இனி நிலவில் மனிதர்கள் ஓட்டும் வாகனம் இப்படித்தான் இருக்கும்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மனிதர்கள் நிலவில் ஓட்டப்போகும் வாகனம் இப்படித்தான் இருக்கும்

நிலவுக்கு முதன்முதலில் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் அதன் கரடு முரடான மேற்பரப்பில் பிரத்யேக வாகனம் ஒன்றில் சிரமத்துடன் பயணம் செய்தனர்.

அடுத்த முறை நிலவுக்கோ, செவ்வாய் கிரகத்துக்கோ நாம் செல்லும்போது, நமது வாகனங்களும் கொஞ்சம் அதைப் போலவேதான் இருக்கும்.

அந்த வாகனம் 6 சக்கரங்களுடன், எல்லாமே தனித்தனியாக திரும்பக் கூடியவையாக இருக்கும். நிலவின் தரைபரப்பில் விரைவில் தவழும் புதிய வாகனத்துக்கு, நாசா தயாரித்துள்ள முன்மாதிரி வடிவமைப்பு இது.

"நாங்கள் அடுத்த வாகனத்தை வடிவமைத்து வருகிறோம். அடுத்த வாகனம் 2023ல் மேலே செல்லும். அது மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அது அப்பல்லோ போல இருக்கும்'' என்று கூறுகிறார் நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி வாகன தலைமைப் பொறியாளர் லூசியென் ஜன்கின்.

வாகனத்தை செலுத்துவதை முடிந்த வரை பாதுகாப்பானதாக ஆக்குவதற்கு, பளுவை தாங்கும் திறன் எல்லா நேரங்களிலும், அனைத்து சக்கரங்கள் மீதும் சம அளவில் பகிர்ந்திருக்கும். அதாவது சற்று கடினமான தரைபரப்பிலும் வாகனம் செல்ல முடியும்.

எதிர்கால விண்வெளி பயணங்களில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களைப் பரிசோதிப்பதற்காக, ஏற்கெனவே இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரே சமயத்தில் 4 விண்வெளி வீரர்கள் 2 வாகனங்களை, 2 வாரங்களுக்கு வெளியில் எடுத்துச் செல்கிறார்கள். அதிலேயே வாழ்வது, பணியாற்றுவது, அவர்களுக்கு தேவைப்படும் உணவின் அளவு, அவர்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றை அறிய இது உதவுகிறது.

நிலவின் தூசி மிகவும் கடினமாகவும், அடர்த்தியாகவும் இருக்கும் என்பதால் நிலவின் தரைபரப்பில் வாகனத்தின் இயக்கம் மெதுவாக, சீரான வேகம் கொண்டதாக இருக்கும். அது உண்மையில் கடினமான சூழல் அமைப்பாக இருக்கும்.

``அப்பல்லோவில் இருந்து நாங்கள் உறுதியாகத் தெரிந்து கொண்ட விஷயங்கள் அவை. ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து கீழே போட்டு, காலால் மிதித்து நொறுக்கினால் அது எப்படி கூர்மையான துண்டுகளாக இருக்குமோ, அதைப் போல நிலவின் பரப்பு இருக்கும். ஏனெனில் அங்கு கூர்மையை மழுங்கச் செய்யும் வகையில் அரிப்பு ஏற்படுவதற்கு காற்று இல்லை'' என்று கூறுகிறார் நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி வாகன தலைமைப் பொறியாளர் லூசியென் ஜன்கின்.

"அதனால் தான் வாகனங்களின் வெளிப்புறத்தில், விண்வெளி வீரர் உடையுடன் சூட்-போர்ட்களும் சேர்க்கிறோம். எனவே, இதன் பின்னால், அதன் முனையில் இருந்து வாகனத்துக்குச் செல்வதற்கான கதவு இருக்கும். எனவே வாகனத்தின் கதவை நீங்கள் திறந்தால், உங்களுடைய உடையின் பின்பகுதியில் இருப்பீர்கள். அதில் இணைத்துக் கொள்ளலாம்.

எனவே, இப்போது உங்களுடைய விண்வெளி உடையும், உங்கள் கேபினும் அழுத்தம் ஏற்பட்டதாக இருக்கும். அதை நீங்கள் சீல் செய்து கேபின் கதவை மூடிவிடுவீர்கள். நான் இங்கேயே தொடர்ந்து இருக்கும் போது நீங்கள் விண்வெளி உடையில் செல்வீர்கள். நாங்கள் கேபினில் அழுத்தத்தைக் குறைக்க வேண்டியது இல்லை'' என்று அவர் மேலும் கூறுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்