பனிமனித நட்சத்திரம்: சூரியனைவிட பெரிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு - சுவாரஸ்ய பகிர்வு மற்றும் பிற செய்திகள்

பனிமனித நட்சத்திரம்: சூரியனைவிட பெரிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு - சுவாரஸ்ய பகிர்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சித்தரிப்புக்காக

பனிமனித நட்சத்திரம்

சூரியனைவிடப் பெரிய பனி மனிதன் போன்ற உருவில் உள்ள நட்சத்திரமொன்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது அளவில் சூரியனைவிடப் பெரிதாக இருந்தாலும் சுற்றளவில் பூமியின் அளவைவிடக் குறைவு.

பட மூலாதாரம், UNIVERSITY OF WARWICK/MARK A. GARLICK

குள்ள மனிதன் போன்ற இரண்டு நட்சத்திரங்களின் இணைப்பினால், பனிமனிதன் போன்ற தோற்றத்தில் இந்த நட்சத்திரம் உருவாகி உள்ளதாகக் கூறுகிறார்கள் அறிவியலாளர்கள். நட்சத்திரம் வெடிக்கும் போது பொதுவாக விரிவடையும், அப்போது இந்த இணைப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நட்சத்திரத்துக்கு WDJ0551+4135 என்று பெயரிட்டுள்ளனர்.

"விடுதலைப் புலிகள் சகோதரப் படுகொலைகள் மூலமே ஒற்றை இயக்கமாயினர்"

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் - பல ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்தன என்றும், பின்னர் சகோதரப்படுகொலைகள் மூலமாகவே ஒரே இயக்கம் தலையெடுத்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊட்டி மலை ரயில் சேவையின் கட்டணம் உயர்வு - மார்ச் 1 முதல் உயர்ந்தது

கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு இடையில் இயக்கப்படும் சுற்றுலா ரயில் சேவையின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழகத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தின் உதகை எனப்படும் ஊட்டி உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

`சுட்டு தள்ளு ` என கோஷம் எழுப்பியவர்கள் கைது

கொல்கத்தாவில் ஞாயிற்று கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேரணியின் போது சுட்டு தள்ளு என கோஷம் எழுப்பிய மூன்று பாஜக உறுப்பினர்களை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அமித் ஷா நடத்திய பேரணியில் கலந்து கொள்ள சென்ற போது இவ்வாறு கோஷம் எழுப்பியுள்ளனர்.

நிர்பயா பாலியல் வல்லுறவு: 4 குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறுத்திவைப்பு

நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வரை தூக்கிலிடும் உத்தரவை தேதி குறிப்பிடாமல் நிறுத்திவைத்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னதாக, நாளை (செவ்வாய்க்கிழமை) மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு இவர்கள் நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று மூன்றாவது முறையாக நீதிமன்றம் தேதி நிர்ணயித்திருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: