2012 விண்வெளி புகைப்பட விருதுகள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 அக்டோபர், 2012 - 16:36 ஜிஎம்டி

2012 விண்வெளி புகைப்பட விருதுகள்

 • பூமியும் வானமும் பிரிவு - ரியூனியன் தீவிலிருந்து மில்கீ வே அண்டத்தை நோக்கி லியூக் பெர்ரோட் எடுத்த படம். இது நிறைய பாராட்டுதல்களைப் பெற்றது.
 • இளம் விண்வெளி புகைப்படக் கலைஞர் விருது - நார்தன் லைட்ஸ் என்று சொல்லப்படும் துருவ ஒளி நடனம். 15 வயதேயான இந்தியாவின் ஜதின் பிரேம்ஜித் எடுத்தது. இப்படம் பெரிதும் பாராட்டப்பட்டது.
 • இளம் விண்வெளி புகைப்படக் கலைஞர்- நட்சத்திரத் தொகுதி பிரிவில் வெற்றி பெற்ற இப்படத்தை எடுத்துவர் கனடாவின் 15 வயதே ஆன ஜேக்கப் வன் கோரஸ்.
 • இளம் விண்வெளி புகைப்படக் கலைஞர் விருது - பூமியில் உயிர்களின் தோற்றம் பிரிவில் இந்த படம் பெரிதும் பாராட்டப்பட்டது. படத்தை எடுத்தவர் அமெரிக்காவின் 13 வயதான தாமஸ் சல்லிவன்.
 • வானமும் பூமியும் - விளக்கு வெளிச்சத்திலிருந்து விலகிய வானம் என்ற தலைப்பில் துருக்கியின் டுங்க் டெஸெல் எடுத்த படம் பாராட்டப்பட்டது.
 • சூரியக் குடும்பம் - சூரியக் குடும்பத்தின் கோள்களை குறிப்பாக வெள்ளி, செவ்வாய், சனி ஆகிய கிரகங்களை பிரிட்டனின் டேமியன் பீச் எடுத்தப் படமிது.
 • மக்களும் வான்வெளியும் - வெள்ளியும் ஜுபிடர் கிரகமும் ஒன்றோடு ஒன்று நெருங்கியிருப்பதைக் காட்டும் இப்பாத்தை எடுத்தவர் பிரான்ஸின் லொரண்ட் லெவெடெர். இப்படம் இப்பிரிவில் வெற்றி பெற்றது.
 • மக்களும் வான்வெளியும் பிரிவில் இரண்டாவது இடத்தில் வந்த படம் இது. யோஸ்மைட் பள்ளத்தாக்கிலிருந்து வானம். எடுத்தவர் அமெரிக்காவின் ஸ்டீவன் கிறிஸ்டென்சன்.
 • சூரியக் குடும்பம் பிரிவு - சூரியனைக் கடந்து வெள்ளிக் கிரகம் செல்லும் இப்படத்தை எடுத்தவர் ஆஸ்திரேலியாவின் பால் ஹேஸ். இப்படம் நிறைய பாராட்டுக்களைப் பெற்றது.
 • சூரியக் குடும்பம் பிரிவு - சூரியனை வெள்ளிக் கிரகம் கடப்பதைக் காட்டும் இப்படம் இப்பிரிவில் வெற்றி பெற்றது. படத்தை எடுத்தவர் பிரிட்டனின் கிறிஸ் வாரன்.
 • சிறந்த புதுமுகக் கலைஞர் பிரிவில் வெற்றிபெற்ற இப்படத்தை எடுத்தது ஹங்கேரியின் லொரண்ட் ஃபென்யெஸ். Elephant's Trunk with Ananas என்று சொல்லப்படும் விஷயத்தைக் காட்டும் படம் இது.
 • ரோபோவின் பார்வையில் பிரிவு - சூரியகாந்தி அண்டம் என்ற தலைப்பில் பிரிட்டனின் 12 வயது தாமஸ் ரீட் எடுத்தப் படம்.
 • தொலைதூரத்து விண்வெளி பிரிவில் இரண்டாம் இடத்தில் வந்த இப்படம் சிமெயிஸ் 147 சூப்பர்நோவாவின் எச்சத்தைக் காட்டுகிறது. படத்தை எடுத்தவர் அமெரிக்காவின் ரொகெலியோ பெர்னல் அண்ட்ரியோ.
 • தொலைதூரத்து விண்வெளி பிரிவில் வெய்ல் நெபியூலாவில் சூனியக் காரியின் துடைப்பம் என்ற பகுதியைக் காட்டும் இப்படத்தை எடுத்தவர் அமெரிக்காவின் ராபர்ட் பிராங்க்.
 • சூரியக் குடும்பம் பிரிவில் இரண்டாம் இடத்தில் பிரிட்டனின் டேமியன் பீச் எடுத்த செவ்வாய்க் கிரக புகைப்படங்கள் வந்திருந்தன.
 • தொலைதூரத்து விண்வெளி பிரிவில் பெர்ஸியஸ் நட்சத்திரத் தொகுதியில் ஏபெல் 426 என்ற இடத்தைக் காட்டும் விதமாக ராபர்ட் பிராங்க் எடுத்த படம் நிறைய பாராட்டுக்களைப் பெற்றது.
 • இளம் விண்வெளி புகைப்படக் கலைஞர் பிரிவில் நிலவின் மலைகளைக் காட்டும் விதமாக அமெரிக்காவின் 13 வயதான ஜேக்கப் மார்ச்சியோ எடுத்த படம் பாராட்டப்பட்டது.
 • சூரியக் குடும்பம் பிரிவில் சி2009 பி1 கர்ரட் என்ற வால் நட்சத்திரத்தை பிரிட்டனின் கிரஹாம் ரெல்ஃப் எடுத்த படம் பாராட்டப்பட்டது.
 • இளம் விண்வெளி புகைப்படக் கலைஞர் பிரிவில் இரண்டாம் இடத்தில் வந்த இந்தப் புகைப்படத்தை எடுத்தது கனடாவின் 15 வயதான லொரண்ட் ஜொலி கர். பகல் நிலவு என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட படம் இது.
 • தூரத்து விண்வெளி பிரிவில் சீஃபியஸ் நட்சத்திரத் தொகுதியில் 'ஆவி' போன்ற தோற்றத்தைக் காட்டும் இப்படத்தை எடுத்தவர் யுக்ரெய்னின் ஒலெக் பிரிஸ்கலொவ்.
 • வானமும் பூமியும் பிரிவு - பச்சை உலகம் என்ற தலைப்பில் இரண்டாம் இடத்தில் வந்த படம். படத்தை எடுத்தவர் நோர்வேயின் அரில்ட் ஹெய்ட்மன்.
 • வானமும் பூமியும் பிரிவு - நட்சத்திர பனிப்பொழிவு என்ற தலைப்பில் ஜப்பானின் மசஹிரோ மியாசகா எடுத்த படம்.
 • வானமும் பூமியும் என்ற பிரிவில் அமெரிக்காவின் மைக்கெல் ரொஸின்ஸ்க்கி எடுத்த படம். மிச்சிகனில் கோடைக்காலத்து வானம் என்பது படத்தின் தலைப்பு.
 • தொலைதூரத்து விண்வெளி பிரிவிலும் ஒட்டுமொத்த போட்டியிலும் வெற்றி பெற்ற இப்படத்தை எடுத்தது ஆஸ்திரேலியாவின் மார்டின் பியுக். சுழற்சி அண்டம் என்பது படத்தின் தலைப்பு.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.