காஷ்மீரில் இணையதள முடக்கத்தை மீறி தகவல் பரிமாற்றம் நடப்பது எப்படி?

Kashmir படத்தின் காப்புரிமை Getty Images
Image caption (கோப்புப்படம்)

இணைய சேவை தடை செய்யப்படும் நேரத்திலும் தகவல் தொடர்பு செய்வதற்கு, சென்ட்ரல் சர்வர் இல்லாத செயலிகளை பயன்படுத்த வேண்டுமென காஷ்மீர் ஜிகாதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் இணைய சேவை முற்றிலும் தடை செய்யப்படும்போது, அதிலிருந்து தப்பித்து தொடர்புகொள்வதற்கான முயற்சி இதுவாகும்.

அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 370ன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் முழுவதும் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 4ம் தேதி இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் தொடர்புடைய ஜிகாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் இணைய செய்தி சேனல்கள் இது வரை எதையும் பதிவிடவில்லை. இணைய சேவை தடையால் இவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை இது காட்டுகிறது.

தொழில்நுட்ப நிறுவனங்களும், அரசுகளும், தங்கள் மீது எடுக்கும் கடும் நடவடிக்கையை தவிர்க்கவும், செய்தி தணிக்கையை தடுக்கவும் ஜிகாதிகளும் அவரது ஆதரவாளர்களும் சென்ட்ரல் சர்வர் இல்லாத செயலிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஃபயர்சேட்

பயனர்களால் பரிந்துரை செய்யப்படும் மிகவும் அத்தகைய பிரபலமானதொரு செயலி ஃபயர்சேட்.

மைய சேவையகம் இல்லாமல் அல்லது இணைய வசதி இல்லாமல் திறந்தவெளி (Mesh) வலையமைப்பு தொழில்நுட்பத்தில் இந்த செயலியை தங்களது செல்பேசியில் வைத்திருப்போரிடம் இது செயல்படுகிறது.

Image caption புளூடூத் மற்றும் வைபை வசதிகள் மூலம் செல்பேசிகளை ஃபயர்செட் இணைக்கிறது.

மைய சேவையகம் இல்லாத இந்த திறந்தவெளி வலையமைப்பை பெரிய குழு ஒன்று நடத்தி வருகிறது.

ஆனால் ஃபேஸ்புக், வாட்ஸாப் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை, ஒரு தனிப்பட்ட நிறுவனம் நிர்வகிப்பதோடு, சென்ட்ரல் சர்வரில் தரவுகள் சேமித்து வைக்கப்படுகின்றன.

அருகருகே வாழும் மக்கள் ஃபயர்சேட் செயலியைப் பயன்படுத்தி தங்களுக்கு இடையே செய்திகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்ப முடியும். ஆனால், செய்தி அனுப்புவோரும், செய்தியை பெறுவோரும் ஃபயர்சேட்-ஐ பதிவிறக்கம் செய்திருக்க வேண்டியது அவசியம்.

புளூடூத் மற்றும் வைஃபை வசதிகள் மூலம் இணைய வசதி இல்லாமல் ஆப்லைனில் தகவல் பரிமாற்றத்தை அனுமதிக்கும் இந்த செயலி, செல்பேசிகளை இணைக்கின்றன.

இரண்டு பேர் முதல் பத்தாயிரம் பேர் வரையான குழுவினர் இணைய வசதி இல்லாமல் இதனை பயன்படுத்தி கொள்ள முடியும்.

அண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதள பேசிகளில் சுமார் 70 மீட்டர் சுற்றளவில் இது செயல்படுகிறது. ஆனால், இந்த செயலியை அதிகமானோர் பயன்படுத்தினால், அதிக தூரத்திற்கு செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியும்.

இணைய வசதி கட்டுப்படுத்தப்பட்டு, செல்போன் இணைப்பு வசதி மட்டுப்படுத்தப்பட்ட நிலைமையை சமாளிக்க தைவான் மற்றும் ஹாங்காங் போராட்டக்காரர்களால் இந்த செயலி பயன்படுத்தப்பட்டது.

2014ம் ஆண்டு ஐ.எஸ் மிகவும் தீவிரமாக இயங்கி வந்த சில மாகாணங்களில் தீவிரவாதிகள் செய்திகளை பரிமாறி கொள்வதை தடுக்கும் பொருட்டு இணைய வசதியை முற்றிலும் இராக் அரசு தடை செய்தபோது, இந்த செயலி பரவலாக பயன்படுத்தப்பட்டது.

2014ம் ஆண்டு 'ஓபன் கார்டன்' என்ற நிறுவனம் ஃபயர்சேட்-ஐ வெளியிட்டது. இது இணைய வசதி இல்லாமல் செயல்படுவதோடு, செய்திகளை தணிக்கை செய்வதிலிருந்தும் இது பாதுகாக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

2015ம் ஆண்டு மறையாக்கம் செய்யாமல் தனிப்பட முறையில் மக்கள் செய்தி பரிமாறிக்கொள்ளும் வசதியை இந்த செயலி அறிமுகப்படுத்தியது.

காஷ்மீர் மக்களிடம் மிகவும் பிரபலமான இன்னொரு தளம் "ஸ்மாட்மெஷ்" என்பதாகும். இணைய வசதி அல்லது தொலைபேசி இணைப்பு எதுவும் இல்லாமல் திறந்தவெளி வலையமைப்பு தொழில்நுட்பத்தில் 'ஸ்மாட்மெஷ்' செயல்படுகிறது.

மைய சேவையகம் இல்லாத ஆப்-களில் ஐ.எஸ் சோதனை

ஐ.எஸ் ஊடகப் பிரவினரும், ஆதரவாளர் குழுக்களும் மைய சேவையகம் இல்லாத இணையதளங்களில் பல பரிசோதனைகளை நடத்தி வந்துள்ளன. ஐ.எஸ் குழுவின் பரப்புரைக்காக நீண்டகால மாற்றுத்தளம் ஒன்றை கண்டுபிடிப்பதற்கான முயற்சியாக இது அமைந்தது.

பதிவிடும் செய்திகளுக்கு எதிராக செயல்படுவதற்கு எந்த வழியும் இல்லாததால், சென்ட்ரல் சர்வர் இல்லாத இத்தகைய தளங்கள் ஐ.எஸ் ஊடக பிரிவினரை மிகவும் கவர்ந்தன.

படத்தின் காப்புரிமை Getty Images

இதன் வழியாக பரிமாறப்படுபவை அனைத்தும் பயனர் நடத்தும் சேவையகங்கள் அல்லது பயனர் சமூகம் முழுவதும் பரவலாக இருக்கும் சர்வர்கள் மூலமே நடக்கின்றன.

'ராக்கெட் சேட்' என்கிற தளமே ஐ.எஸ் சேனல்கள் பயன்படுத்துகிற முக்கிய தளமாகும். இதனை பயன்படுத்துவதன் மூலம் ஏழு மாதங்களுக்கு மேலாகியும் ஐ.எஸ் சேனல்கள் இன்னும் ஆன்லைனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குழுவும், அதன் ஆதரவாளர்களும், ஃபயர்சேட் பயன்படுத்துவதில்லை.

சமூக ஊடக ஜாம்பாவான்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் டெலிகிராம் போன்ற செய்தி சேவைகள் சென்ட்ரல் சர்வர் உடைய தரவு சேமிப்புகளை பயன்படுத்தி சேவை வழங்கி வருகின்றன. ஜிகாதிகளோடு தொடர்புடைய உள்ளடங்கங்கள் மற்றும் கணக்குகளை இலக்கு வைத்து நீக்கியும் வருகின்றன.

இணைய சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ள நிலையில் காஷ்மீர் மக்கள் தங்களுக்கிடையில் தகவல் பரிமாறிக்கொள்ள இந்த செயலிகளைப் பயன்படுத்துவதாகவும் தெரிகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :