அண்டார்டிக்காவில் உள்ள உலகின் மிக பெரிய பனிப்பாறை உடையப்போகிறதா? மற்றும் பிற செய்திகள்

அண்டார்டிக்காவின் ஏ - 68 : உலகின் மிக பெரிய பனிப்பாறை உடையப்போகிறதா ?

பட மூலாதாரம், Getty Images

ஏ - 68 என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் மிக பெரிய பனிப்பாறையின் அளவு சற்று சிறிதாகி உள்ளது. அண்டார்டிகாவில் 2017ஆம் ஆண்டு முதல் தனியே உடைந்து மிதந்து வரும் இந்த பனிப்பாறையின் மொத்த பரப்பளவு சுமார் 5,100 சதுர கிலோமீட்டர் என்று கணிக்கப்படுகிறது.

தற்போது இந்த பனிப்பாறை 175 சதுர கிலோமீட்டர் அளவு குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

பட மூலாதாரம், COPERNICUS/ESA/SENTINEL-1

அண்டார்டிக் தீபகற்பத்தில் இருந்து தற்போது வடக்கு நோக்கி, வெப்பநிலை அதிகம் இருக்கும் நீர் பகுதிக்கு இந்த பனிப்பாறை நகர்ந்து செல்கிறது. கடலின் சீற்றத்தால் தெற்கு அட்லாண்டிக் பகுதிக்கு இது இழுத்த செல்லப்படும் என்று தெரிகிறது.

உலகின் மிகப்பெரிய பனிப்பாறையின் அழிவு தொடங்கிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் செனிடெல் 1 செயற்கைக்கோள் மூலம் இந்த பனிப்பாறையின் புகைப்படம் கிடைத்துள்ளது. அதில்தான் இதன் அளவு குறைந்ததும் தெரிய வந்துள்ளது.

''மிக விரைவில் இந்த பனிப்பாறை துண்டு துண்டாக உடையும் என்று தோன்றுகிறது. ஆனால் அந்த துண்டுகள் உருகாமல், பல ஆண்டுகள் தண்ணீரில் மிதக்கும்'' என்கிறார் சுவான்சி பல்கலைக்கழகத்தின் ஆராச்சியாளர் பேராசியர் ஆட்ரியன் லக்மேன்.

கொரோனா வைரஸ் காரணமாக மோசமான பட்டினியை சந்திக்கவுள்ள 5 நாடுகள் இவைதான்

பட மூலாதாரம், Getty Images

உலகம் முழுவதும் உணவுத் தேவை காரணமாக அல்லல்படும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு மடங்காகலாம் என்கிறது அந்த அமைப்பு.

2019ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் மோசமான பட்டினி சூழலில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 13.5 கோடி. கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை தடுப்பதற்காக பல்வேறு உலக நாடுகள் முடக்க நிலையை அறிவித்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 26.5 கோடியாக அதிகரிக்கலாம் என்று உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு: ரமலான் மாதத் தொடக்கத்தில் மசூதி செல்லாத முஸ்லிம்கள்

பட மூலாதாரம், Getty Images

அரபு நாடுகளில் இஸ்லாமியர்களின் புனித காலமான ரமலான் மாதம் இன்று முதல் தொடங்குகிறது.

இந்நிலையில் பல இஸ்லாமிய நாடுகள் தங்களது பொது முடக்க நிலையை ஓரளவுக்கு தளர்த்தியுள்ளன.

இருப்பினும் தொடரும் சில கட்டுப்பாடுகளால், பல இஸ்லாமியர்களால் தொழுகைக்கு மசூதிக்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. பலநாடுகள் நேரலை மூலமாக தொழுகைகளை நடத்த முடிவெடுத்துள்ளன.

"இந்தியாவில் எந்த திட்டமும் இல்லாமல் முடக்கநிலை அறிவிக்கப்பட்டது" - ஸ்டீவ் ஹான்கே

பட மூலாதாரம், Getty Images

ஸ்டீவ் ஹான்கே அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு பொருளாதாரத்தின் பேராசிரியராகவும், ஜான் ஹாப்கின்ஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் அப்ளைடு எகனாமிக்ஸ், குளோபல் ஹெல்த் மற்றும் பிசினஸ் எண்டர்பிரைஸ் ஸ்டடீஸின் நிறுவனர் மற்றும் இணை இயக்குநராகவும் உள்ளார். உலகின் முன்னணி பொருளாதார நிபுணரான பேராசிரியர் ஸ்டீவ், பிபிசி செய்தியாளர் ஜுபைர் அகமதுவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலை, மோதி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.

கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்த்துப் போராட இந்திய அரசு தயாராக இருக்கவில்லை என்று பிரபல பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான ஸ்டீவ் ஹான்கே கூறுகிறார். பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "இந்த தொற்றுநோய்க்கு எதிரான போருக்கு இந்தியா தயாராக இல்லை. இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றை பரிசோதிக்கும் அல்லது சிகிச்சை அளிக்கும் திறன் குறைவாக உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

ரெம்டிசிவிர்: முதல் மருத்துவ பரிசோதனையில் தோல்வியடைந்த கொரோனா மருந்து?

பட மூலாதாரம், Reuters

கொரோனா சிகிச்சையில் சிறப்பாக செயல்படக்கூடும் என கருதப்பட்ட ஆண்டிவைரல் மருந்து, தனது முதல் சோதனையில் தோல்வியை தழுவியுள்ளது.

ரெம்டிசிவிர் என்னும் அந்த மருந்து கோவிட்-19 தொற்றை குணப்படுத்தும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் உலக சுகாதார நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ஆவணம் ஒன்றின் மூலம் ரெம்டிசிவிர் என்னும் மருந்தை கொண்டு நடத்தப்பட்ட சோதனை தோல்வியில் முடிந்தது தெரிய வந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: