ஜூபிடர் கிரகம்: புதிய புகைப்படத்தை உருவாக்கிய வானியலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images
ஜூபிடர் (வியாழன்) கிரகத்தின் புதிய புகைப்படத்தை வானியலாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
ஹவாய் தீவில் உள்ள ஜெமினி வட தொலைநோக்கி மூலம் இன்ஃப்ராரெட்டில் இந்த புகைப்படத்தைப் பிடித்துள்ளனர்.
லக்கி இமேஜின் என்ற தொழில்நுட்பம் மூலம் இந்த தரத்தில் புகைப்படத்தை உருவாக்கி உள்ளனர்.
பட மூலாதாரம், GEMINI OBSERVATORY/M.H.WONG ET AL
ஜூபிடர் கிரகம்: புதிய புகைப்படத்தை உருவாக்கிய வானியலாளர்கள்
அதாவது பல புகைப்படங்களை எடுத்து, அது அனைத்தையும் ஒன்றாக இணைத்து இந்த படத்தை ஜுபிடர் கிரகத்தின் படத்தை உருவாக்கி உள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஜுபிடர் (வியாழன்) கிரகம் அதன் தலையில் ஒரு ஒளிக்கிரீடத்தை சுமந்து கொண்டிருப்பது போல் தோன்றியது.
ஹபிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜூபிடரின் துருவங்களில் காணப்படும் அரோரா என்ற ஒளிக்கோவை அழகாக பிடிக்கப்பட்டிருந்தது.
இந்த ஒளிக்கோவைகள் அதிக சக்தியுள்ள அணுவை விட சிறிய துகள்கள் விண்வெளியில் பறக்கும்போது அவை இந்த கிரகத்தின் காந்தப் புலத்தால் பிடிக்கப்பட்டு கிரகத்தின் வட அல்லது தென் துருவத்துக்கு தள்ளப்படும்போது நிகழ்கின்றன.
சூரியக் குடும்பத்தில் மிகப்பெரியதான ஜூபிடர், பூமியைவிட ஆயிரம் மடங்குக்கும் அதிக கொள்ளளவு கொண்டது. சூரியனிடமிருந்து ஐந்தாவது வளையத்தில் இருக்கும் ஜூபிடரில் திடமான மேற்பரப்பு இல்லாமல், பிரதானமாக ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களையே கொண்டதால், இது வாயுக்கிரகம் என்று அழைக்கப்படுகிறது.
திரவ நிலையில் உள்ள உலோகத்தன்மை வாய்ந்த ஹைட்ரஜன் இந்தக் கிரகத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த ஹைட்ரஜன் தான் ஜூபிடரின் தீவிரமான காந்தப் புலத்தை உருவாக்குவதாகக் கருதப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: