சந்திரயான் 2: விக்ரம் லேண்டரிடம் இருந்து தகவல்தொடர்பு துண்டிப்பு

சந்திரயான் 2 படத்தின் காப்புரிமை ISRO
Image caption சித்தரிப்புப்படம்

இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், சந்திரயான் 2 விண்கலத்தின் சிக்னல் துண்டிக்கப்பட்டுவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

முதல் கட்டத்தில் அதன் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக கூறிய அவர், பின்னர் லேண்டரில் இருந்து தரை கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு இழந்துவிட்டதாக அவர் கூறினார்.

இது குறித்த காரணங்களை இஸ்ரோ ஆராய்ந்து வருவதாக சிவன் மேலும் கூறினார்.

சந்திர மேற்பரப்பில் இருந்து 2.1 கிலோமீட்டர் தொலைவில் இருந்த நிலையில், விக்ரம் லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக சிவன் மேலும் தெரிவித்தார்.

"நான் உங்களுடன் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள்"

படத்தின் காப்புரிமை ANI

சந்திரயான் விண்கலத்தில் இருந்து வந்த தகவல் துண்டிக்கப்பட்டதை அடுத்து, இது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரோ அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

"நாம் இதுவரை செய்தது ஒரு சின்ன விஷயம் அல்ல. மிகப் பெரிய விஷயம். தைரியமாக இருங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள்" என்று பிரதமர் மோதி இஸ்ரோ அதிகாரிகளிடம் தெரிவித்தார். 

முன்னதாக, இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விண்களத்தில் இருந்து எந்த சிக்னல்களும் வரவில்லை என்பதால் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது.

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கிக்கொண்டிருக்கும் சந்திரயான் விண்கலத் தொகுப்பில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் என்ற தரையிறங்கு கலன் நிலவின் மேற்பரப்பில் சனிக்கிழமை அதிகாலை 1.30 முதல் 2.30 மணிக்குள் மெதுவாகத் தரையிறங்கும் என அந்த வரலாற்றுத் தருணத்துக்காக நாடே காத்திருந்தது.

இந்தத் தருணத்தை எதிர்நோக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்ளிட்ட, இந்தியாவின் விண்வெளி ஆய்வு சமூகம் ஆர்வத்தோடு காத்திருந்தது.

சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரலை காட்சிகளை பிபிசி தமிழ் பேஸ்புக் மற்றும் யூ டியூப் பக்கங்களில் நேயர்கள் காணலாம்.

1.58AMவிண்களத்தில் இருந்து எந்த சிக்னல்களும் வரவில்லை என்பதால் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் பதற்றம் நிலவுகிறது. 

Fine Breaking Phase செயல்பாட்டின் போது எந்த சிக்னலும் வரவில்லை. 

இதனையடுத்து இஸ்ரோ தலைவர் சிவன், பிரதமர் மோதியிடம் சென்று சூழ்நிலையை விளக்கினார். 

1:48 AMவிண்கலன் தரையிறங்கும் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது.

Rough breaking Phase என்று அழைக்கப்படும் இந்த தரையிறங்கும் செயல்பாட்டின் முதல் பகுதி வெற்றிகரமாக முடிந்தது.

1:38AM : விண்கலன் தரையிறங்கும் செயல்பாடு தொடங்கியது

விக்ரம் லேண்டரின் தரையிறங்கும் செயல்பாடு அதிகாலை 1:30 மணிக்கு தொடங்கியது. இது 15 நிமிடங்களுக்கு நடைபெறும்.

15 நிமிடங்கள் ஏன் முக்கியமானது?

நிலவில் வளிமண்டலம் கிடையாது. இதனால் லேண்டரை மெதுவாக தரையிறக்க பாராசூட்டை பயன்படுத்த முடியாது.

அதனால் இந்த எரிபொருளை பயன்படுத்தி சமநிலையில் தரையிறங்குவதுதான் ஒரே வழி.

அதாவது, லேண்டர் அதனுடைய சொந்த ராகெட் இன்ஜின்களை பயன்படுத்தி அதன் வேகத்தை சீராக குறைக்கும்.

நிலவின் மேற்பரப்பை நெருங்க நெருங்க, கிடைமட்டமாக லேண்டர் நகர்ந்து கொண்டே இருக்கும்.

நிலவின் லேண்டர் தரையிறங்கும் அந்த தருணத்தில், ராக்கெட் இன்ஜின்கள் நகர்வை நிறுத்தி, அதே சமயத்தில், இறக்கத்தின் வேகத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.

இதற்கு பெயர்தான் "சாஃப்ட் லேண்டிங்".

1.24 AM :  இன்னும் சில நிமிடங்களில் சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோதி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு தற்போது வந்துள்ளார். 

12:55 AM : இஸ்ரோ அமைப்பில் என்ன நடக்கிறது?

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ அமைப்பில் தரையிறங்கும் தருணத்துக்காக இத்திட்ட பணியாளர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் காத்து இருக்கிறார்கள்.

சந்திரயான் ஏவப்பட்டு இன்றுடன் 48 நாட்கள் முடிவடைந்திருக்கிறது.

அதிகாலை 1:40 - 2:00 மணிக்குள் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோதி

சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் வரலாற்று தருணத்தை காண பெங்களூருவில் உள்ள இஸ்ரோ அமைப்புக்கு பிரதமர் மோதி சென்றுள்ளார் அவருடன் சேர்ந்து 60 குழந்தைகளும் இந்த நிகழ்வை காண உள்ளனர்.

நிலவில் இந்தியாவின் முத்திரை

நிலவில் தரையிறங்க உள்ள ரோவர் ஊர்தியில் அசோக சக்ரம் மற்றும் இஸ்ரோவின் முத்திரைகள் இடம் பெற்றுள்ளன. அதனால் அங்கு பயணிக்கும்போது, இந்தியாவின் தடத்தை ரோவர் விட்டுச் செல்லும்.

12:05 AM உலகின் முக்கிய பிரபலங்கள் இந்தியாவுக்கு வாழ்த்து

சந்திரயான் 2 திட்டத்தின் விக்ரம் லாண்டர் நிலவில் தரையிறங்க உள்ள நிலையில், உலகின் முக்கிய பிரபலங்கள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் ஆகியோரும் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

12:00 AM இந்திய அளவில் ட்ரெண்டாகும் #Chandrayaan2

சந்திரயான் 2 விண்கலம் ஒரு சில மணி நேரங்களில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக்காண பலரும் ஆவலாக உள்ள நிலையில் #Chandrayaan2 என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது

'சாஃப்ட் லேண்டிங்' - கடைசி 15 நிமிடங்கள் ஏன் முக்கியமானது?

சந்திரயான் நிலவு திட்டத்தில், விக்ரம் தரையிறங்கும் கலன் நிலவின் மேற்பரப்பில், தானே நிலைநிறுத்திக் கொள்ளும் தருணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

தரையில் இருந்து எந்த கட்டுப்பாடும் இல்லாமல், விக்ரம் கலன் அதுவாகவே வழிநடத்திக் கொள்ளும் அந்தத் தருணம், "படபடப்பான 15 நிமிடங்கள்" என அவர் விவரிக்கிறார்.

நிலவில் தரையிறங்குவது என்பது கடினமானதாக இருக்கலாம்.

நிலவில் வளிமண்டலம் கிடையாது. இதனால் லேண்டரை மெதுவாக தரையிறக்க பாராசூட்டை பயன்படுத்த முடியாது.

அதனால் இந்த எரிபொருளை பயன்படுத்தி சமநிலையில் தரையிறங்குவதுதான் ஒரே வழி.

அதாவது, லேண்டர் அதனுடைய சொந்த ராகெட் இன்ஜின்களை பயன்படுத்தி அதன் வேகத்தை சீராக குறைக்கும்.

நிலவின் மேற்பரப்பை நெருங்க நெருங்க, கிடைமட்டமாக லேண்டர் நகர்ந்து கொண்டே இருக்கும்.

நிலவின் லேண்டர் தரையிறங்கும் அந்த தருணத்தில், ராக்கெட் இன்ஜின்கள் நகர்வை நிறுத்தி, அதே சமயத்தில், இறக்கத்தின் வேகத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.

இதற்கு பெயர்தான் "சாஃப்ட் லேண்டிங்".

இந்தியாவின் சந்திரயான் 2 திட்டம்

ஜூலை 22ம் தேதி சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் சந்திரயான் வின்கலத் தொகுப்பு ஏவப்பட்டது.

முதலில் புவி சுற்றுவட்டப் பாதையை அடைந்து அதில் சுற்றிக் கொண்டிருந்த சந்திரயான் 2, பிறகு அதில் இருந்து விடுபட்டு நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு மாறிச் செல்லும் பயணத்தைத் தொடங்கியது. பிறகு அது நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. நேரடியாக நிலவை நோக்கிப் பயணிக்காமல் இப்படி சுற்றுவட்டப் பாதையில் பல வாரங்கள் எடுத்துக் கொண்டு பயணிக்கும் தொழில்நுட்பம், எரிபொருளை மிச்சப்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது என்பது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ-வின் கருத்து.

சந்திரயான் விண்கலத் தொகுப்பு, ஒன்றுக்குள் ஒன்று அடங்கிய மூன்று பாகங்களை உடையது. எல்லாவற்றையும் உள்ளடக்கிய சுற்றுவட்டக் கலனில் இருந்து பிரிந்த விக்ரம் என்று பெயர் சூட்டப்பட்ட தரையிறங்கு கலன் 'மென் தரையிறக்கம்' மூலம் நிலவைத் தொடும். அதன் பிறகு, விக்ரம் கலனில் இருந்து பிரக்யான் என்று பெயர் சூட்டப்பட்ட ஆய்வு ஊர்தி வெளியேறி நிலவின் தரைப் பரப்பை ஆராயும்.

விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கும் கடைசி 15 நிமிடங்கள் தொழில்நுட்பரீதியாக மிக முக்கியமான கட்டம் என்று கூறப்படுகிறது.

சந்திரயான் 2: இந்தியாவுக்கு இதனால் என்ன பயன்?

இந்தியாவின் கொடியை சந்திரயான் கொண்டு சென்று நிலவில் இறங்குவதால் சிறப்பு பெறுகிறது. இந்தியாவின் பெருமையாகவும் இது கருதப்படுகிறது.

செவ்வாய் கிரகம், சிறு கிரகங்களில் விண்கலனை தரையிறங்க செய்கின்ற மற்றும் நிலவுக்கு மனிதனை அனுப்புகிற தொழில்நுட்ப வாய்ப்புகளை இது வழங்குவதாக அமையும்.

இந்தியா நிபுணத்துவம் பெற விரும்புகிற முக்கிய தொழில்நுட்பம் இதுவாகும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: