற்குத் தொடர்ந்து பழக்கப்படுத்துவதன் மூலம் முன்னேற்றம் கிடைக்கலாம். இது பற்றிய உதவிக் குறிப்புகளுக்கு பஞ்சமில்லை. ஆனால், பாலூட்டுவது எப்போதும் எளிதல்ல. உண்மையிலேயே வலி மிகுந்ததாகும்.

2. சேய் மட்டுமல்ல தாயின் நலமும் முக்கியம்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிறந்த குழந்தையுடன் எப்போதும் ஆட்கள் இருப்பதில்லை: அவை பெரும்பாலும், உண்கின்றன, உறங்குகின்றன, மலம் கழிக்கின்றன.

இயல்பான நிலைமைக்கு எனது உடல் வந்ததும், எனது குழந்தை தாய்ப்பால் அருந்த தொடங்கியதும், எல்லாவிதமான உடல் திரவங்களாலும் தொடர்ந்து நிறைந்திருப்பதைபோல நான் உணர்ந்தேன்.

தூங்க போதிய நேரமில்லை. குளிக்க நேரமில்லை. கண்ணாடி பார்க்கவும் நேரமில்லை. அரிதாக வெளியே செல்வது நல்லதாக பட்டது. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்? எனது நண்பர்கள் என்ன நினைப்பார்கள்?

பொதுவிடங்களில் தாய்ப் பாலூட்டுவதை வசதியாக நான் உணராததால், நான் செல்ல விருப்பப்படும் இடங்கள் எல்லாம் நான் செல்லாத இடங்களாக மாறின.

நள்ளிரவில் குழந்தையோடு தனியாக எழுந்து இருந்தபோது, உலகில் இருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்படுவதாக உணர்வேன்.

படத்தின் காப்புரிமை Getty Images

பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் மனச்சோர்வின் விளிம்பில் நான் இருந்தேன். உதவ யாருமில்லை.

குழந்தையை கவனித்து கொள்வதைப்போல, என்னையும் கவனித்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் என்பதை நான் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கவலை, மனச்சோர்வு அடைந்த பெண்ணைவிட, ஆரோக்கியமான, நன்கு இளைப்பாறிய தாயாக இருப்பது மிகவும் நல்லது.

3. குற்றவுணர்வு விடப்போவதில்லை

படத்தின் காப்புரிமை Getty Images

மருத்துவமனையில் முதல் முறையாக பால்பொடி கலக்கி வழங்கப்பட்டபோது, எனது குழந்தை நன்றாக தூங்கியது. அந்த தருணம் பல மணி நேரங்கள்போல தோன்றியது.

எப்போதாவது நான் தூங்க வேண்டுமென்றால், தாய் பாலூட்டாமல் பால்பொடி கலக்கி ஊட்ட வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.

இதன் காரணமாக, மிக விரைவாக குற்றவுணர்வு என்னை தொற்றிக்கொண்டது. பால்பொடி எனது குழந்தையின் வாயில் வெள்ளை நிற படிமத்தை விட்டு சென்றது.

துர்நாற்றம் அடித்தது, இயற்கைக்கு அப்பாற்பட்டதாக தோன்றியது. சுவையான, ஊட்டச்சத்து மிகுந்த தாய்ப்பால் ஊட்டுவதற்கு பதிலாக 'ஜங் புட்' ஊட்டுவது போன்ற உணர்வு ஏற்பட்டது.

நான் சற்று ஓய்வெடுத்தால், இந்த குற்றவுணர்வு என்னை பற்றிக்கொள்ளும். "நான் இன்னும் கடினமாக முயன்றிருக்க வேண்டும். எனக்கு இந்த கூடுதல் நேர தூக்கம் வேண்டாம்" என்று உணர்வேன்.

இந்த குற்றவுணர்வு என்னை விட்டு போவதில்லை என்பதை நான் அறிந்திருக்க வேண்டும்.

குற்றவுணர்வை அனுபவிப்பதை தவிர வேறு வழியில்லை. பொறுப்புணர்வுள்ள பெற்றோருக்கு கிடைக்கின்ற சாபம் இது. ஆனால், கெட்ட பெற்றோருக்க கிடைப்பது அல்ல.

4. உதவிகள் கேட்டு பெற வேண்டும்

படத்தின் காப்புரிமை Getty Images

தாய் பாலூட்டுவது தொடர்பான மருத்துவம், கருவிகள் உள்ளிட்டவை பல மில்லியன் டாலர் பணம் புழங்கும் புழங்கும் தொழில். கிட்டத்தட்ட ஒவ்வொரு சிறிய சிக்கலுக்கும், கொஞ்சம் நிவாரணம் கிடைப்பதற்காக, உங்களுடைய பணத்தை செலவழிக்க செய்யும் தீர்வு வழிமுறைகள் பல தயாராக உள்ளன.

இத்தகைய தீர்வுகளை தேடி கொண்டிருந்தபோது, உள்ளூரில் இருந்த வணிகப் பேரங்காடியில் ஒரு பெரிய பகுதியே இதற்கென இருப்பதை கண்டறிந்தேன்.

ஆனால், அதிக அனுபவம் வாய்ந்த, நிபுணர்களிடம் சென்று உதவி பெறுவதே மிக முக்கிய தீர்வாக இருந்தது.

தாய்ப்பாலூட்ட போராடுவதில் நான் மட்டும் தனியாக இல்லை என்பதை அறிந்திருந்திருக்க வேண்டும். உதவிகள் உள்ளன. நீங்கள் போராடும்போது உதவியை கேட்டு பெற்றுக்கொள்வதே நீங்கள் செய்கிற சிறந்த செயலாக இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :