இஸ்ரோவில் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சித் திட்டம் : எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

இஸ்ரோ

பட மூலாதாரம், ISRO

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் பயிற்சித் திட்டம் 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 2020 ஆண்டிற்கான பயிற்சி திட்டத்தில் கலந்துகொள்வதற்காக மாணவர்களுக்கு இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது.

விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் ஆராய்ச்சி குறித்து இளைய தலைமுறையினரிடம் ஆர்வத்தை தூண்டுவதே இந்த பயிற்சி திட்டத்தின் நோக்கமாகவுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் 3 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எட்டாம் வகுப்பு படித்து முடித்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இந்த பயிற்சி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். எட்டாம் வகுப்பில் மாணவர்களின் கல்வித்திறன், அடிப்படை அறிவியல் அறிவு, ஆர்வம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த பயிற்சி வகுப்புகள் 2020 மே மாதத்தில் இரண்டு வாரங்கள் நடைபெறும். இந்த பயிற்சியில் விஞ்ஞானிகள் தங்களின் அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்துக்கொள்வார்கள், ஆய்வு கூடங்களை காண மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மேலும் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாட வாய்ப்பு மற்றும் செய்முறை பயிற்சிகள் அளிக்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புக்காட்சி

இன்று பிப்ரவரி 3ம் தேதியில் இருந்து மாணவர்கள் இந்த பயிற்சி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இஸ்ரோ வலை தளத்தில் இருந்து விண்ணப்பிக்கலாம். குறிப்பாக கிராமப் பகுதியில் இருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அகமதாபாத், பெங்களூரு, ஷில்லாங் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள இஸ்ரோ ஆராய்ச்சி நிலையங்களில் ஏதேனும் ஒன்றுக்கு அனுப்பப்படுவார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: