கொரோனா முடக்கநிலை: கணிதத்தை கண்டு அஞ்சாமல் அதோடு விளையாடுவது எப்படி? - ஆயிஷா நடராஜன் யோசனை

கொரோனா முடக்கநிலை: கணிதத்தை கண்டு அஞ்சாமல் அதோடு விளையாடுவது எப்படி? - ஆயிஷா நடராஜன் யோசனை

இது முடக்க நிலைக் காலம். பள்ளி எப்போது திறக்கப்படும் என்பதற்கான நிச்சயமான பதில் ஏதும் இல்லை. ஒரு வேளை பள்ளி தாமதமாகத் திறக்கப்பட்டால், பாடங்களின் அளவு குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது

இந்த நிலையில் கசக்கும் கணிதத்தை வீட்டில் இருந்தபடியே இனிக்கும் விளையாட்டாக மாற்றிக் கொண்டு மாணவர்கள் தாங்களே கற்பதற்கான யோசனைகளைத் தருகிறார் அறிவியல் எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராஜன்.

தமது 'ஆயிஷா' சிறுகதை மூலம் தமிழ்நாட்டு கல்விச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியவர் நடராஜன். கணிதத்தின் கதை, மலர் அல்ஜீப்ரா ஆகிய நூல்களை மாணவர்களுக்காக எழுதியவர், கொரோனா முடக்க நிலையில், கணிதம் பழகும் மனங்கள் முடங்கியிருக்க வேண்டியதில்லை என்கிறார்.

தயாரிப்பு: அ.தா.பாலசுப்ரமணியன், பிபிசிதமிழ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: