'கார்டியடாக் அரெஸ்டால்' உயிரிழந்த சுஷ்மா ஸ்வராஜ் - இதய நோய் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

சுஷ்மா படத்தின் காப்புரிமை Reuters

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கார்டியாக் அரெஸ்ட் எனப்படும் இதய நிறுத்தம் ஏற்பட்டு, செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.

1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது.

நீண்ட நாட்களாக சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த சுஷ்மா ஸ்வராஜ், நேற்று திடீரென இதய நிறுத்தம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

கார்டியாக் அரெஸ்ட்(இதய நிறுத்தம்) என்றால் என்ன? எப்படி அது ஹார்ட் அட்டாக்கிலிருந்து (மாரடைப்பு) வேறுபடுகிறது?

ஹார்ட் (heart.org) இணையதளத்தின் தகவலின்படி, கார்டியாக் அரெஸ்ட் என்பது உடலில் எந்தவொரு எச்சரிக்கையையும் காட்டாமல் திடீரென்று ஏற்படுவது.

இதயத்தில் ஏற்படும் மின் இடையூறுகள்தான், பொதுவாக, கார்டியாக் அரெஸ்ட்டுக்கு காரணம். இந்த இடையூறு, இதயத் துடிப்பில் ஆதிக்கம் செலுத்தி, அதன் நிகழ்வுத் தன்மையில் குறிக்கிடுகிறது.

படத்தின் காப்புரிமை iStock

இது இதய ரத்த ஓட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி, மூளை, இதயம் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு ரத்தம் செல்வதை தடுக்கிறது.

கார்டியாக் அரெஸ்டால் பாதிக்கப்பட்டவர்கள், அடுத்த சில நொடிகளில் தங்கள் சுயநினைவை இழக்கிறார்கள்.

சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்காவிட்டால், கார்டியாக் அரெஸ்ட் சில விநாடிகளில் அல்லது சில நிமிடங்களில் மரணத்தை கொண்டு வரும்.

கார்டியாக் அரெஸ்ட்டால் ஏற்படும் மரணங்கள் தவிர்க்க முடியாததா?

அமெரிக்காவை சேர்ந்த மூத்த மருத்துவர் செளரப் பன்சால், பிபிசியிடம்,"இது சோகமான ஒன்று. பொதுவாக கார்டியாக் அரெஸ்ட் வரும் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள்" என்கிறார். "கார்டியாக் அரெஸ்டை மரணத்திற்கு, முந்தைய கடைசி கட்டம் என்று கூறலாம். இதன் பொருள் என்னவென்றால், இதயம் தன் துடிப்பை நிறுத்தி, மரணத்தை கொண்டுவருவது."

படத்தின் காப்புரிமை iStock

என்ன காரணத்தினால் ஏற்படுகிறது?

பன்சால் விளக்குகிறார், "இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுவாக பிரதான மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) இதற்கு காரணமாக இருக்கலாம்".

கார்டியாக் அரெஸ்ட்டுக்கு ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா?

பெரும் பிரச்சனை என்னவென்றால், கார்டியாக் அரெஸ்ட் எந்த அறிகுறிகளையும் காட்டாது. திடீரென்று ஒருவருக்கு ஏற்படும் என்பதுதான்.

இதயத்தில் மின் செயல்பாடுகள் மோசமடைந்து, இதய துடிப்பை நிறுத்தும்.

கார்டியாக் அரெஸ்ட்டுக்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக சில இதயம் சம்பந்தமான நோய்கள், கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும் சாத்தியத்தை அதிகப்படுத்தும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :